Communist Party of India  (Marxist Leninist) Central Committee Statement:

Communist Party of India  (Marxist Leninist) Central Committee Statement:

A futile Exercise at the Expense of People
The Prime Minister Narendra Modi with a stroke of pen withdrew 85 per cent in value of the currency 
from circulation which is around Rs.15 lakh crores. 
This announcement of demonitisation of
Rs.500 and Rs.1000 currency notes is not going to yield the declared result of curbing black money, fake notes, 
corruption and finances to terrorists.
These declared objectives are only a disguise to conceal from the people 
the real intentions – covering up its failure in economic front, bail out of banking system that is facing liquidity crisis, 
and obtaining political mileage.

It is yet another measures to lay the burden of crisis on the backs of people and saving the real culprits – big bourgeoisie, 
big business, 
money-launderers etc.

For these ostentatious purposes the BJP government put more than a billion people to great hardship.

The people’s lives came to a grinding halt with total disruption of payments and settlements.

The long 
waiting lines at the banks testify 
that daily wage earners, 
fishermen, 
toiling women, 
small businessmen, 
small traders and hawkers held their hard earned money in demonitised notes.

Unimaginable hardships 
are being faced by nearly 80% of Indians 
who don’t have access to banks, 
or don’t depend on banks 
for their daily lives.

The ordinary man is denied daily wage, 
denied access to his savings and 
denied basic needs of food 
which he buys every day.

The peasants having a bank account 
go to bank to exchange 
the notes in their hand, 
their money will be sucked into the loan 
they owe to the bank.

In a week, 
as the press reports reveal, 
45 deaths occurred 
due to non-availability of medical services 
for lack of currency.

The action by the government sans genuineness as the government and RBI surely knows that demonitisation will not make any dent on black money because its sources of generation left untouched; 
they are under- or over-invoicing, 
non-authentication of capital deployment and tax evasion.

The BJP government wants the people to believe that black money is stashed in bath rooms and in pillows, 
which it knows is not the reality.

Only 5 per cent of the black money is held in currency notes 
while most of it held in benami assets.

During the elections, 
Modi made a promise to bring black money stashed in foreign banks and deposit 
it to the tune of Rs.15 lakh for every family.

Nothing happened in this regard, 
except giving amnesty to tax evaders, 
who were assured through this scheme to have good sleep even after continue to evade taxes 
until another amnesty scheme is announced. 

The CPI(ML) demands 
that the government make public and 
take action on those 
who held undeclared bank accounts 
in tax heavens and those refusing 
to repay giant loans 
taken from the nationalized banks, 
if it really committed to curb the black money.

The people are seeing through this game. 
They are determined not to be duped 
by these fake exercises and 
they will fight against the exploitation and attacks on their lives.

                         #Viswam. 
                         #General secretary 
                         #Central_Committee_CPIML
                           19-11-2016
image

Class struggle ஆங்கில மாத இதழின் கட்டுரை. தமிழில்: தோழர்.கோவை ஈஸ்வரன்

image

[பேராசிரியர் தோடா ஜோதி ராணி, காகதிய பல்கலைக் கழகம், வாரங்கல்
-தெலுங்கானா-]
Class struggle ஆங்கில மாத இதழின் கட்டுரை.
தமிழில்:
தோழர்.கோவை ஈஸ்வரன்

விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை நோக்கிய இயக்கம் தற்பாேது இருப்பில் உள்ள உயர் கல்வியின் இயல்பு, வகை மாதிரி, கிடைக்த்தக்க நிலை ஆகியவற்றுடன் வலிமையான முறையில் தொடர்பு கொண்டதாகும்.சமூக வளர்ச்சியை அடைவதிலும், சமூக நீதியை அடையப் பெறுவதிலும் இது மூலயுக்தி ரீதியான பாத்திரத்தை வகிக்கிறது. மேலும் உயர் கல்வி நிறுவனங்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் அறிவிற்கான மையங்களாகவும், மானுட நாகரீகத்தின் முன்னாேடிகளாகவும் அறியப்படுபவை ஆகும்.எனவே அறிவைக் கற்றுக் கொடுப்பதாேடு மட்டும் அவை தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அவைகள் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடுதலை, சமத்துவம், சகாேதரத்துவம், சமூக நீதி போன்ற குறிக்காேள்களை அடையப் பெறுவதற்கான நேர்மை வாய்ந்த, தீவிரமான விவாதங்களைத் தெளிவாக முன் வைக்கின்ற வெளியாகத் திகழ வேண்டும். பல்கலைக் கழகங்களின் முதன்மையான செயல்பாடு பன்முகத் தன்மையை (வேற்றுமைகளைப்) பாதுகாக்கக் கூடியதாகவும் வர்க்கம், சாதி, மதம், பிரதேசம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலிருந்து தோன்றுகின்ற பாகுபடுத்தல், சுரண்டல், ஒடுக்குமுறை, வன்முறை போன்ற மனிதத் தன்மையற்ற சக்திகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வினாத் தொடுப்பவையாகவும், கூர்மையாக ஆய்வு செய்பவையாகவும் இருக்க வேண்டும். மனிதத் தன்மையும் பண்பும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியமைக்கின்ற போக்கை துரிதப்படுத்துவதில் முக்கியத்துவமுள்ள பாத்திரத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் உயர்கல்வியின் நிலையும் தகுதியும் தற்பாேது இந்தியாவில் எவ்வாறு உள்ளது?

வளர்ந்துவரும் நாடுகளின் சமூகப் பொருளாதார, அரசியல், கலாச்சாரக் கட்டமைப்புகளுக்கு கட்டளை இடுகின்ற, வழிநடத்துகின்ற உலகமயமாதல் என்ற தற்பாேதைய பின்னணியில் இந்தியாவில் உயர்கல்வியின் நிலைமை எவ்வாறு உள்ளது ?
எவ்வாறு கல்வித்துறையானது கார்ப்பரேட் முதலீடுகளின் தேவைகளுக்குப் பொருத்தமான முறையில் வடிவமைக்கப்படுகிறது?
இந்தப் போக்கை உருவாக்கி நிலை நிறுத்துவதில் சர்வதேச அழுத்தத்தின் குறிப்பாக உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றினுடைய பாத்திரம் என்ன?இந்தப் போக்கை பலப்படுத்துவதற்காக நமது தேசியக் கல்விக் கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள தீவிரமான மாற்றங்கள் யாவை? மனித விழுமியங்களைச் சீரழிப்பதை நோக்கி இது எவ்வாறு கொண்டுவிடுகிறது?இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும். நமது தற்பாேதைய கல்வி அமைப்பில் உள்ள இந்தப் போக்கு உயர்ந்த விழுமியங்களால் நிரம்பப் பெற்ற மாற்று கல்வியமைப்பினது தேவைக்கான ஒரு சூழலைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

உயர் கல்வியில் தனியார் துறை!

1980-களின் தொடக்கத்தில் இந்தியாவில் கல்வியை சந்தைப்படுத்தலுக்கான சரக்காக மாற்றம் செய்வதற்குச் சாதகமான சூழல் தோன்றத் தொடங்கியது என்பதைக் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவும் இத்துறையில் தனியார்துறை நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறை லாபத்திற்கானது மட்டுமே என்ற சூழல் தோன்றத் தொடங்கியது. 1990-91 களில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் உலகமயமாதல் நுழைந்ததைத் தொடர்ந்து இந்தப் போக்கு வேகமடைந்தது.

கல்வி, சுகாதாரம் போன்ற சேவைத்துறைகள் மானுட வளர்ச்சியை அடையப் பெறுவதற்கும், அதே போன்று சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக்கும் அடிப்படையாக இருப்பதால் அவை பொது மக்களின் நலனுக்கானது என வரையறுக்கப்பட்டது.எனவே எல்லாேருக்கும் சமமான அளவில் கல்வி கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் அரசியலமைப்புச்சட்ட ரீதியிலான பொறுப்பாகும். ஆனால் வருந்தத்தக்க முறையில் உலகமயமாக்கலானது கல்வியை பொதுமக்களின் நலனுக்கானது என்பதிலிருந்து சந்தைப்படுத்தலுக்கான சரக்கு என்பதாக மாற்றியமைக்கும் போக்கைத் தொடங்கி வைத்தது. கல்வி சுகாதாரம் போன்ற சேவைத்துறைகள் முதலாவதாக தனியார் மயமாக்கப்பட்டதானது உண்மையில் மிகப் பெரிய துயரமிக்க நிகழ்வாகும்.

இந்திய உயர்கல்வி அமைப்பு உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்தியாவில் ஏறத்தாழ 30 மில்லியன் மாணவர்கள் உயர்கல்வியை மேற்காெண்டு வருகின்றனர். இத்துறையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியா மற்றும் 152 ஆதிபத்திய உரிமையுள்ள நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ளும் போது அது வியப்பளிப்பதாக உள்ளது. இந்தத் துறை அண்மைக் காலம் வரை பொது மக்களின் சுற்றுவட்டத்தை சார்ந்ததாக இருந்ததால் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், சாதிகளைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் உயர்கல்வித் துறையில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற முடிந்தது. உயர்கல்வித் துறையை ஜனநாயக மயமாக்கிய இந்தப் போக்கின் விளைவாக எல்லாேருக்கும் கல்வியை கிடைக்கச் செய்வது உத்தரவாதப்படுத்தப்பட்டது.

இதற்கு மாறாக இந்தப் போக்குத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை, தனியார்மயமாக்கலின் மூலம் “எல்லாேருக்கும் சம வாய்ப்பு” என்ற இலட்சிய ரீதியான குறிக்காேள் இல்லாது ஒழிக்கப்பட்டது. எனவே கடந்த இருபது ஆண்டுகளாக 70% உயர்கல்வித் துறையின் விரிவாக்கமானது தனியார் துறையிலேயே நடந்தேறியுள்ளது.தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியாேடு கூட நமது கல்வி அமைப்பிலிருந்து மாறுபட்ட தன்மைகள் இல்லாதாெழிக்கப்பட்டுவிட்டன. உயர் மானுடப் பண்பு, சமூக விஞ்ஞானங்கள், தனிநிலை விஞ்ஞானங்கள் (pure science’s) தொடர்பான பாடத் திட்டங்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டதை காணமுடியவில்லை. விமர்சன பூர்வமான சிந்தனை, சமூக அக்கரைகள், மனித மற்றும் மனிதத் தன்மையாேடு கூடிய விழுமியங்கள் போன்றவற்றுக்கு இடமேதுமில்லை. தனியார் துறையில் ஒட்டுமாெத்த வளர்ச்சி அடிப்படையில் தொழில்சார் கல்வியுடன் குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுடன் கட்டுண்டதாக உள்ளது.

உயர்கல்வியில் சேர்வாேரின் விகிதம் 1999 மற்றும் 2013-14ம் ஆண்டுகளில் 49 இலட்சத்திலிருந்து 323 இலட்சங்களாக அதிகரித்துள்ளது. இதில் 65 சத வளர்ச்சியை தனியார் துறையில் மட்டுமே காணமுடிகிறது. அதைப்பாேன்றே இதே கால கட்டத்தில் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 184-லிருந்து 723-ஆக அதிகரித்துள்ளது. இதில் 75% தனியார் துறையிலேயே அதிகமாக உள்ளது.

உயர் கல்வியில் யார் முதலீடு செய்கிறார்கள் என்ற பிரச்சனையுடன் தொடர்புள்ளவர்களே திட்டவட்டமாக அதன் நிலையையும் விதியையும் தீர்மானிக்கிறார்கள். இவ்வாறு தீர்மானிக்கும் இவர்கள் கார்ப்பரேட் குழுமங்களைச் சேர்ந்த தனிநபர்கள், மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், உணவக உடமையாளர்கள், ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், சாராய முதலைகள் போன்ற பரந்துபட்ட அளவிலான பல பிரிவினரைக் கொண்ட பரிவாரங்களாவர். மேலும் தனியார் நிறுவனங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதானது சமச்சீரற்றதாகவும் முதன்மையாக நகரங்களில் குவிமையப்படுத்தப்பட்டும் உள்ளது. அதனுடைய கட்டணக் கட்டமைப்பு உயர் கல்வி அமைப்பினுள் ஏழைகள் நுழைவதற்கான வாய்ப்பைத் தருவதாக இல்லை.

தனியார் கல்வியின் மீதான சர்வதேச அழுத்தங்கள்

வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மட்டுமே ஒரே வழி என்ற கடுமையான வாதம் 1990-களின் காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனை வேறு எந்த மாற்றுமில்லை (TINA) என்ற சொற்களில் கூறினர். இந்தப் பின்னணியில் உலக வங்கியானது இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் மீது சமூக சேவைக்கான வழிவகை ஏற்பாடுகளை குறிப்பாக கல்விக்கும் சுகாதாரத்திற்குமான பொறுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவை தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தம் அளித்தது.

உலக வங்கியின் “தொலை நோக்குப் பார்வை” என்ற ஆவணமானது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்த இந்தியாவிற்கு கொடு்த்த அழுத்தத்தாேடு மனநிறைவு கொள்ள தன்னை அனுமதித்துக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய தாராளவாதத்திற்குச் சாதகமான ஒரு வலிமை வாய்ந்த தத்துவார்த்த அடிப்படையோடு கூடிய “தனியார் மயமாக்கல் அவசியமானது, தவிர்க்க முடியாதது, பயனுள்ளதும் கூட” என்பவற்றாேடு தொடர்புடைய விவாதங்கள் பலப்படுத்தப்பட்டன.இந்தக் கண்ணாேட்டத்திலிருந்து உலக வங்கி
உயர்கல்வி : 1994-ன் அனுபவங்களின் படிப்பினை என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. கல்வி “திறன்சார் பொருள்” என்பதாக அனுமானித்து எல்லாேருக்கும் கல்வியளிப்பதற்கு வளர்ந்து வரும் நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளை ஒருபுறம் இந்த அறிக்கை பாராட்டுகிறது. இதுவரை இந்த நாடுகள் பெற்ற முன்னேற்றமானது அந்த முயற்சிகளின் விளைவே ஆகும் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அதே நேரத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்கள் இந்தப் பொறுப்பிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டுமென்பது உண்மையில் முரண்பாடானதாகும்.

இந்த அறிக்கை கல்வி முறையை ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்கல்வி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது. இதில் முதல் இரு பகுதிகளான ஆரம்பக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் திறன்சார் பொருளாக வரையறுக்கப்படுகிறது. எனவே இவற்றை அளிக்கும் பொறுப்பை அரசாங்கம் தொடர்ந்து ஏற்க வேண்டும் என்கிறது. உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் இது திறன்சார் பொருள் அல்ல என வரையறுக்கிறது. இதை வழங்குவது அரசின் கடமையல்ல என வரையறுக்கிறது. தனிநபர்கள் இதைத் தங்கள் சக்திக்கேற்ப பணம் செலுத்தி வாங்கியாக வேண்டும். இவ்வாறாக அரசு உயர்கல்விக்கு நிதி வழங்குவதிலிருந்து தன்னைத் திரும்பப் பெற்றுக்காெள்ள வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைக்கிறது.அதாேடு கூட பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வி அமைப்பினுள் நுழைந்து அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மானியங்கள் போன்ற பயன்களைப் பறித்துக் கொள்கின்றனர் என அவ்வறிக்கை கூறுகிறது. இது இயற்கையாகவே சமமின்மையை அகலப்படுத்துகிறது. எனவே இத்துறையை தனியார் மயமாக்குவதன் மூலம் மட்டுமே சமத்துவத்தை அடையப் பெற முடியும். உண்மையில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு கல்வி கிடைப்பதை மறுக்கிற, உயர்கல்வியைத் தனியார்மய மாக்குவதை சமத்துவத்தை பெறுவதற்கான வழிமுறையாக முன்னிலைப்படுத்துவது தீவிரமான முரண்பாடாகும், கார்ப்பரேட் துறையினருக்கு அளவற்ற முறையில் திறமையற்ற அல்லது அரைத்திறமையுடைய மலிவான உழைப்பை உத்திரவாதப்படுத்தும் நோக்கத்தாேடு மக்கள் நலனுக்கானது என்ற பெயரில் பள்ளிக்கல்வி தொடருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இப்பாேது உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதே வினாவாகும்?

