image

உள்ளூர் மின்சாரம் விலை போகாதா?

கட்டுரை

Mar 17, 2016 No Comments 75 views

தமிழகத்தில் மின்பற்றாக் குறை யைப் போக்கிட வெளியி லிருந்து மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி மின்விநியோகம் செய்கின்றது. தமிழகத்திலேயே மின்சாரம் கிடைக்கும் போது ஏன் வெளியிலிருந்து வாங்க வேண்டும். வெளியிலிருந்து வாங்குவ தால் மின்கம்பியிழப்பு மற்றும் தொழில் நுட்ப இழப்பு எல்லாவற்றிற்கும் மின் வாரியம் தான் வாங்கும் மின்சாரத்திற்கான செலவில் சேர்த்து மின்கட்டணத்தை செலுத்தவேண்டி வரும்.தங்களது ஆட்சிக்காலத்தில் மின் சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப் பிற்கான காலம் இருந்தும் தங்களுடைய அறிவிப்பிலேயே மின்சாரம் உற்பத்தி செய்துவிட்டதாக அறிவித்தவர்கள் உள்ளூர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கோட்டைவிட்டது ஏன்? காரணமாகத்தான்.

ஒன்று வெளியி லிருந்து மின்சாரம் வாங்கினால் கிடைக்க வேண்டியது கிடைக்கும். இரண்டு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் உற்பத்தி நின்று போகும்பொழுது அதன் உதிரி பாகங்கள் வாங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சென்றால் அதிலும் 20 சதவீதம் செலுத்த வேண்டியவர்களுக்கு செலுத்திட வேண்டும்.அதற்காகத்தான் மின்வாரியம் உள்ளூர் மின்சாரத்தை பற்றி கவலை கொள்ளவில்லை.இங்கே மார்ச் மாதம் அரசுத் தரப்பில் கிடைத்த விபரத்தை பார்த்தாலே அது தெரியும். தமிழகத்தின் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்நிலையங்கள் எண் ணூர் 450மெகாவாட், தூத்துக்குடி 1050 மெகாவாட், மேட்டூர் 840சதவீதம், 600 மெகாவாட், வடசென்னை 630சதவீதம் 600 மெகாவாட் ஆக மொத்தம் 4660 மெகாவாட். எரிவாயு மின்சாம் 516 மெகா வாட், நீர் மின்சாரம் 2224 மெகாவாட். மத்திய அரசு 5429மெகாவாட் தனியார் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் அனைத்தும் சேர்த்து 18521மெகாவாட் என மின் தொகுப்பில் உள்ளது.

இந்த மார்ச் 3ஆம் தேதியன்று அரசின் விநியோகத்தகவல்படி 3.03 கோடி யூனிட்டுகள் செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் மட்டும் 6 கோடி யூனிட்டுகள் ஆகும். இதற்கு நாம் கொடுக்கும் விலை அதிக மாகும். வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் தமிழகம் வந்துசேரும்போது ஒருயூனிட் விலை எட்டு ரூபாய்க்கும் மேலாகி விடும்.இதே காலத்தில் தமிழகத்தில் மின்உற்பத்தி செய்யாமல் முடக்கி வைத் திருக்கும் மின்நிலையங்கள் அதன் மின்உற்பத்திதிறன் என்ன பார்ப்போம்.தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் ஏழில் நான்கிடமிருந்து கடந்த ஒரு வருடகாலமாக மின்சாரம் என்பது வாங்க வில்லை. அதற்கு காரணம் மெரிட் அன்ட் டெஸ்பாட்ச் ஆர்டர் அடிப்படையில் அதிக விலையாக இருப்பதன் காரணமாக வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது.அந்த நான்கு மின்நிலையத்தின் நிறுவுதிறன் 543 மெகாவாட் ஆகும். இதன்ஒப்பந்தக் காலம் இன்னும் முடியவில்லை. அடுத்து ஒரு தனியார் மின்நிலையம் பேசின்பாலத்தில் உள்ளது. அது ஜீஎம்ஆர் மின்நிலையம், அதன் நிறுவுதிறன் 196 மெகாவாட் ஆகும். இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது.இம்மின்நிலையங்கள் மின்உற்பத்தி இல்லாமல் மூடிக்கிடக்கிறது. அடுத்து மின்வாரியத்திற்கு சொந்தமான மின்நிலை யங்கள் தன் முழு மின்உற்பத்தி திறனை வெளிப்படுத்தாமல் உள்ளதன் மின்அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.எண்ணூர் அனல் மின்நிலையம் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யாமல்மிகையாக மின்சாரம் தமிழகத்தில் உள்ள தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