தனியார்மயமானது படிப்படியாக கார்பாெரேட்மயமாக மாற்றமடைந்து வருகிறது. இந்திய உயர்கல்வி அமைப்பானது கார்பாெரேட் துறையினரின் தேவைகளுக்கு ஏற்றவாறு தெளிவாக மாற்றப்பட்டு வருகிறது. தற்பாேது உயர்கல்வியை கற்பதன் குறிக்காேளானது கல்வியின் எல்லாவிதமான முக்கியமான பரிமானங்களையும் காவு கொடுத்து திறமைகளைக் கற்று, அயல் நாடுகளிலுள்ள பன்னாட்டு கார்ப்பரேஷன்களில் வேலை தேடுவதென்பதாேடு கட்டுண்டு கிடக்கிறது.அறிவுக்கான தாகம் என்பதற்கு மாற்றாக பன்னாட்டுக் குழுமங்களுக்குத் தேவையான திறன்களை கற்பது மற்றும் அடையப் பெறுவது என்பதாக முன் வைக்கப்பட்டுள்ளது. விமர்சன பூர்வமான சிந்தனையை காணாமல் போகச் செய்கின்ற விளைவையே இது ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போக்கினூடே மாணவர்கள் தன்மதிப்பு, சுயசார்பு, விடுதலை, சுதந்திரம் ஆகியவை பற்றிய உயர்ந்த உணர்வாற்றலையே இழந்து வருகின்றனர். அவர்கள் திறமையுடையவர்கள் ஆனால் குருடர்கள்! மூளையற்றவர்கள்! அவர்கள் உலக முதலாளியத்திற்கு சேவகம் புரிவார்கள் முதலாளியச் சுரண்டலைப் பற்றியாே, ஒடுக்குமுறை அநீதிகளைப் பற்றியாே அவர்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது, இவ்வாறு உயர்கல்வியை கார்ப்பாெரேட் மயமாக்குவது என்பது தன்னலமே கருதுகிற அணுகுமுறையையும், அடிமை மனாேபாவத்தையும், குணாம்சங்களாகக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதே ஆகும். ஆளுகின்ற ஆதிக்க வர்க்கங்கள், ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவற்றைப் பற்றி அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் உலக வங்கியின் இறுதியான குறிக்காேள் என்பது கார்ப்பாெரேட் ஆதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியச் சுரண்டல் ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட, தொலை நோக்குப் பார்வையில் கேள்வி எதுவும் கேட்காத, எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காத கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஒரு அறிவு ஜீவி உலகை உருவாக்குவதே ஆகும். மேலும் இந்தக் கட்டுமானத்தைப் பலப்படுத்துவதற்கான சர்வதேச அழுத்தங்கள் உலக வங்கியின் கொள்கைகளாேடு மட்டுமே கட்டுண்டதாக இல்லை. இதாேடு கூட இன்னும் அழுத்தத்தைக் கடுமையாக்கி இந்தப் போக்கைத் தீவிரப்படுத்த உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தங்களினது ஆதரவையும் இது பயன்படுத்துகிறது.

எனவே உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்ட காலகட்டத்தில் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற சமூக சேவைத்துறைகளில் சேவைத்துறையிலான வர்த்தகத்தின் மீதான பொது ஒப்பந்தத்தின் கீழ் (காட்) உலக வர்த்தகக் கழகமானது அத்துமீறி நுழைந்தது, சேவைத்துறையை தாராளமயமாக்குதலை வளர்த்தெடுப்பதற்காக இது கட்டுப்படுத்துவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அடங்கிய ஒரு தொகுப்பாேடு 1995-ஜனவரி 1-ல் நடைமுறைக்கு வந்தது, இந்த ஒப்பந்தம் இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகள் தங்களின் மக்கள் நலனுக்கான சேவைத்துறை அனைத்தையும் அயல் நாட்டினரின் போட்டிக்குத் திறந்துவிட நிர்பந்திப்பதாக அமைந்ததாேடு எதிர்காலத்தில் திரும்பப் பெறவே முடியாதபடியான கட்டுப்பாடுகளை ஏற்கவும் அவர்களை நிர்பந்தித்தது. இந்தப் போக்கானது அந்நிய பன்னாட்டுக் குழுமங்கள் சேவைத்துறைகளை “கார்ப்பாெரேட் கையகப்படுத்தல்” என்ற பெயரால் கையகப்படுத்துவதற்கான விளைவை ஏற்படுத்தியது என்பதாேடு சேவைத்துறையை தனியார் மயப்படுத்தவும் நிர்பந்தித்தது.
எப்படியிருப்பினும் உலக வர்த்தகக் கழகத்தின் செயலும் இறையாண்மை கொண்ட நாடுகள் காட்ஸ் ஒப்பந்தத்தை ஏற்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கான உரிமை படைத்த நாடுகள் எத்தகைய சேவைத்துறைகளை காட்ஸ் ஒப்பந்தத்தின் எல்லையின் கீழ் கொண்டுவரலாம் என்ற முடிவை எடுப்பதற்கான உரிமை கொண்டவை எனக் கூறியது. ஆனால் நடைமுறையில் எந்த வளர்ந்து வரும் நாட்டிற்கும் காட்ஸின் முன்மாெழிதல்களை நிராகரிப்பதற்கான எந்த உரிமையும் கிடையாது. ஆனால் வளர்ந்துவரும் நாடுகள் தாமாக ஏற்கும் நிபந்தனை என்பதன் கீழ் இவற்றை கட்டாயமாக ஏற்றே ஆக வேண்டும்.எனவே 1995-ன் தொடக்கத்தில் இந்தியா காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் தொடங்கி சமூக சேவைத்துறை சந்தைகள் குறிப்பாக கல்வி சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கி எல்லா சேவைத்துறை சந்தைகளும் வளர்ந்த நாடுகளுக்கும் ஆதிக்கநிலை நாடுகளுக்கும் எளிதில் அணுகத்தக்கதாக ஆயிற்று.

அரசின் கட்டுப்பாடற்ற வாணிபக் கோட்பாடு (…….) என்ற செவ்வியல் அமைப்பு அரசு பொருளாதார நடவடிக்கைகளில் அனுமதிக்காது, ஆனால் “புதிய தாராளவாதம்” பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனமானவை, தனியார் துறை திறமை மிக்கவை என்ற வாதத்தை பிரபலப்படுத்தின எனவே தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறாக தனியார் மயமாக்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அழுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது என்ற அரசாங்கத்தின் பாத்திரம் சமூக அநீதி, பொருளாதாரச் சுரண்டல் போன்றவை தொடர்பான எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமான கார்ப்பாெரேட் துறையை ஊக்குவிப்பது என்பதாக மாற்றமடைந்தது.

தனியார் மயத்தையும் கார்ப்பாெரேட் மயத்தையும் நோக்கி

உண்மையில் இந்தப் போக்கு இந்தியாவில் 1980-களில் தொடங்கியது. கல்வி அமைச்சகம் 1985-ல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமாக மாற்றமடைந்ததிலிருந்து கல்வியின் சமூக வளர்ச்சி என்ற குறிக்காேள் காணாமல் போயிற்று, உயர்கல்வி என்ற குறிக்காேளில் எத்தகைய தன்மை கொண்ட மாற்றம் தேவைப்படுகிறது? இப்பாேது இளைஞன் உலக சந்தைக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் கற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கார்ப்பரேட் அதிகாரத்தினது மேலாதிக்கத்தையும் அதன் அளவற்ற லாபத்தையும் மற்றும் ஒட்டு மொத்தமான ஏகாதிபத்தியச் சுரண்டலையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இன்றைய இளைஞன் அடிமை மனப்பான்மையை பெற்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களை இத்தகைய குணாம்சத்தாேடு வளர்தெடுக்க வேண்டியது உயர்கல்வி அமைப்பின் பொறுப்பாகும், இந்தக் கண்ணாேட்டத்துடன் மட்டுமே 1986-ன் தேசியக் கல்விக் கொள்கை (புதிய கல்விக் கொள்கை) உருவாக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டுக்காக பல்கலைக் கழகங்கள் அரசாங்கத்தை சார்ந்து இருப்பதை எதிர்பார்க்கக் கூடாது என இக் கொள்கை தெளிவாகக் கூறுகிறது. எனவே இது தனது செலவுகளை வெட்டிக் குறைத்துக் கொள்ள முன்மாெழிவதாேடு சுயமாக நிதியளித்து கல்வி கற்கும் முறையை அறிமுகப்படுத்தி பணத்தை சம்பாதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்காெள்ளவும் முன்மாெழிகிறது.
1990-ல் உலகமயமாதல் போக்கு நுழைந்த பின்னர் இந்தப் போக்கு ஒரு தெளிவான வடிவத்தை எடுத்தது. காட்ஸ் ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் உயர்கல்வித் துறை அந்நிய முதலீடுகளுக்கான ஒரு பெருஞ்சந்தையாக மாற்றமடைந்தது. உயர்ந்தபட்ச லாபத்தைப் பெறுவதற்கான  சரக்காக அது மாற்றப்பட்டது. உடனிகழ்வாக பொது மக்கள் கல்வி நிறுவனங்கள் சீரழிந்து போவதற்கான ஒரு அடிப்படை தோற்றமெடுத்தது. 1995-ல் தனியார் பல்கலைக்கழகச் சட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்வி தனியார்மயமாக்கப்படுவது சட்டபூர்வமாக்கப்பட்டது. இதன் விளைவாக மனித மூலாதாரங்கள் உள்ளிட்ட எல்லா மூலாதாரங்கள் மீதும் கார்ப்பாெரேட் அதிகாரத்தின் ஆணை உரிமையும் மற்றும் மேலாதிக்கமும் வலிமையாகத் தோன்றி எழத் தொடங்கியது.

உயர்கல்விக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடும் மானியங்களும் 1997-க்குப் பிறகு குறையத் தொடங்கியது. அதாவது 5 ஆண்டுகளில் 90% லிருந்து 25% ஆக குறைந்தது.

2000-ல் வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான பிரதம மந்திரியின் கவுன்சில் முகேஷ் அம்பானி-குமாரமங்கலம் பிர்லா குழுவை நிறுவியது. இக்குழு “கல்வியில் சீர்திருத்தங்களுக்கான கொள்கைச் சட்டத்தின் மீதான அறிக்கை” என்ற தலைப்பிலான தனது அறிக்கையை சமர்ப்பித்தது. உயர்கல்வியில் தனியார் மயமாதலை விரைவுபடுத்த தனது முன்மாெழிதல்களையும் பரிந்துரைகளையும் இக்குழு அளிக்கும் என எதிர்பார்க்ப்பட்டது. இந்த அறிக்கை உயர்கல்வியை தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் வாதங்களுக்கு வலிமையான ஆதரவை விரிவுப்படுத்தியது.

எனவே எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக இந்த பரிந்துரைகள் நடை முறைக்கு வந்தன. இந்த அறிக்கை மிகுந்த வலிமையுடன் பரிந்துரைத்தவை வருமாறு:

1) உயர்கல்வித்துறை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அனுமதியளித்தாக வேண்டும்.

2) இந்தத்துறை லாபந்தரக்கூடிய வர்த்தக நடவடிக்கையாகத் தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

3) முழுமையாக மானியங்களை வழங்கும் முறைமையை அகற்ற வேண்டும்.

4) பயனாளிகள் பணம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

5) கல்விக்கான செலவை ஏற்க முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

முதலீட்டாளர்களுக்கு லாபங்களை உத்தரவாதம் செய்வதற்கு இந்த மாற்றங்கள் அவசியமாகும். மேலும் இந்த மாற்றங்கள் இத்துறையில் முதலீடு செய்ய அவர்களை கவர்ந்திழுக்கும். உடனடியாக பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி அமைப்பை ஒரு தொழிற்துறையாகவும், கார்ப்பாெரேட் விழுமியங்களை வளர்த்தெடுக்கும் வகையிலும் மாற்றமடையச் செய்வதற்கு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முன்முயற்சிகளை மேற்காெண்டன.

இந்தப் போக்கை துரிதப்படுத்துவதற்காக உலக வங்கி “அறிவுக்கான சமுதாயத்தைக் கட்டியமைப்பது:”
மூன்றாம் நிலைக் கல்வி எதிரிடும் புதிய சவால்கள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை 2002-ல் வெளியிட்டது. இந்த அறிக்கை உயர்கல்வி பொதுமக்கள் நலனுக்கானது என்பதை ஏற்கிறது ஆயினும், பயனுள்ள முறையிலும், திறனாற்றலுள்ள முறையிலும் இதை தனியார் துறை வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ளும் போது அது திகைப்படச் செய்வதாக உள்ளது.
எனவே இதற்குப் பொதுமக்கள் தனியார் கூட்டுப் பங்கேற்பு (PPP) என்பது ஒரு தீர்வாக அமையும் மேலும் அவ்வறிக்கை உயர்கல்வியின் குறிக்காேள் “அறிவுசார் சமுதாயங்களை உருவாக்குவது” எனக் குறிப்பிடுகிறது.

அந்த அறிவுனுடைய இயல்பு எதுவாக இருக்க வேண்டும்? கார்ப்பாெரேட் துறைக்கும் பயனளிக்கக் கூடிய ஒன்றாக அதைப் போன்றே அதை வலிமையடையச் செய்கின்ற ஒன்றாக உயர்கல்வி அறிவைக் கற்பிக்க வேண்டும். இதன் விளைவாக கலாச்சாரத்தை மேம்படுத்துவது-சமூக நீதியை அடையப் பெறுவது- மனித இனத்திற்கான மனித உறவுகளின் முன்னேற்றமே கலாச்சாரம் போன்ற உயர்கல்வியின் குறிக்காேள்கள் அழிவுக்குள்ளாகிறது. எனவே விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தைக் கட்டியமைப்பதற்கு அறிவு என்பது கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்றாக இருந்தாக வேண்டும்.

இது சுயநலம் மிக்க, அடிமை மனாேபாவமுள்ள, அதே நேரத்தில், தன்னம்பிக்கை, சுயமதிப்பு, சுயசார்பு, அநீதிக்கு எதிராகப் போராடுவது போன்ற மகத்தான பண்புகளைக் கொண்டிராத ஒரு வகைப்பட்ட சாவி கொடுத்தால் இயங்குகிற பொம்மைகளையே உருவாக்கும். இந்த சாவியால் இயங்கும் பொம்மைகள் அதிகரித்து வரும் சுரண்டலையோ, ஒடுக்குமுறையையாே, வன்முறையையாே, சமத்துவமின்மையைப் பற்றிய கேள்வி எதுவும் கேட்காது. இவைகள் வெறும் கருவிகள் என்ற நிலைக்கு சீரழிந்து கார்ப்பாெரேட்டுகளின் நலனுக்காகவே பணிபுரியும்.

இந்தியாவிற்கான இந்த பரிந்துரைகளின் தேவைகளையும் பொருத்தப்பாட்டையும் விளக்குவதற்காக நமது அரசாங்கம் 2007-08ல் தேசிய அறிவுசார் ஆணையத்தை நிறுவியது. இந்த ஆணையம் அரசின் தேவைகளுக்கு இணங்க பரிந்துரைகளை வழங்கியது. இந்தியாவை ஒரு “அறிவுசார் சமூகமாக” உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும். ஆனால் நமது அரசாங்கம் இந்தக் குறிக்காேளை அடையப்பெறுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களையாே, திறனையோ, அறிவுசார் வளத்தையோ கொண்டதாக இல்லை. எனவே நமது மாணவர்கள் அறிவைப் பெறச் செய்வதற்கு கைவசமுள்ள ஒரே தேர்வு அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களையும், அந்நிய கார்ப்பாெரேட் முதலீட்டையும் அழைப்பது என்பதுதான் இக்குழுவின் வலிமைமிக்க பரிந்துரையாகும்.

இந்தப் பரிந்துரைகளை திறனாற்றலுடன் நடைமுறைப்படுத்துவதற்காக 2009-ல் அரசாங்கம் யஷ்பால் தலைமையில் ஒரு குழுவை நிறுவியது. உயர்கல்வித் துறையை மேம்படுத்த தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவ வேண்டியது அவசியம் என்றும், எனவே அவை ஊக்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் இக்கமிட்டி வலிமையான முறையில் பரிந்துரைத்தது. இவ்வாறாக கொள்கை மட்டத்தில் உலக வங்கியின் அழுத்தத்திற்கு ஏற்ப ஒரு வலிமை மிக்க அடித்தளம் உருவாக்கப்பட்டது.
“சமத்துவத்தையும்”, “திறனாய்வையும்”, பெறுவதற்காக இந்திய உயர்கல்வி அமைப்பை கார்பாரேட் மயமாக்குவதற்கும், தனியார்மயமாக்குவதற்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதற்கும் உலகவங்கி இத்தகைய அடித்தளத்தை அமைக்க அழுத்தமளித்தது.

உயர் கல்வியைத் தனியார்மயமாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

12-வது ஐந்தாண்டுத் திட்ட வரைவின் உயர்கல்வி தொடர்பான முன்மாெழிதல்கள் 2012 டிசம்பர் 27-ல் தேசிய வளர்ச்சிக் கழகத்தின் முன்வைக்கப்பட்டது. இக்கூட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பரப்புகளில் தேவையான ஒழுங்குமுறை ஏற்பாடுகளுடன் லாபம் பெறக்கூடிய உயர்கல்வி நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கும் வகையில் இருப்பில் உள்ள சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பரிந்துரைத்தது. இக்கூட்டம் மேலும் லாபம் பெறக்கூடிய நிறுவனங்களிடமிருந்து வரி வசூலித்து அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து பெரிய அளவில் மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி அளிக்குகம் (ஸ்காலர்ஷிப்) திட்டங்களுக்கும் செலவிடலாம் என்றும் பரித்துரைத்தது. இக்கூட்டம் மேலும் தனியார் நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து கடன் பத்திரங்கள் (….) பங்குகள் (ஷேர்ஸ்) ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டி 1956-கம்பெனிகள் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் புதிய நிறுவனங்களை நிறுவ அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைத்தது. இருப்பில் உள்ள அறக்கட்டளைகள் சொசைட்டிகள் ஆகியவை தங்கள் நிறுவனங்களை 1956-குழுமங்கள் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழான நிறுவனங்களாக சட்டப்பூர்வமான தகுதியைப் பெறுவதை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைத்தது.

இவ்வாறாக இந்தியாவின் உயர்கல்வித் துறையில் தனியார் கார்ப்பரேட் சக்திகளின் மேலாதிக்கம் அதிகரித்தது. மேலும் தனியார் துறையின் நலனுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் தனியார் கூட்டுப் பங்கேற்பு (ppp) தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. திட்ட ஆணையம் இந்தப் போக்கை விரைவுபடுத்துவதற்காக நாராயணமூர்த்தி கமிட்டியை (….) தேவையான வழிகாட்டுதல்களுக்காக அமைத்தது. நாராயணமூர்த்தி கமிட்டியின் பரிந்துரைகள் யாவை?

திட்ட ஆணையமானது 2012-மே8-ல் “உயர்கல்வியில் கார்ப்பாெரேட் துறையின் பங்கேற்பு” என்ற தலைப்பிலான நாராயணமூர்த்தி கமிட்டியின் அறிக்கையை வெளியிட்டது.

இந்தக் கமிட்டி அடிப்படையில் மூன்று மையமான அம்சங்களைக் குவிமையப்படுத்தியது
1) தனியார் கார்பாெரேட் மூலதனத்தை ஈர்க்கும் வகையிலான சூழலை உருவாக்குவது.
2) ஆராய்ச்சி மற்றும் கற்பிக்கும் வினைத்திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கார்ப்பாெரேட் ஆதரவைப் பெறுதல்.
3) இருப்பில் உள்ள நிறுவனங்களுக்கும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கும், அறிவு வளர்ச்சிக்கான மையங்களை அல்லது சொத்துக்களை (……) உருவாக்குவதற்கும் கார்ப்பாெரேட் முதலீடு.

நாராயணமூர்த்தி கமிட்டியின் அறிக்கை பொதுமக்களுக்கான கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறையையும், அவற்றின் திறன் இன்மையும் பற்றித் தெளிவாக விளக்குகிறது. எனினும் இப்பிரச்சனைக்கான மூல காரணத்தை அடையாளம் காண்பதற்கான எந்த முயற்சியையும் இந்த அறிக்கை செய்யவில்லை. ஆனால் திறமையின்மை என்பது அரசாங்க நிறுவனங்களுக்கே உரிய தனிச்சிறப்பான போக்கு என மட்டும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த அமைப்பை திறனுள்ளதாக ஆக்குவதற்கு தனியார்மயமாக்குதலைத் தவிர வேறு வழியில்லை. பொது மக்களுக்கான கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள் கட்டுமான வசதியின்மை, மோசமான கல்வித்தரம், வேலையில் அமர்த்துவதில் உள்ள பலவீனம், நிதியைப் பெறுவதில் உள்ள இடைவெளி ஆகியவற்றால் இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. எனவே இத்துறையில் கார்ப்பாெரேட் முதலீடு நுழைவதன் மூலம் மட்டுமே இந்த சவால்களுக்குத் தீர்வு காண முடியுமென்று இக் கமிட்டி வாதிடுகிறது.

இக்கமிட்டியால் இப்பிரச்சனை தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மிக உயர் நிலையில் உள்ள 75 பல்கலைக் கழகங்களையும் உயர்கல்வி நிறுவனங்களையும் தரவரிசை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்காெள்ள வேண்டியது முதற் கடமையாகும் இதற்காக ஒவ்வாெரு நிறுவனத்திற்கும் ரூ 175-கோடியிலிருந்து 200-கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.

ஒவ்வாெரு நிறுவனத்திற்கும் ரூ 500-கோடியென முதலீடு செய்யப்பட்ட உலகத் தரம் வாய்ந்த 20 புதிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட வேண்டும். அடையாளம் காணப்பட்ட நகரங்களிலும், நாட்டினது கல்வி மையங்களிலும், தனியார் பொதுமக்கள் கூட்டாகப் பங்கேற்கும் நிறுவனங்கள் (….) மூலமாக அதே மாதிரியான 20 புதிய தேசிய அறிவுசார் தொகுதிகள் அல்லது மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்குத்தேவையான நிதி மைய மாநில அரசாங்கங்களாலும் கார்ப்பாெரேட் துறையாலும் வழங்கப்பட வேண்டும். புதிய நிறுவனங்களை அமைப்பதற்கும் இத்துறைக்கு கார்ப்பாெரேட் முதலீட்டை கவர்ந்திழுப்பதற்கும் கட்டணமேதுமின்றி இலவசமாக நிலங்களை 999 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் நாராயணமூர்த்தி கமிட்டி பரிந்துரைக்கிறது.

பன்னாட்டு கார்ப்பாெரேஷன்களின் தேவைக்கு ஏற்ப அறிவை கற்பிக்கச் செய்வதற்கான அறிவை போதிக்கும் சொத்தான அமைப்புகளையும் ஆராய்ச்சி மையங்களையும் நிறுவுவதற்கு ஊக்கமளிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு 2012-க்கும் 2017-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்கு ரூபாய் 40,000-கோடி தேவைப்படும்.

மைய மாநில அரசாங்கங்கள் கார்ப்பரேட் முதலீட்டிற்கு முழுமையான ஆதரவை விரிவுப்படுத்த வேண்டும் என்பதாேடு எவ்வளவு முடியுமாே அவ்வளவிற்கு நிதிரீதியான ஊக்குவிப்புகளையும், சலுகைகளையும் அளிக்க வேண்டும்.

இதாேடு கூட “பொது மக்கள் நலனுக்கானது என்ற வகையில் உயர்கல்வி” என்பது தொடர்பான வாதங்களும், விவாதங்களும் முடிவுக்கு வந்தது. தத்துவம் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்ட சர்வதேச தேசிய
அழுத்தங்கள் இந்த சீரழிவுப் போக்கைப் பற்றி எந்தவித கருத்து வேற்றுமையையும் அனுமதிக்காத அளவிற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “உயர்கல்வி என்பது சந்தைக்கான சரக்கு” என்பதாேடு இத்துறையிலான முதலீட்டின் முதன்மையான நோக்கம் என்பது லாப நோக்கம் கொண்டது என்பதை இப்பாேது எல்லாேரும் ஒப்புக்காெள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தத் துறையை கார்ப்பரேட் முதலீட்டின் மூலம் மட்டுமே மேம்படுத்த முடியும். இவ்வாறாக கார்ப்பாெரேட் சக்திகளின் நுழைவு என்பது முன்நிபந்தனையாகும் என்பதாேடு தேவையான நிபந்தனையுமாகும். இந்தத் துறையில் கார்ப்பாெரேட் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்பட வேண்டும். இதற்காக அரசாங்க நிலத்தைத் தர வேண்டும். வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். பல்வேறு வகைப்பட்ட ஊக்குவிப்புகளைத் தர வேண்டும். இதற்காக மைய-மாநில அரசாங்கங்களின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் வலிமையான ஆதரவைத் தந்தாக வேண்டும். இந்தத் துறையில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச லாப விகிதமான 20 முதல் 30 சதத்தை உத்தரவாதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும்.

இந்தப் போக்கினது விளைவுகள் யாவை?

ஒட்டுமாெத்த உயர்கல்வி அமைப்பானது கார்ப்பரேட் மேலாதிக்கத்தையும், கார்ப்பரேட்டின் லாபங்களையும் உத்தரவாதம் செய்வதற்காக தனது ஒட்டு மொத்த சக்தியாற்றலையும், முயற்சிகளையும் அதற்குத் தேவையான அறிவையும், திறனையும் கொண்ட இளைஞனை உருவாக்குவதை நோக்கித் திருப்ப வேண்டும்.

சமூக நீதியைப் பற்றிய எத்தகைய கருத்தையோ, கவலையையாே இது கொண்டிருக்காது. சமூக உணர்வு என்ற கேள்விக்கே இடமில்லை, மிக உயர்ந்த சம்பளத்தாேடு கூடிய வேலையைத் தேடி ஓடியலைவதை மட்டுமே தெரிந்து கொண்ட சுயநலமிக்க இளைஞனை, நுகர்வுக் கலாச்சாரம் என்ற விஷம் தோய்ந்த வட்டத்தின் வலிமை மிக்க பகுதியாக ஆவதற்காக உயர்ந்த வருமானத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இளைஞனை இது உருவாக்கியுள்ளது. சமூகத்தைப் பற்றியாே சமூக விழுமியங்களைப் பற்றியாே பேசவாே,சிந்திக்கவாே அவர்கள் தவறுகின்றனர். கூட்டு நடவடிக்கைகளும், மனித விழுமியங்களும் சீரழிவதற்கான காரணங்களைப் பற்றியெல்லாம் விவாதிக்க இடம் ஏதுமில்லை. இளைஞனை இவ்வாறு மாற்றி அமைப்பது ஏகாதிபத்தியச் சுரண்டலை ஊட்டி வளர்ப்பதற்கும் மேலும் அது தொடர்வதற்கும் அவசியமாகின்றது.

சர்வதேச அளவில் உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும், தேசிய அளவில் இந்திய அரசாங்கம் உள்ளிட்டு வளர்ந்துவரும் நாடுகளின் அரசாங்கங்களும் இவற்றை நடைமுறைப்படுத்த கொள்கைகளை வகுத்து வருவதாேடு அதற்காக வலிமையான கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் நெருக்கடி என்ற விஷவட்டத்தை உடைக்க முடியாதபடி பலப்படுத்துகின்றனர். அவர்கள் மிக வேகமாக சிதைவையும், அழிவையும் நோக்கி நகர்கின்றனர்.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு(CSR)

நாராயணமூர்த்தி கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாராளுமன்றம் 2012-ம் ஆண்டு டிசம்பரில் 2012-ம் ஆண்டு குழுமங்களுக்கான சட்ட மசாேதாவை ஏற்றுக் கொண்டது இதன்படி கார்ப்பரேட்டுகள் சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டியது கட்டாயமாகும் ரூ 500-கோடி நிகர மதிப்பையோ அதற்கு மேற்காெண்ட நிகர மதிப்பையோ கொண்ட ஒவ்வாெரு குழுமமும், அல்லது
ரூ 5-கோடியையோ அல்லது மேற்பட்ட நிகர லாபத்தை பெறுகின்ற ஒவ்வாெரு குழுமமும் அல்லது ஒவ்வாெரு நிதியாண்டிலும் ரூ.1,000-கோடிக்கு மேல் வரவு செலவு செய்கிற ஒவ்வாெரு குழுமமும் கார்பாெரேட் சமூகப் பொறுப்புக்கான ஒரு குழுவை அமைப்பதாேடு ஒவ்வாெரு நிதியாண்டிலும் நிகர லாபத்தில் 2%-ஐ இதற்காகச் செலவிட வேண்டும்.

புதிய மசாேதா தனியார் துறையில் மனித நேய கொடையாண்மை என்ற கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களைச் சுரண்டுகிற நிறுவனங்களுக்கே அவர்களைக் காக்கின்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூலாதாரங்கள், நிலம், உழைப்பு போன்றவற்றை சுரண்டுவதிலேயே கார்ப்பாெரேட் சக்திகளின் வாழ்வும், இருப்பும் உள்ளது.

ஐயகாே!
இவர்களுக்குச் சமூகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உயர்கல்வி அமைப்பில் நுழைவது சமூகத்திற்கு சேவை செய்ய அல்ல! லாபத்தைப் பெறுவதற்கே! கார்ப்பாெரேட் முதலீடுகளைக் கவர்வதற்காக, அவர்களின் லாபத்தை உறுதிப்படுத்தும் கொள்கைகளிலும், திட்டங்களிலும் அரசாங்கம் தீவிரமான மாற்றங்களைச் செய்துள்ளது. அப்படியிருக்க சமூகப் பொறுப்பேற்பு என்ற வினாவுக்கு இடமேது? இது தவறான கண்ணாேட்டத்துடன் மக்களை வஞ்சிப்பதே தவிர வேறல்ல!

பல்கலைக் கழகங்கள் அதே போன்று உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலையும், தகுதியும் எவ்வாறு உள்ளது?