ராமநாதபுரத்தில் உள்ள வழுதூர் எரிவாயு மின்நிலையம் 187மெகாவாட்டில் 80 சதவீதம் மட்டும் உற்பத்தி என கணக்குஎடுத்துக்கொண்டால் ஒரு நாளில் 35.5 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி செய்திருக்கவேண்டும். ஆனால் உற்பத்திசெய்தது இருபது லட்சம் யூனிட்டுகள் மட்டுமே ஆகும்.தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமான கோவில் களப்பால் மற்றும் குத்தாலம் எரிவாயு மின்நிலையங்கள் 40 லட்சம்யூனிட்டுகள். உற்பத்தி செய்து இருக்கவேண்டும். அதற்குப் பதிலாக 20 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே உற் பத்தி செய்துள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தின் 600மெகாவாட் மின்நிலையம் தனது முழு மின் உற் பத்தியை செய்யாமல் 410 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியை செய் கின்றது. அது தனது முழுமையான மின்உற்பத்தியை செய்தால் அதன் மூலம்கூடுதலாக ஒரு 50லட்சம் யூனிட்டுகள் கிடைக்கும். இப்படி தமிழகத்தின் மின்வாரி யத்திற்கு சொந்தமான மின்நிலையங்கள் எண்ணூர் அனல்மின்நிலையத்தை தவிர இதரவைகள் இயங்கினால் தற்போது கிடைப்பதைக் காட்டிலும் கூடுதலாக 2 கோடி யூனிட்டுகள் கிடைக்கும்.டீசல்விலை குறைவாக உள்ள நிலையில் இந்த ஆட்சி வந்ததிலிருந்து மூடி வைத்துள்ள தமிழக மின்வாரியத் திற்கு சொந்தமான பேசின் பாலம் மின் நிலையம் 120மெகாவாட் இயக்கினால் ஒரு 20 லட்சம் யூனிட்டுகள் தினம் கிடைக்கும்.தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூடிவைத்துள்ளதை இயக்கினால் அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 கோடி யூனிட்டுகள்.

இந்த நான்கு மின்நிலையங்களிடமிருந்து மின்சாரம் வாங்கவில்லை என்றாலும் அம்மின் நிலையங்களுக்கு நிலைக்கட்டணம் என்ற மூலதனத்தின் தொகையை அளித்துக் கொண்டிருக்கின்றது மின்சார வாரியம். ஏன் மூடி வைத்துள்ள மின்நிலையத்திற்கு கட்டணம் செலுத்திட வேண்டும். இது திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். இது என்ன கொடுமை, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை முதலாளி களிடம் நோகாமல் எடுத்துக் கொடுக்கும் அவலம் தமிழகம் தவிர வேறு எங்கும் நடக்காது. ஒப்பந்த காலம் முடிந்த தனியாருக்கு சொந்தமான ஜீஎம்ஆர் மின்நிலையம் அரசே ஏற்று இயக்கினால் அதன் முலம் 40 லட்சம் யூனிட்டுகள் கிடைக்கும். இப்படி தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் மட்டும் 3 கோடி யூனிட்டுகள் ஆகும்.சுயதேவை மின்நிலையங்களின் உற்பத்தி 866 மெகாவாட் உள்ளது. அதற்குத்தேவையான எரிபொருள் தமிழக அரசுகொடுத்தால் மின்சாரம் 2 கோடி யூனிட்டுகள் கிடைக்கும். தமிழகத்தில்உள்ள சிறு புனல் மின்நிலையங்களின் உற் பத்தி 90 மெகாவாட் அளவிற்கு உள்ளது. அதன் இயக்கத்தை ஒப்பந்தக்காரர்களிடம் (அவுட் சோர்சிங்) அளித்து உள்ளதால் எந்த மின்நிலையமும் மின்உற்பத்தி செய்யவில்லை. அம்மின்நிலையங்கள் பழுதுபட்டால் மட்டும் மின்வாரியம் கவனிக்க வேண்டுமாம்.ஆக வெளியிலிருந்து வாங்கும் மின்சார அளவிற்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளதை தவிர்த்துவிட்டு தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றவேண்டும் என்பதற்காக வெளி யிலிருந்து மின்சாரத்தை வாங்குகின்றனர்.

இதில் ஆட்சியாளர்களுக்கு பலன் இருக்கின்றது.இது போக காற்றாலை மின்சாரம் வந்தால் லாபம்.தமிழக மின்சார வாரியம் வெளியி லிருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவு நாளொன்றுக்கு 6 கோடி யூனிட்டுகள் ஆகும்.இதுவும் நீண்டகால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம் என்ற அடிப்படையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கினாலும் மின் சாரத்தை கொண்டுவருவதற்கு ஏற்படும் மின்கம்பி இழப்பு மற்றும் தொழில்நுட்ப இழப்பு எல்லாம் இருக்கும். தமிழகத்தில் உள்ள மின்உற்பத்தியை வாங்கினால் இந்த இழப்பு குறையும்.

தமிழகத்தில் உள்ள மின்நிலையங்களை இயக்கிட ஏதாவது ஏற்பாடு இருந்ததா?ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் இருப்பதை முடக்கிவிட்டு தங்களது நலனுக்காக மின்வாரியத்தை கடனாளியாகவே வைத்திருப்பதில் முன்னணியில் நிற்கின்றார்கள். தேர்தலுக்காக அவசர அவசரமாக புதிய மின்திட்டங்களை அறி வித்து காணொளி காட்சி முலம் திறந்து வைத்து அதன் அடிக்கல் நாட்டப்பட்ட கற்கள் மட்டும் நிற்கவைக்கப்பட்டுள்ளன.

உப்பூர் அனல் மின்நிலையம் அமைத்திட ரூ.12,498 கோடி மதிப்பீட்டில் பிப்.2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் அனல் மின்நிலையம் 800 மெகாவாட் சூப்பர் கிரிடிகல் அனல் மின்நிலையம் மார்ச் முதல் வாரத்தில் அறி விக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே சினிமாவில் வரும் காட்சிகள் போல் மின்சாரம் வந்து விடுமா? கோடையில் கடுமையான மின்பற்றாக்குறைதான் வரும்.

கே.விஜயன்

Leave a comment