அரசால் நடத்தப்படும் மக்களுக்கான பல்கலைக் கழகங்களில் மட்டுமே எந்தப் பாகுபாடுமின்றி எல்லாேராலும் கல்வி பெற முடிகிறது. அவைகள் விமர்சன பூர்வமான சிந்தனைக்கும், மதிப்பீடுகளுக்கும் இடமளிக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் மூலம் மட்டுமே ஜனநாயக விழுமியங்களும், பன்முகத்தன்மைகளும் (வேற்றுமைகளும்) பாதுகாக்கப்படுகின்றன. சமூகப் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான விவாதங்களுக்கான மேடையாக அவை திகழ்கின்றன. இதில் பயிலும் மாணவர்கள்தான் சமூக மாற்றத்துக்கான எந்த ஒரு இயக்கத்திலும் முன்னணியில் நிற்கின்றனர். இந்த பெரும் பல்கலைக் கழகங்கள் சமூகத்தினது இயக்கத்தைப் பற்றிய ஒரு முற்பாேக்கான திசை வழியைத் தருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் குண்டூரில் ஆசார்ய நாகார்ஜூனா பல்கலைக் கழகத்தில் 2015-ல் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிடுவது பொறுத்தமானதாகும். ரித்திஷ்வரி என்பவர் கட்டிடக் கலை பொறியியற் பிரிவு மாணவியாவார். இவர் சந்தேகத்திற்கு இடந்தரக்கூடிய சூழலில் மரணமடைந்தார். முற்பாேக்கு ஜனநாயக மாணவர் அமைப்பு (PDSO)., ஸ்த்ரீ விமுக்தி சங்கதனா போன்ற பெண்கள் அமைப்புகள், மனித உரிமை ஜனநாயக அமைப்புகள், இந்த நிகழ்வை கடுமையாகக் கண்டித்ததாேடு ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்தனர். மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மையை சமூகத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. எல்லாவிதமான பொறுப்பு வாய்ந்த அமைப்புகளும் உண்மையை அறியவும் இது போன்ற அவக்கேடான நிகழ்வுகளுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பவும், மக்களுக்கான அரசு நிறுவனங்களில் மட்டுமே சாத்தியமாகும்.

மனிதத் தன்மையற்ற கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது, துன்புறுத்தல்கள், போட்டி என்ற பெயரில் மாணவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது, ஆகியவை கார்ப்பரேட் கல்லூரிகள் மாணவர்களிடையே மூச்சுத் திணறக்கூடிய சூழலை உருவாக்குவதாேடு மாணவர்கள் தற்காெலை செய்து கொள்ளும் விளைவை ஏற்படுத்துகிறது. உண்மைகளை அறிய இந்த நிறுவனங்களுக்குள் நுழையும் எந்த அமைப்புகளுக்காவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த நிறுவனங்களில் முழுமையாக ஜனநாயகமற்ற நடைமுறைகள் நிலவுகின்றன. எந்தக் கண்டனமும் இல்லை! வினா எதுவும் எழுப்ப முடியாது! எல்லாவற்றையும் ஏற்க மட்டுமே செய்ய வேண்டும். இது ஏகாதிபத்தியம் உயிர்வாழ்வதற்கு அவசியப்படுகிறது.

பல்கலைக் கழக மானியக் குழுவை அமைத்ததன் முதன்மையான நோக்கமே, 1948-ல் ஏற்படுத்தப்பட்ட முதலாவது பல்கலைக் கழக கல்வி ஆணையம் பரிந்துரைத்த வழிமுறையின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களின் சுயாட்சியையும், நிலவும் பன்முகத் தன்மைகளையும், வேற்றுமைகளையும் பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கை எடுப்பதற்காகத்தான். வருந்தத் தக்க முறையில் பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இடையிலான வித்தியாசங்கள் படிப்படியாகக் குறையலாயின பல்கலைக் கழகங்களின் சுயாட்சியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தேர்வு அடிப்படையிலான மதிப்பு அமைப்பு, சமச்சீர் பாடத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சியையும், பன்முகத் தன்மையையும், வேற்றுமைகளையும் நசுக்கக் கூடிய அரசாங்கத்தின் கையிலான கருவியாக பல்கலைக் கழக மானியக்குழு வார்த்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டப்படிப்பிற்கு கீழ் நிலையில் வழங்கப்படும் கல்வி “மையம்”, “பொது” “வெளிப்படை” என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மையக் கல்வியைக் கற்பிப்பதற்கு மட்டும் நிரந்தரமான ஆசிரியர்கள் தேவைப்படுவர்.  மற்ற இரு கல்விப் பிரிவிற்கும் பகுதி நேர ஆசிரியர்களே போதுமானவர்கள் ஆவர். இயற்கையாகவே இதன் விளைவாக ஆசிரியர்களுக்கான பணியானது ஒழுங்குமுறை சாராப் பணியாக மாற்றப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை யாதெனில் இரண்டு தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் யாருமே சேர்க்கப்படவில்லை, நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. சுயநிதிக் கல்வியும், தொலைதூரக் கல்வியும் பல்கலைக் கழகங்களை நடத்துவதற்கான உண்மையான நிதி மூலாதாரமாக ஆகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் ஆசிரியர்கள் குறைந்து வருவதன் முக்கியத்துவம் காரணமாக மாநிலத்தின் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக துணை வேந்தர் பணியிடம் நிரப்பப்படாமலே உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு மாநிலப் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக கல்லூரி விடுதிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியாேரின் கடுங்கண்டனத்திற்கிடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயமாக்கப்பட்டது. கார்ப்பாெரேட் சக்திகள் கொடுக்கின்ற அழுத்தங்களின் விளைவாக அரசாங்கம் பல்கலைக் கழக்களை தகுியற்ற அமைப்புகளாக ஆக்குவதற்கு ‘விசுவாசத்துடன்’ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருந்தத்தக்க நிலையில் சில ஆசிரியர்களும் சில மாணவர்களும் சீரழிவை நோக்கிய இந்த மாற்றத்திற்கான கருிகளா ஆகி வருகின்றனர். இந்த நிறுவனங்களைமைூடுவதற்கு நடவடிக்கை எடுத்தாலும் கூட கேள்வி கேட்பதற்காே கண்டிப்பதற்காே யாருமே இல்லை! ஆராய்ச்சிக் கல்வியின் தரமும் மதிப்பும் பாழ்பட்டு வரும் போக்கை எவருமே நிராகரிக்க முடியாது. ஆராய்சாசிப் படிபபும் கூட சந்தைசை் சரக்காக மாற்றப்பட்டு விட்டது. இது ஒரு தனிமைப் படுத்தப்பட்ட பிரச்சனையைாே தனிநபர் பிரச்சனையோ அல்ல. மாறாக இந்த நிறுவனங்களைப் பயனற்றதாக நம்பிக்கையைற்றதாக, தேவை யற்றதாக மாற்றுகின்ற போக்கினது பிரிக்க முடியாத பகுதியாகும் எனவே இதற்கு எந்தத் தனிநபர் தீர்வும் கிடையைாது சீரழிவிற்கான ஒட்டு மொத்தக் கட்டமைபை்பையே தாக்க வேண்டும்.

அறிவுச் செல்வத்தின் காப்பாளர்களாக அறியப்படும் மையம் பல்கலைக் கழகங்களும் கூட மோசமடைந்து வரும் இந்தப் போக்கின் பிரிக்க முடியாத பகுதிகளாவர். ஹைதிராபாத் மையப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், டெல்லி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் இதனை நிரூபிக்கும். விமர்சன பூர்வமான சிந்னையும், மதிப்பீடுகளும் காலாவதியான கோட்பாடுகளாக முத்திரை குத்தப்படுகின்றன. சட்டபூர்வமான உரிமைகளை அடைவதைப் பற்றியும் அரசுக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளைப் பற்றியும் பேசுவது எல்லாமே கடுங்குற்றமாகவும் தேசவிராேதமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது “திறமைகளைக் கற்பது” மட்டுமே என்பதாக கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் சமூக நீதி என்பது வர்களின் எல்லை வரம்பிற்குள் வராததால் இதைப் பற்றிப் பேசுபவர்ளாகவோ, சிந்திப்பவர்களாகவாே எதிர்பார்க்கப்படவில்லை. அவர்கள் வெறுமனே கார்ப்பரேட் சக்திகளுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்

இப்பாேது உயர்கல்வி வலிமையான முறையில் பணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது சந்தைப் படுத்தலுக்கான சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இது உலகச் சந்தைகளுக்கு மட்டுமே பயன்படும். இது வேலைவாய்ப்பாேடு இணைக்கப்பட்டுள்ளதால், சமூகத்திற்குத் தேவையான கல்விப் பிரிவுகளும், கூட்டுணர்வுகளுக்குத் தேவையான கல்விப் பிரிவுகளும், அதாவது மானுடவியல், சமூக விஞ்ஞானம், தனிநிலை விஞ்ஞானம் ஆகியவை விரைவாகக் காணாமல் போய் வருகின்றன. அதைப் போன்றே அறிவுக்கும் மெய்யறிவுக்குமானதாக வெறுமனே திறமைகளைப் பெறுவதற்கான தீவிரமாக மாற்றாக முன் வைக்கப்படுகிறது.

உயர்கல்வி தனியார்மயமாதல், கார்ப்பாெரேட்மயமாதல் ஆகியவற்றால் வசதியான பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக ஆகியுள்ளது. ஏழைகள் அரசுப் பல்கலைக் கழகங்களிலும் நிறுவனங்களிலும் மட்டுமே நுழைய முடியும். பொதுமக்கள் சார் உயர்கல்வியை இல்லாதாெழிப்பது ஒடுக்கப்பட்டாேருக்கு உயர்கல்வியை மறுக்கின்ற விளைவையே ஏற்படுத்தும்.

இவ்வாறு சீரழிவது என்ற பிரச்சனையை பலப்படுத்துவதற்காக 2015-ல் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு திறமையை வளர்த்தல் பதில் சொல்லும் பொறுப்பேற்பு, உலக சந்தையின் தேவைக்கேற்ப மாணவர்களை வார்த்தெடுப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சமத்துவம், சமூக நீதி போன்ற அரசியலமைப்புச் சட்ட ரீதியான குறிக்காேள்கள், அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதமளிப்பது போன்றவை இந்தக் கொள்கையில் எந்த இடத்திலும் இடம் பெறாதது உண்மையில் துயரமானதாகும்.

இந்தப் பின்னணியில் 1954-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டதை நினைவு கொள்வது பொறுத்தமானதாகும், அவர் கூறியதாவது:

“தனிச்சிறப்புக் கூறுகளை கற்பித்தால் மட்டும் போதாது. இதன் மூலம் மனிதன் ஒரு வகைப்பட்ட பயனளிக்கக் கூடிய இயந்திரமாக ஆக முடியுமே தவிர ஒத்திசைவான மனிதச் சிறப்பியல்புகளை வளர்த்தெடுத்துக் கொள்ள முடியாது. மாணவர்கள் விழுமியங்களின் உயிராேட்டமான உணர்வைப் பற்றிய புரிதலை அடையப்பெற வேண்டியது இன்றியமையாததாகும். அவர்கள் அறநெறிப்படி சிறப்பான அழகியதான உணர்வாற்றலை அடையப் பெற்றாக வேண்டும். இல்லாவிடில் தனிச்சிறப்புத் திறமையும், அறிவும் உள்ள மனிதன் ஒத்திசைவாக வளர்ச்சியடைந்த நபராக ஆவதையும் விட நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நாயைப் போன்று மிகவும் நெருக்கமாக அதற்கு ஒத்திருப்பான்.”

உயர்கல்வி மக்கள் நலனுக்கானதாக மீண்டும் மாற்றப்படும் போது மட்டுமே இது போன்ற சூழ்நிலையை உருவாக்க முடியும். உயர்கல்வியைப் பயிலும் மாணவன் மனித விழுமியங்கள், சமூக வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றைப் பற்றிய உணர்வுகளைப் பெற்றவனாக இருக்க வேண்டும். மேலும் இது எத்தகைய பாகுபாடுமில்லாமல் எல்லாேருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சுயேச்சை யான முறையில் சுத்திகரிக்கப்பட்ட கல்வியமைப்பு சாத்தியமா என்பதே வினாவாகும்?

உலகத்திற்கே ஆணையைப் பிறப்பிக்கக் கூடிய கார்ப்பாெரேட் சக்திகளின் மேலாேங்கிய அதிகாரம் என்ற காட்சிப் புலத்தில் இது வேர்காெண்டுள்ளது. எனவே இதற்கான தீர்வு ஏகாதிபத்தியச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே அடங்கியுள்ளது. எல்லாவிதமான பாகுபாடுகள், சுரண்டல், ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற மனிதாயமிக்க அரசியல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதாக இதன் விளைவு இருக்கும். இந்த முற்பாேக்கான சூழல் கல்வி அமைப்பிலும் கூட முன்னேற்றத்தை அடைவதைச் சாத்தியமாக்கும். சமூக உணர்வு பெற்ற சக்திகள் ஒன்றுபட்டு இந்தக் குறிக்காேளை அடையப் பெறுவதை நோக்கி நகர்வார்கள் என நம்புவாேமாக.

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
♦மத்திய அரசே! மோடி அரசே!!
மருத்துவத்துறையில் திணிக்கப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்!

♦ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித்துறையை தனியார்மயமாக்கும், வணிகமயமாக்கும், கார்ப்பரேட்மயமாக்கும், புதிய காலனிய கல்விக் கொள்கையை எதிர்ப்பாேம்!

♦கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுவதை எதிர்ப்பாேம்! 

♦தகுதி-தரம் என்ற பெயரால் அனைத்து வடிகட்டும் தேர்வுகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை பறிப்பதே! ரத்து செய்ய போராடுவாேம்!!

♦மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்!

♦கல்விக்கடனை வசூலிப்பது என்ற பேரால் கந்துவட்டி பாணியில் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் குழுமங்களிடம் கடன் வசூலை ஒப்படைத்துள்ளதை முறியடிப்போம்!

♦கல்வி நிலையங்களில் அன்றாடம் நடைபெறும் ஊழல் முறைகேடுகள், லஞ்சலாவன்யங்கள், கொலை மற்றும் தற்காெலைகளுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடு! கல்வி நிலைய அங்கீகாரத்தை ரத்து செய்! பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், பெற்றாேர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கு!

♦ஆரம்பக் கல்வி நிலையங்கள் முதல் ஆராய்ச்சி கல்வி நிலையங்கள் வரை தொடரும் கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களை ஆதரிப்பாேம்! மாணவர் விராேத, மக்கள் விராேத போக்குகளை முறியடிப்பாேம்!

♦பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற போராடுவாேம்! வேலையில்லா பட்டதாரிகளை வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி வரும் அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை எதிர்த்துப் போராடுவாேம்!

♦ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக, கட்டாயமாக, தாய்மாெழியில் கிடைக்கப் போராடுவாேம்! இந்தி சமஸ்கிருதம் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்ப்பாேம்!

♦ தகுதி திறமையின் பெயரால் விஞ்ஞானத்திற்கு எதிரான பகுத்தறிவுக்கு ஒவ்வாத காவிமய கார்ப்பரேட்மய புதிய காலனிய பிற்பாேக்குக் கல்வியை எதிர்ப்பாேம்!

♦மதச்சார்பற்ற, விஞ்ஞானபூர்வமான தேசிய, ஜனநாயக கல்விக்குப் போராடுவாேம்!

        ♦♦♦♦♦♦♦♦♦♦

image

இந்தியப் புரட்சிப் பாதைக்கான அறிமுகம் (1)♦இ.க.க.(மா-லெ)

2009-ம் ஆண்டில் நடைபெற்ற இ.க.க.(மா-லெ) கட்சியின் அகில இந்தியச் சிறப்பு மாநாட்டில் ஏற்கப்பட்ட ஆவணம்
image

வழியைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னர் வேறுபட்ட வரலாற்று அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சூழல்களில் இந்திய மக்கள் ஆற்றிய பாத்திரத்தைப் பற்றிப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
மேலும் அவர்கள் எவ்வாறு தங்களை அணிதிரட்டி அமைப்பாக்கிக் கொண்டார்கள், போராட்டத்திற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில் எத்தகைய போராட்ட சக்தியாற்றல்களைப் பெற்றிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும்.
அவர்களை  எத்தகைய தத்துவமும், கொள்கைகளும் வழிநடத்தின அவைகள் விளைவித்த தீர்வுகள் யாவை என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும்.
நமது கடந்த காலத் தலைமுறைகளின் போராட்டங்களிலிருந்து எந்தப் பாதையை பின்பற்றுவது என்பதற்கான புரிதலை ஓரளவுக்கு வந்தடைவதே இந்த வினாவுக்கான விடையாகும்.
இந்தப் போராட்டங்களை ஆய்வு செய்து, படிப்பினைகளைப் பெற்று தற்போதைய சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவை எப்பாேது ஒரே  நாடாக கருதிப் பார்க்க முடிந்தது என்பது பற்றி நாம் ஆராயத் தொடங்கிய போது அதற்கான சரியான பதிலை நம்மால் பெற முடியவில்லை.
சாதாரண மக்கள் மீது ஆதிக்கம் பெற்று நிலப்பிரபுத்துவ, முடியரசுகளும், பெரும் பேரரசுகளும் தோற்றமெடுத்தன.
அவை உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட செல்வங்களை அபகரித்துக் கொண்டு தங்களின் பேரரசுகளைக் கட்டியமைத்தன.

நமது நாட்டினுள் போர்ச்சுக்கீசிய, டச்சு மற்றும் பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் நுழைந்து நாட்டின் சில பகுதிகளில் ஆட்சி நடத்தினர்.
ஆனால், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், மரபுகள், பழங்குடிகள், தேசிய இனங்கள், சாதிகள், மாறுபட்ட புவியியல் சூழல்கள், சுற்றுச் சூழல்கள் ஆகியவற்றைக் கொண்ட நமது நாட்டில் மையப்படுத்தப்பட்ட ஆட்சியை நிறுவியவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள்தான்.

இந்தியாவிலுள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சக்திகள், சமூகக் குழுக்கள் ஆகியவை முன்னேற்றத்தை நோக்கி அணிவகுப்பதைத் தடுக்கும் வகையிலான மூலயுத்திகளை பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தினர்.

இரண்டு கூர்முனைகளைக் கொண்ட கத்தரியைப் போல பல்வேறு சமூகக் குழுக்களையும் பகுதிகளையும் மிகக் கொடுமையான சூறையாடலுக்கும் அடக்குமுறைக்கும் ஆட்படுத்தினர்.

மாரக்ஸ் அவர்களும் கொசாம்பி போன்ற அறிஞர்களும் காலனியவாதிகளின் வருகைக்கு முன் இந்தியாவில் நிலவிய இயற்கையோடியைந்த, தன்னிறைவுக் கிராமப்புற பொருளாதாரத்தை ஆசியபாணி உற்பத்திமுறை எனப் பண்புமயப்படுத்தினர்.

இத்தகைய உற்பத்தி முறையின் கீழ் இந்தியச் சமூகம் முன்னேறியதா? பின்னடைவுக்கு ஆளானதா? அல்லது தேக்கமடைந்ததா? என்பது இன்றைய நிலையில் பயனற்ற கேள்விகளாகும்.
ஆயினும் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பிரிட்டீஷாரின் தலையீட்டையும், ஆணைகளையும் எந்த ஒருவரும் ஆதரிக்கவில்லை.
நீண்டகால ஆசியாவிலுள்ள ஆட்சியாளர்கள் மூன்று வகைப்பட்ட நிர்வாகப் பிரிவுகளையும் அதற்கான பணிகளையும் பயன்படுத்தி வந்தனர்.

1) பொருளாதாரப் பிரிவு: இப்பிரிவு வரி வசூலிப்பு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மூலாதாரங்களைச் சுறையாடுவதில் ஈடுபட்டது.

2)போர்ப் பிரிவு: இப்பிரிவு பிரதேசத்திற்கு வெளியேயுள்ள மக்களைச் சூறையாடுவதில் ஈடுபட்டது.

3) உள்நாட்டுப் போர்ப் பிரிவு: பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் முந்தைய படையெடுப்பாளர்களிடமிருந்து முதல் இரண்டு கடமைகளை மட்டுமே எடுத்துக் கொண்டனர் மூன்றாவது கடைமையைக் கைவிட்டனர்.
ஐராேப்பிய ஆட்சியாளர்கள் அறிந்திராத வழிமுறை இது.
இதன் விளைவாக இந்திய விவசாயப் பொருளாதாரம் முழுமையாக அழிவுக்கு ஆளானது.

முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவுவதற்கு ஐராேப்பிய முதலாளிகள் செய்ததைப் போன்று இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கும் பணியை பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மேற்காெள்ளவில்லை.

இந்தியாவில் பல பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்துவதற்குத் தடையாக இருந்த இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தை அழித்தாெழிக்கும் மூல உத்தியை அவர்கள் பின்பற்றினர்.
அதே நேரத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாத்துக் கொண்டே தங்களின் காலனி ஆதிக்கக் கொள்கைக்கு சேவை புரியும் வகையிலான புதிய அமைப்பை மெதுவாகத் தோற்றுவித்தனர்.

அவர்கள் நிலப்பிரபுத்துவ சக்திக்கு எதிராக மென்மையான அதே போன்று வன்மையான முறைகளைப் பயன்படுத்தி அவர்களை தங்களின் சமூக அடித்தளமாக மாற்றி அமைத்துத் தங்களின் பேரரசை விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் செய்தனர்.

தங்களின் ஏகாதிபத்திய இயல்புக்கு உண்மையானவர்களாக இருக்கும் வகையில் இந்திய மக்களின் மீது மிகவும் கொடூரமான ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்தினர்.
இது அவர்களின் அக விருப்பங்களுக்கு முரணாக இன்னாெரு வழியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய இனச்சமுதாயங்களிடையே அரசியல், பொருாதார, கலாச்சார உறவுகளை வளர்ச்சியடையச் செய்வதில் கொண்டுவிட்டது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழான தாங்க முடியாத நிலைமைகள் இந்திய மக்களுக்கு வேறு வழியைத் தேடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.
அவர்களின் தேசிய ஜனநாயகப் பேரார்வங்கள் சிறு கலகங்கள் என்ற வடிவத்தில் வெளிப்பட்டன.
மென்மையான கண்டன இயக்கங்கள் தொடங்கப்பட்டன.
அவை கிராமங்களை விட்டு வெளிச்செல்வது, தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காகச் சொந்த கிராமங்களிலிருந்து ஓடிப் பிற கிராமங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருப்பது, நிலங்களைத் தரிசாக போட்டுவிட்டு தூராந்திரப் பெயர் தெரியாத இடங்களுக்குச் செல்வது போன்ற மாறுபட்ட வடிவங்களை எடுத்தன.

இவைகள் மட்டுமல்லாமல், மிருகத்தனமான நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களையும், காலனியாதிக்கவாதிகளையும் எதிர்த்த போராட்டங்களும், கலகங்களும் வெடித்தெழுந்ததை நமது நாட்டினது வரலாற்றில் காண முடிந்தது.
தங்கள் வசமிருந்த மரபுவழிப்பட்ட ஆயுதங்களுடன் விவசாயிகள் நடத்திய ஆயுதமேந்திய கலகங்களின் பல நிகழ்வுகளைக் காண முடிந்தது.

1858-ம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் மன்னர்களும், கைவினைஞர்களும், விவசாயிகளும் காலனி ஆட்சியாளர்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தினர்.

அவையாவன:
1820 மற்றும் 1837-ல் நடைபெற்ற கோல்களின் கலகம்

1836-க்கும் 1854-க்கும் இடையில் 22 முறைகள் வருவாய் வரி வசூலிப்பதை எதிர்த்து மலபார் விவசாயிகள் நடத்திய கலகங்கள் தக்கானத்தில் (பூனா,அஹமத் நகர் போன்ற மகாராஷ்டிர மாநிலத்தின் பகுதிகளில்) 1853-ம் ஆண்டிற்கும் 1875-ம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்:

1855-56 ம் ஆண்டுகளில் பீகார், வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சந்தால் விவசாயிகளின் கலகங்கள்.

1854 மற்றும் 1960 களில் வங்கத்திலும் பீகாரிலும் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்.

1857-ல் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர் என்று பிரபலமாக அறியப்பட்ட சிப்பாய்க் கலகம்.
இக்கலகம் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்ட பரவலான பகுதிகளில் முஸ்லீம் மற்றும் இந்து மதத்தினரால் ஒன்றுபட்டு நடத்தப்பட்டதாகும்.

1859-1873 ம் ஆண்டுகளில் பாட்னா மற்றும் சிராஜ்கஞ்ச் (வங்கம்) ஆகிய இடங்களைச் சுற்றிலுமாக நடந்த விவசாயிகளின் போராட்டங்கள்

1859-1921 ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாப்ளா விவசாயிகளின் போராட்டங்கள்.

மென்மையான கண்டன இயக்கங்கள் தொடங்கப்பட்டன.
அவை கிராமங்களை விட்டு வெளிச் செல்வது, தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காகச் சொந்த கிராமங்களிலிருந்து ஓடிப் பிற கிராமங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருப்பது, நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு தூராந்திரப் பெயர் தெரியாத இடங்களுக்குச் செல்வது போன்ற மாறுபட்ட வடிவங்களை எடுத்தன.

இவைகள் மட்டுமல்லாமல், மிருகத்தனமான நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களையும், காலனியாதிக்கவாதிகளையும் எதிர்த்த போராட்டங்களும், கலகங்களும் வெடித்தெழுந்ததை நமது நாட்டினது வரலாற்றில் காண முடிந்தது.

தங்கள் வசமிருந்த மரபு வழிப்பட்ட ஆயுதங்களுடன் விவசாயிகள் நடத்திய ஆயுதமேந்திய கலகங்களின் பல நிகழ்வுகளைக் காண முடிந்தது.

1858-ம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும், மன்னர்களும் கைவினைஞர்களும் விவசாயிகளும் காலனி ஆட்சியாளர்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தினர் அவையாவன:

1820 மற்றும் 1837-ல் நடைபெற்ற கோல்களின் கலகம்,

1836-க்கும் 1854-க்கும் இடையில் 22 முறைகள் வருவாய் வரி வசூலிப்பதை எதிர்த்து மலபார் விவசாயிகள் நடத்திய கலகங்கள் தக்கானத்தில் (பூனா, அஹமத் நகர் போன்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் பகுதிகளில்) 1853-ம் ஆண்டிற்கும் 1857-ம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்:

1855-56 ம் ஆண்டுகளில் பீகார், வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சந்தால் விவசாயிகளின் கலகங்கள்,
image

1854 மற்றும் 1860 களில் வங்கத்திலும் பீகாரிலும் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்,

1857-ல் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர் என்று பிரபலமாக அறியப்பட்ட சிப்பாய்க் கலகம்.
இக்கலகம் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்ட பரவலான பகுதிகளில் முஸ்லீம் மற்றும் இந்து மதத்தினரால் ஒன்றுபட்டு நடத்தப்பட்டதாகும்.
image

1859-1873 ம் ஆண்டுகளில் பாட்னா மற்றும் சிராஜ்கஞ்ச்(வங்கம்) ஆகிய இடங்களைச் சுற்றிலுமாக நடந்த விவசாயிகளின் போராட்டங்கள்.

1859-1921 ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாப்ளா விவசாயிகளின் போராட்டங்கள்,
image

1866-1868 ம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் தர்பங்கா, சம்பரான் ஆகிய இடங்களில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்,

1873 ம் ஆண்டிலும்,மீண்டும் 1890-ம் ஆண்டிலும் கிழக்கு வங்காளத்திலுள்ள ஜெஸ்சாேரில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்,

1879-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராம்பாவில் நடைபெற்ற கோயாக்களின் கலகம்,

1893-94 ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநில விவசாயிகள் வருவாய் வரியைக் கட்ட மறுத்ததற்காக அவர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதற்கு எதிராக நடைபெற்ற விவசாயக் கலகங்கள்,

1895-1901 ம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற முண்டாக்களின் கலகங்கள்,

நிலப்பிரபுக்கள் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிடும் போது விவசாயிகள், கைவினைஞர்கள் ஆகிய உற்பத்திச் சக்திகள் நடத்திய போராட்டங்கள் அதிகமானவை என்பதாேடு, இவர்கள் நடத்திய போராட்டங்கள் எண்ணிக்கையிலும் பரப்பிலும் அதிகப் புகழ் பெற்றவையாகவும், அதிகப் பிரபலமடைந்தவையாகவும் இருந்தன.
image

♦♦♦♦♦♦♦♦♦

………………தொடரும்

இந்தியப் புரட்சிக்கான பாதை♦இ.க.க.(மா-லெ)

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இ.க.க.(மா-லெ)-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
image

இந்தியா பல்வேறு தேசிய இனங்கள்,இனக்குழுக்கள்,மொழிகள்,பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட பெரும் மக்கள் தொகையை கொண்ட பரந்துபட்ட நாடாகும்.
அதிகார மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்தியா ஒரு அரைக் காலனி அரை நிலவுடமை நாடாக இருந்து வருகிறது.
தரகுப் பண்புடைய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியாேரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசு ஏகாதிபத்தியங்களின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குச் சேவகம் புரிந்து வருவதாேடு அவற்றை பாதுகாத்தும் வருகிறது.

எனவே இந்தியப் புரட்சிக் கட்டம் முதன்மையாக விவசாயப் புரட்சியை அச்சாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியாகும்.
எனவே புரட்சியின் இலக்குகள் என்பவை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு அதிகார வர்க்க முதலாளியம் ஆகியவையாகும்.
இந்த நோக்கத்தை அடையப் பெறுவதற்கான மூன்று மந்திரக் கோல்கள் பின்வருமாறு, அவையாவன ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் படை, ஐக்கிய முன்னணி ஆகியவையே ஆகும்.

2) இப்பாேதுள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முதன்மையாக 1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் முன்மொழியப்பட்டுள்ள சட்டமியற்றும் அமைப்புகளும், வயது வந்தாேருக்கு வாக்குரிமையும் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதற்கானதே தவிர வேறு ஒன்றல்ல.

இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதை நிறுவ முடியாதபடி அடிப்படைக் கட்டமைப்பைப் பாதிக்காத வகையில் மேற்கட்டுமானத்தில் ஆளும் வர்க்கங்கள் சில மாற்றங்களைச் செய்துள்ளன.
உண்மையில் ஆளும் வர்க்கங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார அரசியல் கொள்கைகள் காலனிய இந்தியா அரைக்காலனி அரைநிலவுடமை நாடாக மாறியுள்ளதைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

3)அப்படியாயின் புரட்சிக்கான பாதைதான் எது?
சந்தேகத்திற்கிடமின்றிப் பிறப்புரட்சிகளின் பாதையைப் போன்றே ஆயுதப் புரட்சிப் பாதையும் நிலவும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தை ஆயுதமேந்தித் தூக்கி எறிவதுதான் இங்கே ரஷ்யா, சீனா உள்ளிட்டு பல்வேறு நாடுகளில் ஆயுதப் புரட்சி நடந்துள்ளதை நாம் குறிப்பிட்டுக் கூறலாம்.
ஒவ்வாெரு நேரத்திலும் மீண்டும் மீண்டும் ரஷ்யப் பாதையைப் பின்பற்ற வேண்டுமா? சீனப் பாதையைப் பின்பற்ற வேண்டுமா? என்று விவாதிக்கப்படுகிறது.
நாம் தெள்ளத்தெளிவாக கூற விரும்புவது யாதெனில் இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சி இந்தியப் பாதையில் நிறைவு செய்யப்படும் என்பதுதான்.
அதே நேரத்தில் ரஷ்ய சீனப் புரட்சிகள் உள்ளிட்டு உலகத்தில் நடைபெற்ற பிற புரட்சிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.
இங்கு மீண்டும் நமக்குச் சொந்தமான கடந்தகால தற்பாேதைய புரட்சிகரப் போராட்டங்களின் அனுபவங்களுக்கு நாம் அழுத்தமளிக்க வேண்டும்.

4) இந்தியா ஒரு பின்தங்கிய நாடாகும், சமூகத்தின் வளர்ச்சியில் சமச்சீரற்ற தன்மை நிலவுகிறது.இந்தியா தனக்கே உரிய குறிப்பான தன்மைகளைக் கொண்டுள்ளது.
எனவே இங்கு இயக்கங்களின் வளர்ச்சியும்கூட பகுதி அல்லது பகுதிகளின் துல்லியமான சூழலுக்கேற்ப சமச்சீரற்றதாக இருக்கிறது.

சீனம்,வியட்நாம் உள்ளிட்ட பிற பின்தங்கிய நாடுகளின் மக்கள் யுத்த அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடியவையாகவே உள்ளன. நாம் அவற்றை ஆராய்ந்தறிந்து நமது புரட்சியின் குறிப்பான நடைமுறைகளில் அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
நமது நாட்டின் குறிப்பான சூழலுக்கேற்ப மக்கள் யுத்தக் கோட்பாட்டை நாம் நடைமுறைப் படுத்தும்போது நாம் இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள்,விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள் ஆகியாேரின் போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களை மிகக் குறிப்பாகத் தெலுங்கானா, நக்சல்பாரிப் போராட்ட அனுபவங்களைத் தொகுத்து ஆராய வேண்டும். மக்கள் யுத்தத்திற்காக மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அமைப்பாக்கி அணிதிரட்டிப் பங்கேற்க வைப்பதன் மூலம் மட்டுமே மக்கள் யுத்தத்தை நம்மால் நடத்த முடியும்.
எப்படியிருப்பினும் புரட்சியின் சில வளர்ச்சிக் கட்டங்களில் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், மக்கள் ஆயுதமேந்திய பேரெழுச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்பை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

புரட்சிக்கு முந்தைய சீனம், மற்றும் பிற காலனிய அரைக் காலனிய நாடுகளைப் போன்றல்லாமல் இந்தியா மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசுக் கட்டமைப்பையும் ஒரு பாராளுமன்றத்தையும், நன்றாகக் கட்டியமைக்கப்பட்ட ராணுவத்தையும், மிகவும் வளர்ச்சியடைந்த தகவல் தொடர்பு அமைப்பையும், உயர்ந்த அளவிலான தொழில்மயமாக்கலையும் நகரமயமாக்கலையும் கொண்டுள்ளது.
இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும்கூட, பண்பு மற்றும் நோக்கங்கள் ஆகியவையும், நீண்டகால மக்கள் யுத்தக் கோட்பாடும் அந்நாடுகளுக்குச் சமமாக இங்கும் நடைமுறைப்படுத்தத் தக்கவையாகும்.
நமது செயல் உத்தியை வகுக்கும் போது சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடன் உள்ள ஒத்த தன்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேறுபட்டத் தன்மை என்பது ஒரு ஆயுதப் புரட்சியின் மூலம் ஆயுதமநே்திய எதிர்ப்புரட்சியை சீனம் சந்தித்து வந்தது.
இந்தியாவைப் போன்று சீனத்தில் பாராளுமன்றம் இல்லை.
சீனத்தில் மக்கள் திரள் இயக்கங்களுக்கு எந்தச் சட்ட வகைப்பட்ட வாய்ப்புகளும் இருக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி அங்கு ஆரம்பத்திலிருந்தே சட்டவிராேத அமைப்பாக ஆக்கப்பட்டிருந்தது இந்தியாவுடன் ஒப்பிடும் போது மலைப்பாங்கான பிரதேசங்கள் சீனத்தில் மிகவும் பரவலாக இருந்தது.

ஆயினும் ஒத்தத் தன்மைகளும் உண்டு, விடுதலைக்கு முந்திய சீனம் ஒரு அரைக்காலனி அரை நிலப்பிரபுத்துவ நாடு என்பதாேடு அடிப்படையில் ஒரு விவசாய நாடும் ஆகும்,
அங்கும் புரட்சியின் இலக்கு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளியம் ஆகும்.
புரட்சியின் கட்டமும் புதிய ஜனநாயகப் புரட்சி ஆகும், ஏறத்தாழ இந்த அம்சங்கள் எல்லாமே இந்தியாவில் உள்ளன.

5) மார்க்சிய-லெனினிய வாதிகளாகிய நாம் ஒவ்வாெரு புரட்சியும் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை நம்புகிறாேம்.
மார்க்சிய-லெனினிய வாதிகள் சரியான மூல உத்தியையும், செயல் உத்தியையும் தீர்மாணிப்பதன் மூலம் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி சாதகமற்ற அம்சங்களைக் கடக்கிறாேம்.

இந்தியாவின் மைய மற்றும் எல்லையோரப் பிரதேசங்களில் பெருமளவில் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவை தொடாத பின்தங்கிய பகுதிகளாக உள்ளன.
இன்னும் சிறப்பாகக் கூற வேண்டுமெனில் தகவல் தொடர்புகள் அற்பமானதாகவும் திறனற்றதாகவும் உள்ளன.
மேலும் இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளதாேடு கடுமையாகச் சுரண்டப்படுவதால் அதிகரித்த அளவில் ஆயுதப் புரட்சிக்குத் தயாராக உள்ளனர்.

மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்கள் மீதும் அரசின் ஒடுக்குமுறை, புவியியல் ரீதியான சூழல், முறையான போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு இல்லாமை ஆகிய எல்லாமுமாகச் சேர்ந்து ஆயுதப் புரட்சிக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த சூழல்களைச் சாதகமாகக் கொண்டு நாகர்கள், மிசாேக்கள், மற்றும் பிற தேசிய இனங்கள், ஆயுதப்பாேராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

இவைகளும் கூட நமது புரட்சிக்குச் சாதகமானவை ஆகும்.
கோட்பாட்டளவில் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களையும், உரிமைகளையும் நாம் ஆதரிக்கிறாேம்.அதே நேரத்தில் இவற்றை நோக்கிக் குறிப்பான நிலையை எடுப்பதற்கு முன்னால் நாம் ஒவ்வாெரு போராட்டத்தையும் துல்லியமாக ஆராய்கிறாேம்.

இந்திய ஆளும் வர்க்கங்களும் ஏகாதிபத்தியமும் அவர்களைப் பிளவுபடுத்திச் சகாேதர யுத்தங்களில் சிக்க வைக்கும் சூழல்களுக்கு இரையாகாமல் பொது எதிரிக்கு எதிராகத் தங்களின் போராட்டத்தை நடத்தவும், நிலப்பிரபுத்துவம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அடிமை நுகத்தடியை உடைத்தெறிந்து, தங்களை விடுவித்துக் கொள்ளவும் புதிய ஜனநாயக சமூகத்தைப் படைப்பதற்கும் இந்திய மக்களிடையேயான ஒடுக்கப்படும் மற்றும் சுரண்டப்படும் மக்களின் போராட்டங்களாேடு ஐக்கியப்படவும் செய்தால் மட்டுமே தேசிய இனங்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கவும் அடையப் பெறவும் முடியும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளாேம்.

இந்தியப் புரட்சியை இந்திய மக்கள் வென்றெடுப்பார்கள்.
இப்புரட்சிக்குத் தலைமையேற்கும் பாட்டாளி வர்க்கம் தேசியச் சர்வதேசியச் சூழல்களிலிருந்து எப்பாேதும் சாதகமானவற்றை எடுத்துக்கொள்ளும்.
ஒரு மக்கள் யுத்தத்தில் இதுவே அடிப்படையானதாகும்.

6) நமது நாட்டில் எல்லைக்குட்பட்ட ஜனநாயக உரிமைகளை உடைய ஒரு பாராளுமன்ற அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பிலுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளை அவைகள் எவ்வளவுதான் எல்லைக்கு உட்பட்டதாக இருப்பினும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள்திரள் அமைப்புகளைக் கட்டவேண்டும்.

மக்கள் திரள் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட்டாக வேண்டும்.
சட்டப்பூர்வமான வாய்ப்புகள் உள்ள காலகட்டம் முழுவதிலும் போராட்ட உணர்வை வளர்த்தெடுப்பதற்காக பெரிய எண்ணிக்கையில் மக்கள் திரட்டப்பட வேண்டும் என்பதாேடு அவர்கள் அமைப்பாக்கப்படவும் அரசியல் உணர்வுள்ளாேராக ஆக்கப்படவும் வேண்டும்.
எப்படியிருப்பினும் எல்லைக்குட்பட்ட உரிமைகளாேடு கூடிய பாராளுமன்ற அமைப்பின் கீழும் கூட ஆளும் வர்க்கங்கள் மக்கள் திரள் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும், எனவே நம்மால் சட்டப்பூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கட்டப்படும் அமைப்புகளும், நடத்தப்படும் போராட்டங்களும், சட்ட வரம்புகளைத் தாண்டி மோதுதல் என்ற வழியை நோக்கி முன்னாேக்கிப் போர்க்குணமுள்ள போராட்ட வடிவங்களை எடுக்க வேண்டும்.

மக்களை ஆயுதப் புரட்சியை நோக்கி வழி நடத்துவதும் போராட்டத்தின் முதன்மை வடிவமாக ஆயுதப் பாேராட்டத்தை கட்டியமைப்பதுமே நமது கடமையாகும்.
இந்தப் பின்னணியில் பாராளுமன்றப் பாதையைத் திட்டவட்டமாக நிராகரிக்கும் அதே நேரத்தில் தேர்தல்களைப் புறக்கணிப்பது அல்லது பங்கேற்பது என்பது ஒரு செயலுத்தியே என்பதை நினைவில் கொண்டாக வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சூழலில் என்ன செயலுத்தியைப் பயன்படுத்துவது என்பது குறிப்பான சூழலை சார்ந்ததே ஆகும்.

7) நாம் திட்டவட்டமான பாராளுமன்றப் பாதையை நிராகரிக்கிறாேம்.
அதே நேரத்தில் அராஜகவாதத்தையும், பயங்கரவாதத்தையும் எல்லா வடிவங்களிலும் நிராகரிக்கிறாேம்.
ஏனெனில் இந்த இரண்டு போக்குகளுமே மார்க்சிய லெனினியத்திற்கு அந்நியமானவை ஆகும்.

இந்த இரண்டு அந்நிய போக்குகளையும் நிராகரிக்கும் அதே வேளையில் தற்பாேதுள்ள அரசு அதிகாரத்தைத் தூக்கியெறியவும் அரசியல் அதிகாரத்தைப் பற்றிக் கொள்வதற்கும் எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவாேம்.

ஜனநாயக இயக்கங்களுக்கான எல்லைக்கு உட்பட்ட உரிமைகளும், வாய்ப்புகளும் கூட நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை நமது அனுபவம் காட்டுகிறது.
எனவே சட்டபூர்வமான செயல்முறைகள் சட்டபூர்வமற்ற செயல்முறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் அதே போல் வெளிப்படையான அமைப்புகளை இரகசியமான அமைப்புகளுடன் ஒன்றிணைக்க வேண்டும்.

ஆயினும் பல்வேறு போராட்டங்கள் ஆயுதப் போராட்டம் என்ற வடிவத்தை அடையாத வரையில், சட்டபூர்வமான இயக்கங்களும் மக்கள் திரள் அமைப்புகளும் மற்றும் மக்கள் திரள் போராட்டங்களும் ஒரு முதன்மையான போராட்ட வடிவம் என்ற வகையில் ஆயுதப் போராட்டத்தைக் கட்டியமைக்க உதவவும் சேவை புரியவும் செய்யும், ஆயுதப் போராட்ட வடிவம் என்ற நிலையை எட்டும் போது பிற வடிவங்களிலான போராட்டங்களும் அமைப்புகளும் குறிப்பான சூழலுக்கு ஏற்ப ஆயுதப் போராட்டத்துடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்படும்.

எல்லாப் போர்க்குணமுள்ள போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்கள் அல்ல என்பதை நினைவில் கொண்டாக வேண்டும்.
விவசாயப் போராட்டங்கள் சில தீவிரமான வடிவத்தை எடுக்கக்கூடும் ஆனால் இவற்றை ஆயுதப் போராட்டம் என்று சொல்லிவிட முடியாது.
நமது புறநிலை விருப்பங்களுக்கு இயைந்திராத வகையில் ஒரு சிறு பகுதியில் நடைபெறும் போர்க்குணமுள்ள போராட்டம் ஆயுதமேந்திய விவசாயிகள் போராட்டம் என்ற வடிவத்தை எடுக்கக்கூடும்.

எப்படியிருப்பினும் இது போன்ற சூழலில் ஒரு முறை ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டுவிட்டால் நாம் அதை தடுக்கவாே கண்டிக்கவாே கூடாது.
குறிப்பான சூழலுக்கு ஏற்ப அந்தப் போராட்டம் மேற்காெண்டு பெறும் கூடுதலான அனுபவங்களின் மூலம் நீடித்துத் தொடருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்பாேது பொருளாதார அரசியல் பிரச்சனைகள் மீதான போராட்டங்களை வளர்த்தெடுத்து முதன்மையான போராட்ட வடிவம் என்ற நிலைக்கு அவற்றை மாற்றமடையச் செய்ய வேண்டும்.

சட்டப்பூர்வமான பணிகளுக்கான பரப்புரைகளையும் தயாரிப்புகளையும் மேற்காெள்வதையும், மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டியமைப்பதையும் நோக்கி நாம் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

8) ஆயுதப் புரட்சியைப் பற்றிய நமது கருத்தாக்கம் மார்க்சியம்-லெனினியம்-மாவாேவின் சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது ஒன்று மட்டுமே நீண்டகால மக்கள் யுத்தமாக இருக்க முடியும்.
மக்கள் படையைக் கட்டியமைப்பதும் மக்கள் யுத்தத்தை நடத்துவதும் தவிர்க்க முடியாதபடி மக்களின் ஆயுதப் போராட்டத்துடன் இணைப்புக் கொண்டதாகும்.
இது ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் திட்டத்தை க் கொண்டது என்பதாேடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்தப்படுவதும் ஆகும்.

9) தற்பாேது விவசாயப் புரட்சியை முதன்மையான அச்சாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் நாம் இருக்கிறாேம்.
விவசாயிகளை ஆதாரமாகக் கொண்டு கிராமப்புறங்களில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்கள் நிலையான ஜனநாயகத்திற்கான சீர்திருத்தங்கள் நிலச்சீர்திருத்தங்கள் ஆகியவற்றாேடு இணைக்கப்பட வேண்டும்.
மேலும் மக்கள் அதிகாரத்திற்கான அமைப்புகளைக் கட்டியமைப்பதாேடும் நாடு தழுவி நன்றாகப் பின்னி அமைக்கப்பட்ட மக்கள் திரள் அமைப்புகளை (குறிப்பாக விவசாய மக்கள் திரளினரைக் கொண்டு) கட்டியமைப்பதாேடு இணைக்கப்பட வேண்டும்.

உழைப்பவனுக்கே நிலம் என்பதை மைய முழக்கமாகக் கொண்ட விவசாயப் புரட்சியின் கடமை என்பது பெரும் நிலப்பிரபுக்களின் நிலம் மற்றும் அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் ஒரு வர்க்கம் என்ற முறையில் நிலவுடமை அரை நிலவுடமை நிலப்பிரபுக்களை இல்லாதாெழிப்பதையும் பறிமுதல் செய்தவற்றை நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்தளிப்பதையும், நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை தூக்கியெறிந்து அதனிடத்தில் மக்கள் அரசு அதிகாரத்தை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

9-அ) சாதிய அமைப்பு நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிரிக்க முடியாத பகுதியாகும்.
இவ்வமைப்பு காலனி ஆட்சியாளர்களாலும் தற்பாேதுள்ள தரகு ஆளும் வர்க்கங்களாலும் பாதுகாத்துத் தொடரச் செய்யப்படுகிறது.
எனவே சாதி ஒழிப்பிற்கான போராட்டம் விவசாயப் புரட்சியின் பிரிக்க முடியாத முக்கியமான பகுதியாக அமைகிறது, மேலும் அது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியும் ஆகும்.

ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற நகர்ப்புற உழைக்கும் மக்கள் ஆகியாேரைக் கொண்ட மக்கள் திரளினர் முதன்மையாகத் தலித் அல்லது பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே ஆவர்.
ஆளும் வர்க்கங்கள் தலித்துகளை எப்பாேதும் பிளவுபடுத்தி வைக்கவே முயற்சிக்கின்றனர்.
மேலும் சாதி அடிப்படையிலான பாகுபடுத்தலுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அவர்கள் நடத்தும் போராட்டங்களைச் சீர்குலைப்பதன் மூலம் ஏகாதிபத்தியத் தரகு அதிகார வர்க்க மூலதனம் மற்றும் நிலப்பிரபுத்துக் கூட்டுச்சதிகளை மூடி மறைத்துவிடலாம் என்ற நோக்குடன் அவர்களை அணிதிரட்டி வருகின்றனர்.

அவர்களை அமைப்பாகக் கட்டியமைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாகும்.
உயர் சாதியிலுள்ள ஏழைகளையும் தலித் சாதியிலுள்ள ஏழைகளையும் ஒற்றுமைப்படுத்துவதன் மூலம் நாம் ஒடுக்கப்படும் மக்களின் இயக்கங்களைப் பலப்படுத்த வேண்டும்.

சாதிப் பாகுபாடுகளுக்கும் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்கள் புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாக வளர்ச்சியடையும் போது மட்டுமே அப்போராட்டம் தனது உண்மையான இலக்கைச் சாதிக்க முடியும்.
அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியாக உள்ள மேல் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளிடம் ஆதிக்கச் சாதி மனப்பான்மை இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது, எனவே இந்தப் போக்கிலிருந்து மேல் சாதிகளைச் சார்ந்த ஏழைகளை மீளச் செய்வதற்கான முயற்சிகளை நாம் மேற்காெள்ள வேண்டும்.
இதற்காக நாம் பழமையான மரபு வழிப்பட்ட கருத்தியல்களை எதிர்ப்பதற்கு அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
சாதிகளைத் தாண்டி எழுச்சி பெறும் வகையில் வர்க்க அமைப்புகளில் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் நாம் ஒன்றுபடுத்தியாக வேண்டும்.

விவசாயப் புரட்சியில் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்காக ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் சாதீய அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை அமைப்பாக்க வேண்டியது அவசியமாகும்.

9-ஆ) நிலப்பிரபுத்துவம் பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்துகிறது
அது சிந்திக்க இயலாதவர்கள், முக்கியத்துவம் இல்லாதவர்கள் உரிமைகளற்றவர்கள் என்ற ஒருசார்பு நிலையில் பெண்களை இழிவுபடுத்தியுள்ளது.

ஏகாதிபத்தியம் பெண்களை ஒரு சரக்காகவும், வருமானத்திற்கான கருவியாகவும் கருதுகிறது.
இந்த இரண்டின் கூட்டுக் கலவையான தற்பாேதைய அமைப்பு பெண்களைப் படுபாதாளத்தில் தள்ளியுள்ளது.

எனவே நாம் நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணாதிக்க ஒடுக்குமுறை, ஆணாதிக்கக் கருத்தியல், ஆணாதிக்க குடும்ப அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் போராடியாக வேண்டும்.

9-இ) ஒரு விவசாயப் புரட்சி இயக்கத்தைக் கட்டியமைக்க ஒரு விவசாயப் புரட்சித் திட்டம் இருந்தாக வேண்டும்.
இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பொதுவான நிலப்பிரபுத்துவ உறவுகள் இருந்தாலும் கூட நிலப்பிரபுத்துவச் சுரண்டலின் வடிவங்களும் அளவுகளும், நிலக்குவியலும், நில உறவுகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது என்பதாேடு ஒரு மாநிலத்தின் உள்ளேயே கூட ஒரு பகுதிக்கும் இன்னாெரு பகுதிக்கும் இடையில் வேறுபட்டு உள்ளன.

மாநிலக் கிளைகள் அவற்றின் குறிப்பானத் தன்மைகளைக் கணக்கில் கொண்டு விவசாயப் புரட்சிக்கான திட்டத்தை வகுக்க வேண்டும்.
இதைப்பற்றி ஆய்வாே, பயனை விளைவிக்கக் கூடிய திட்டமாே, இல்லாவிட்டால் புரட்சிகர இயக்கமாே அல்லது மக்களின் ஆயுதப் போராட்டமாே சாத்தியமில்லை.

9-ஈ) இவ்வியக்கத்தின் பொறுத்தமான கட்டத்தில் ஆயுதப் புரட்சி (நிலப்பறிமுதல்) தொடங்கப்படும்.
மேலும் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், அராஜகவாதம்-அதிதீவிரவாதம் ஆகியவற்றின் வெளிப்பாடான தனிநபர் அழித்தாெழிப்புப் பாதைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது எந்த வகையிலேனும் விவசாயப் புரட்சிகர இயக்கத்தை குறைத்து மதிப்பிடுவாேமானால் அது ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவை தவிர்க்க முடியாதபடி இழக்கச் செய்யும் என்பதாேடு அரசு இயந்திரத்தின் தாக்குதலை எதிரிடுவதில் அவர்களை தயாரற்ற நிலைக்குத் தள்ளிவிடும்.

எனவே விவசாயப் புரட்சிகரப் போராட்டத்தின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிற அல்லது புறந்தள்ளுகிற எல்லாக் கோட்பாடுகளும் ஒன்று இடது அதிதீவிரமாகும், அல்லது வலது சந்தர்ப்பவாதமாகும்.
எனவே இவை நிராகரிக்கப்பட்டாக வேண்டும்.
இங்கு ஆயுதப் போராட்டமே மிக உயர்ந்த வடிவத்திலான வர்க்கப் போராட்டமாகும் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தக் கட்டத்தை அடைவதற்கு மக்கள் ஜனநாயக மற்றும் குடி உரிமைக்கான போராட்டங்கள் உட்பட எல்லா வகைப்பட்ட மக்கள் திரள் மற்றும் வர்க்கப் போராட்டத்தினூடே பயணிக்க வேண்டும்.
image

10) நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறும் போது நிலப்பிரபுக்கள், குண்டர்கள், காவல்துறையினர் ஆகியாேர் விவசாயிகளின் இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
இவர்களின் எதிர்புரட்சி முறையை எதிரிடுவதற்குக் கட்சி ஆரம்ப முதலே உள்ளூர் மட்டத்தில் தயார் நிலையிலுள்ள ஆயுதங்களுடன் மக்களைத் தயார்படுத்த வேண்டும், கட்சி புறச் சூழலுக்கு ஏற்பவும், மக்களின் தயார் நிலைக்கு ஏற்பவும் கிராமப்புறத் தொண்டர் குழுக்களையும், கிராமப்புறப் பாதுகாப்புக் குழுக்களையும் கட்ட வேண்டும்.

இது போன்ற விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைக்கும் போக்கினூடே சூழ்நிலையின் கோரலுக்கு ஏற்ப இயக்கத்திலுள்ள போர்க்குணம் கொண்டாேரைக் கொண்டு சுய பாதுகாப்புக் குழுக்களை அமைக்கலாம்.

மக்களை அமைப்பாக்குவதும் மக்களின் எதிர்ப்புக்குத் தலைமை கொடுப்பதும், மக்களின் இயக்கத்தைப் பாதுகாப்பதும், இக்குழுக்களின் கடமையாகும். எல்லாச் சாத்தியமான வடிவங்களிலும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

மக்கள் இயக்கத்தை அழிக்கும் நோக்குடன் அதிகார வர்க்கமும் காவல்துறையும் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
இதற்காக அரசு ஒடுக்குமுறை என்ற ஆயுதம், சட்டம் என்ற ஆயுதம் ஆகிய இரண்டு ஆயுதங்களையும் ஒருங்கிணைக்கும் என்பதாேடு இயக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து நசுக்குவதற்காகச் சலுகைகளையும் வழங்கும் இத்தகைய சூழலை எதிர்காெள்ளும் வகையில் இடர்பாடுகளிலிருந்து மீள்வதற்கு மக்களைப் பொறுமையாகத் தயார்படுத்த வேண்டும். முக்கியமான முன்னணித் தோழர்கள் மக்களிடையே இரகசியமாகப் பணிபுரிவது போன்ற சூழலுக்கு, பொறுத்தமான செயலுத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

11) கட்சியின் கடமை என்பது, நேரடி அனுபவத்தின் மூலம் ஆயுதமேந்திய எதிர்ப்புக்கான உணர்வினைப் பெறவும், தேவையான முறையில் தயாரிப்புகளுடன் இருக்கவும் மக்களுக்கு உதவுவதே ஆகும்.

விவசாயிகளின் புரட்சிகர இயக்கம் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்து மக்களுக்கு விநியாேகிப்பது மக்களின் ஜனநாயக அதிகாரத்தைக் கட்டியமைப்பது போன்ற மையமான பிரச்சனைகளாேடு இணைக்கப்படாவிட்டால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மேலும் வளர முடியாது.

நமது புரட்சியின் பின்னணியில் நமது நாட்டினது ஆயுதப்புரட்சி முதன்மையான முறையில் விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டமாகும்.
ஆயுதப் புரட்சியை தொடங்குவதற்குக் கட்சி நாட்டினது ஒட்டு மொத்தச் சூழலையும் மதிப்பிட வேண்டும் என்பதாேடு அந்தப் பகுதியின் புவியியல் சூழல், மனத்திட்பம், ஏதேனும் ஒரு வடிவில் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்பதற்கான மக்களின் தயார் நிலை ஆகியவற்றையும் மதிப்பிட வேண்டும்.

அதே போல பொருளாதார ரீதியில் தாக்குப்பிடிக்கும் தன்மை,
போராட்டத்தை நடத்துவதற்கான கட்சியின் பலம், தொடர்புடைய பகுதியிலாே, பகுதிகளிலாே மக்களிடமிருந்து எதிரி வர்க்கங்கள் தனிமைப்பட்டிருப்பது ஆகியவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டும் இது ஒரு அகில இந்தியக் கண்ணாேட்டத்தையும் செயலுத்தி ரீதியான திட்டமிடலையும் முறையாக சக்திகளை (படைகளை) முறைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் நிறுத்துவது போன்றவற்றையும் கோருகின்றன.

12) தளப்பிரதேசத்தை நிறுவுவது என்பது கடுமையான காரியமாகும்.
கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு செயலுத்திகளைப் பயன்படுத்தித் தளப்பிரதேசங்களை நிறுவ முயன்று கொண்டிருக்கின்றனர்.
பீகார், வங்கம், ஆந்திரப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் கடந்த 40 ஆண்டுகால அனுபவம் காட்டுவது யாதெனில் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் நிலப்பிரபுக்களின் பொருளாதார, சமூக, அரசியல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் உடைத்தெறிவதிலும் ஒரு கரு வடிவிலான உள்ளூர்மட்ட அதிகாரத்தை நிறுவுவதிலும் வெற்றி கண்டுள்ளனர் என்பதே ஆகும்.

ஆனால் ஆளும் வர்க்கங்களின் மையப்படுத்தப்பட்ட அரசை எதிர்காெள்ளும் போது இப் போராட்டம் வெற்றியடையவில்லை.
அதனினும் மேலாக புரட்சிகர சக்திகளைக் கட்டுப்படுத்துவதிலும் பெருமளவில் சேதாரத்தை விளைவிப்பதிலும் அரசு வெற்றியடைந்துள்ளது.
இந்தக் கட்டத்தில் சூழல் தேக்கமுற்றுள்ளது.
அதாவது,புரட்சிகர சக்திகள் அரசை அழித்துத் தளப்பிரதேசத்தை நிறுவும் ஆற்றல் மிக்கதாகவும் இல்லை அதே போல் அரசு புரட்சிகர சக்திகளை அழிக்கும் ஆற்றல் படைத்ததாகவும் இல்லை.

தளப்பிரதேசங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னால் பலபகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் மக்களினது ஆட்சி, அல்லது அதிகாரத்திற்கான போட்டி நிலவுகிற அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்தினரின் அதிகாரமும் தொடரும் என்ற பொருளில் இரட்டை அதிகாரம் நீண்ட நாளைக்குத் தொடரும் என்பதை நமது அனுபவம் காட்டுகிறது.
இது இந்தியப் புரட்சியின் குறிப்பான அம்சமாகும்.

இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் எதிரியைத் தோற்கடிக்கப் பொறுத்தமான செயலுத்தியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நிலப்பிரபுக்களின் பொருளாதார அரசியல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் அழித்தாெழித்து உள்ளூர் மட்டத்தில் மக்கள் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும்.

நாடு புரட்சிகர நெருக்கடியில் நுழையும் தருணத்தில் அரசை அழித்தாெழிப்பதற்கும், தளப்பிரதேசங்களை நிறுவுவதற்கும் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களை கட்டியமைப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
மேலும் அரசுடன் மோதுவதற்காக அகநிலைத் தயாரிப்புகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆயுதப்புரட்சிக்கான செயலுத்தி செயல்படுத்தப்படுமானால் இரட்டை அதிகாரமுள்ள அரசு என்ற நிலைமாறி தளப்பிரதேசங்களை அமைப்பது என்பது சாத்தியமாகும்.
நாம் அத்தகைய கட்டத்தை எட்டுவதற்கு எல்லா வடிவங்களிலான போராட்டங்களையும் நடத்தி எதிரியைத் தனிமைப்படுத்த வேண்டும்.

13) பசுமைப் புரட்சி, தாராளமயமாதல், என இ.பி, சிறப்புப் பொருளாதார மண்டலம், சிறப்பு விவசாய மண்டலம் போன்ற பல்வேறு பெயர்களின் கீழ் இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏகாதிபத்தியத்திற்கு ஏவல் புரியும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளால் நமது நாட்டினுள் ஏகாதிபத்தியச் சூரையாடல் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது.

நமது மனித மற்றும் இயற்கை மூலாதாரங்களை ஏகாதிபத்தியவாதிகள் ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்து வருகின்றனர்.
அதன் நச்சுக்கரங்கள் கிராமப்புறங்கள் வரை பரவியுள்ளன, மற்றும் அதன் அழிவுத் தரத்தக்க விளைவுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான விவசாயிகளின் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதபடி அவ்வளவு நெருக்கமாகப் பிணைத்துள்ளது.

நமது புரட்சியின் இரண்டு அடிப்படைக் கடமைகளான தேசியம் மற்றும் ஜனநாயகம் என்பன வேறுபட்டதும் ஒன்றுபட்டதும் ஆகும்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடாமல் நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிய முடியாது.
ஏனென்றால் ஏகாதிபத்தியமே அதற்கு முதன்மையாக முட்டுக் கொடுக்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முதன்மைப் புரட்சிகர சக்தியான விவசாயிகளைக் கட்டியமைத்து அவர்களை முழுமையாகப் பங்கு பெறச் செய்யாமல் ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுப்பதற்கான ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்த புரட்சிகரப் படைப்பிரிவைக் கட்டியமைக்க முடியாது.
எனவே திசை விலகலுக்கு ஆளாகாமல் விவசாயப் புரட்சிக் கடமையில் கவனத்தைக் குவிக்கும் போதே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எல்லாச் சாத்தியமான வடிவங்களிலும் பரப்புரைகள், கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவற்றை நாம் தீவிரப்படுத்தியாக வேண்டும்.

14) நமது நாட்டின் நகரங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனவே, நகரங்களிலான நமது வேலைகள் மிகவும் முக்கியத்துவம் கொண்டவை ஆகும் நமது நகரங்கள் ஆளும் வர்க்க அதிகாரத்தின் மைய நரம்பு மண்டலமாக இருக்கும் அதே நேரத்தில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றவர்களையும் உள்ளடக்கியதாேடு உணர்வு பூர்வமாக அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கத் திரளினரும் அங்குள்ளனர்.
அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மகத்தான மரபினைக் கொண்டவர்கள் ஆவர்.

1947-க்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மீதான பெருந்திரள் மக்கள் இயக்கங்களைக் காண நேரிட்டது.
இந்தப் பல இயக்கங்கள் பாராளுமன்ற வரம்பையும் தாண்டிச் சென்றன.
1974-ல் நடைபெற்ற அகில இந்திய இரயில்வேத் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் நகர எல்லைகளையும் தாண்டிக் கிராமப்புறங்களுக்கும் பரவின.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இயக்கமும் கூட அகில இந்தியப் பரிமாணம் கொண்டதாகும், இந்த இயக்கம் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திரா காங்கிரஸின் எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது.

தொடக்கத்தில் நக்சல்பாரி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நடத்திய கலகத்தினது காட்சிப் புலத்தில் பெரிய எண்ணிக்கையிலான நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், சிப்பந்திகள், பெண்கள் ஆகியாேர் போராட்டப்பாதையில் முனைந்து முன்னாேக்கி வந்தனர்.

அரசாங்கத்தின் தாக்குதல்கள் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றிற்கு எதிராகத் தொழிலாளர்களும், விவசாயிகளும் போராட்டங்களை நடத்தும் போது அவர்களிடையே அரசில் உணர்வை வளர்ப்பதற்கு மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள், பெண்கள் ஆகியாேர் குறிப்பிடத்தக்க(அல்லது வியக்கத்தக்க) பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

1946-ல் நடை பெற்ற இராணுவத்தினரின் கலகம் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவல் துறையினரின் கலகம் 1970-களில் நாடு தழுவி நடைபெற்ற காவல் துறையினரின் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் துறையினரின் கலகம் ஆகியவை நகர்ப்புறப் பணிகளின் இன்றியமையாமையை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நமது நாட்டினது விவசாயப் புரட்சிகரப் போராட்டத்தில் அவை முக்கியத்துவமுள்ள பாத்திரத்தை வகிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

1946-ல் இராணுவத்தில் நடந்த கலகம், 1970-களில் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவல்துறை மற்றும் மத்தியச் சேமப் படையினரின் (CRP) வேலை நிறுத்தங்கள் ஆகியவை நகர்ப்புற வேலைகளின் தவிர்க்க முடியாத தன்மையை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

எனவே விவசாயப் புரட்சியை முன்னாேக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால் நகர்ப்புற வேலைகளை ஒதுக்குவது என்பதற்கு இடமே இல்லை.
கிராமப்புறங்களில் நடைபெறும் ஆயுதமேந்திய விவசாயிகளின் போராட்டங்களுக்கு நகர்ப்புற வேலைகள் துணை செய்வதாக அமையும் வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் நமது நாட்டில் நடைபெறும் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தில் நகர்ப்புற வேலைகள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

15) புதிய ஜனநாயகப் புரட்சியின் வளர்ச்சிப் போக்கிலான பல்வேறு கட்டங்களில் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்க வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய ஐக்கிய முன்னணி வெற்றிக்கான ஒரு மிக முக்கியமான ஆயுதமாகும்.
ஐக்கிய முன்னணி என்பதற்குப் பொருள் தொழிலாளி வர்க்கத்தின் இயற்கையான கூட்டாளிகளைக் கொண்டு கட்டியமைக்கப்படுவதாகும் என்ற இயந்திரவியல் கண்ணாேட்டம் ஒன்று நிலவுகிறது.

தொழிலாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சியில் விவசாய வர்க்கம் முதன்மையான சக்தியாகும். குட்டி முதலாளிகள் இன்னாெரு சக்தியாகும் இவ்வாறாக விவசாயிகளும் குட்டி முதலாளிகளும் தொழிலாளி வர்க்கத்தின் இயற்கையான கூட்டாளிகள் ஆவர். ஐக்கிய முன்னணி என்பது நிச்சயமாக வர்க்க அடிப்படையிலானதாக இருக்கும்.

எப்படியிருப்பினும் தொழிலாளி வர்க்கம் அதனது இயற்கையான கூட்டாளிகளாேடு தேசிய முதலாளிகளை யும் கொண்ட முன்னணியை க் கட்டுவது ஐக்கிய முன்னணியைக் கட்டுவதற்கான முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஐக்கிய முன்னணியைக் கட்டுவதில் இன்னாெரு விசயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

வர்க்கங்களாகப் பிளவுற்றுள்ள ஒரு சமூகத்தில் ஒவ்வாெரு அரசியல் கட்சியும் ஏதேனும் ஒரு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
எனவே நாம் தொழிலாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள் ஆகிய வர்க்கங்களை பல்வேறு மக்கள் திரள் அமைப்புகள் மூலம் முன்னணியாகக் கட்டியமைக்கும் அதே வேளையில் பல்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடனும் முன்னணிகளை கட்டியமைக்க வேண்டும்.

நாம் அடிக்கடி பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட முன்னணிகளைப் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கட்டியமைத்துக் கொள்ளலாம்.
இத்தகைய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட மேடைகளைப் புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் பல்வேறு வர்க்கங்களுடன் இணைந்துக் கட்டியமைக்கும் ஐக்கிய முன்னணி என்ற கடமையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

போராட்டங்களுக்கான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட மேடைகள் தற்காலிகத் தன்மை கொண்டவையும் இயல்பில் வரம்புக்கு உட்பட்டதும் ஆகும்.
பிரதான எதிரியைத் தனிமைப்படுத்துவது, சமூகத்திலுள்ள பல்வேறு முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்வது ஆகியவை மட்டுமே இவற்றின் நோக்கமாகும் இத்தகைய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட மேடைகளை நாம் நிராகரிக்கக் கூடாது ஏனெனில் அவ்வாறு செய்தால் தொழிலாளி வர்க்கத்தைப் பிற வர்க்கங்களிலிருந்து தனிமைப்படுத்தும் விளைவையே அது ஏற்படுத்தும் என்பதால்தான்.

சுருங்கச் சொன்னால் புதிய ஜனநாயகப் புரட்சிக் காலகட்டம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான, தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் (ஊசலாடும் கூட்டாளி) ஆகிய வர்க்கங்களைக் கொண்ட ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் பாதுகாப்பது என்பது ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும்.

கட்சி கிராமப்புறங்களிலும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முன்னணிகளைக் கட்டியமைக்க வேண்டும்.
இது முதன்மையாக நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளைச் சார்ந்து நின்று, மத்தியத்தர விவசாயிகளை வென்றெடுத்து, பெரும் பகுதியினரான பணக்கார விசாயிகளை நடுநிலைப்படுத்தி வென்றெடுத்து, சிறிய நிலப்பிரபுக்களை நிலச் சீர்திருத்தங்களுக்கு இணக்கமாக இருக்குமாறு அனுமதித்து ஒட்டு மொத்தமாகப் பெரும் நிலப்பிரபுக்களையும் நிலப்பிரபுத்துவத்தையும் தனிமைப்படுத்தி இல்லாதாெழிப்பதை உள்ளீடாகக் கொண்டதாகும்.

16) புரட்சி வெற்றியடைவதற்கு, மார்க்சியம் லெனினியம், மாவாேவின் சிந்தனைகள் ஆகியவற்றை ஆயுதமாகக்கொண்ட ஒரு புரட்சிக் கட்சி கட்டியமைக்கப்பட்டாக வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த வடிவிலான வர்க்க அமைப்பாகும்.
இது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகும், இக்கட்சி புறநிலை உண்மையை விஞ்ஞானப்பூர்வமாகப் புரிந்து கொண்ட, ஜனநாயக, மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, துல்லியமான போராட்ட நடைமுறையில் சோதிக்கப்பட்ட, விமர்சனம், சுயவிமர்சனம் என்ற செயல்முறையைப் பயன்படுத்துகிற மக்கள் பெருந்திரளுடன் நெருக்கமாக ஒன்றிணைந்த கட்டுப்பாடுடைய கட்சியாகும்.

ஒவ்வாெரு சட்டப்பூர்வமான வாய்ப்பையும் பயன்படுத்துவதை நிலைநிறுத்தும் அதே வேளையில் கட்சி என்பது அடிப்படையில் இரகசியமானதாக இருக்க வேண்டும்.
எனவே கட்சி தன்னைச் சட்ட விராேத அமைப்புக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். சட்ட வாய்ப்புகளைச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் கட்சி சட்டப்பூர்வமான அமைப்பாகச் சீரழியாதபடி இருப்பதை உத்தரவாதம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பான சூழலுக்கு ஏற்ப கட்சி அதன் எந்த ஒரு பிரிவாயினும் அது வெளிப்படையாகச் செயல்பட வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மாணிக்கும்.

17) கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகத் தொழிலாளி வர்க்கம் நமது நாட்டின் புதிய ஜனநாயகப் புரட்சிக்குத் தத்துவார்த்த தலைமை அளிக்கும்.
எப்படியிருப்பினும் நமது நாட்டில் புரட்சிகர நடவடிக்கைகள் மீதான தொழிலாளி வர்க்கத் தலைமை என்ற அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தொழிலாளி வர்க்கம் அரசியல் பொருளாதாரப் போராட்டங்களை நடத்துவதன் மூலம் விவாயப் புரட்சிக்குத் தலைமை அளிக்கும், விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக அரசியல் வேலை நிறுத்தங்களை நடத்துவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தால் இது போன்ற தலைமையை அளிக்க முடியும்.

தொழிலாளி வர்க்க முன்னணியினரைப் போர்க்குணமுள்ள விவசாயப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க கிராமப்புறங்களுக்கு அனுப்புவதன் மூலம் தலைமை அளிக்க முடியும்.
இதற்கான முதன்மையான தேவை அலசி ஆராய்வதும் கருத்தூன்றிப் பயில்வதும் ஆகும்.
ஒரு முறை விவசாயப்புரட்சி தொடங்கிவிட்டால் ஆயுதக் குழுக்களை கிராமப்புறங்களுக்கு அனுப்புவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தால் தலைமை அளிக்க முடியும்.
இதைத் தவிர எதிர்காலப் போராட்டங்களிலிருந்து தோன்றி எழும் பிற செய்முறைகள் நமக்கு மேலும் படிப்பினைகளை அளிப்பதாக இருக்கும்.

18) புதிய ஜனநாயகப் பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கு எல்லாப் புரட்சிகர வா்க்கங்களையும் பிரிவினரையும் ஐக்கியப்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.
சீரழிந்த இந்தச் சமூக அமைப்பைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாதுகாக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டின் உதவியாேடும் வாழ்த்துக்களாேடும், தற்பாேதைய ஆளும் வர்க்கங்களாலும், அவர்கள் தரும் கூலிக்கு மாரடிக்கும் அறிவு ஜீவிகளாலும் உருவாக்கப்பட்டுள்ள சீரழிவுக் கலாச்சார ஆதிக்கம் பெற்றுள்ள சூழலுக்கு எதிரான முக்கியமான ஆயுதமாக புதிய கலாச்சார இயக்கம் செயல்படும்.
எனவே பண்பாட்டு அரங்கத்தில் நமது நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

19) இந்தியாவின் இன்றைய சூழலில் நாட்டினது பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற புரட்சிகரக் குழுக்களும் தனிநபர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய குழுக்களையும், தனிநபர்களையும் மார்க்சியம்-லெனினியம் மாவாே-வின் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டியது நிச்சயமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

தத்துவார்த்த அரசியல் பற்றிய புரிதலைப் புரட்சிகர நடைமுறையுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய ஐக்கியத்தைக் கட்டியமைக்க முடியும், இதற்குப் பொருள் தத்துவார்த்த அரசியல் போராட்டங்கள், வெறும் வார்த்தை அளவிலான விமர்சனங்களாகவும், அவதூறுகளாகவும், தனிப்பட்ட தாக்குதல்களாகவும் தரங்கெட்டுவிடக்கூடாது என்பதாேடு அவை வர்க்கப்போராட்ட நடைமுறையில் பரிசாேதிக்கப்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை கோட்பாட்டு ரீதியான தத்துவார்த்தப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரே கட்சியாக ஐக்கியப்படுத்த முடியும்.

மார்க்சியம் -லெனினியம் மாவாே-வின் சிந்தனைகள் ஆகிய புரட்சிகரத் தத்துவங்களை ஆயுதமாகக் கொண்ட இது போன்ற கட்சியால் மட்டுமே புரட்சியை இறுதிவரை தலைமை ஏற்று நடத்த முடியும்.
எனவே அது போன்ற ஒரு கட்சியைக் கட்டுவதை நோக்கி அனை த்து முயற்சிகளையும் குவிமையப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
image

***************

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

பதிப்பாளர்:
விஸ்வம்
பொதுச் செயலாளர்
இ.க.க.(மா-லெ)

பிரதிகளுக்கு
அலாேக் முகர்ஜி
சடைகாலி தாலா
போல்பூர் அஞ்சல்
பீர்பும் மாவட்டம்
மேற்கு வங்காளம்-731204

Published by:
Viswam
General Secretary
C.P.I.(M-L)

For Copies
Aloke Mukherjee
Sadaikali Tala
Bolpur(po)
Birbum (District)
West Bengal -731204

………………தொடரும்

ஜெயங்காெண்டம் சட்டமன்ற தொகுதி இ.க.க.(மா-லெ)வேட்பாளர் தோழர்.கருணாகரனுக்கு பானை சின்னத்தில் வாக்களிப்பீர்!

image

2016 மே 16 தமிழக சட்டமன்ற  
                      தேர்தல்

♦மக்கள் விராேத,எதேச்சதிகார ஊழலாட்சியை நடத்தி வரும் அதிமுக-வின் ஜெயா ஆட்சியை வீழ்த்துவாேம்!

♦தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய எடுபிடியான பாஜக-வின் இந்துத்துவ மோடி அரசை எதிர்த்து போராடுவாேம்!

♦இந்துத்துவ மோடி அரசுக்கும், பாசிச ஜெயா ஆட்சிக்கும் திமுக-காங்கிரஸ் மாற்றல்ல! தோற்கடிப்பாேம்!!

♦புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் உலகமயத்தையும், இந்துத்துவ பாசிசத்தையும் முறியடிக்க புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு வாக்களிப்பாேம்!

♦மக்கள் விராேத கொள்கைகளை வீழ்த்த இடதுசாரி, ஜனநாயக சக்திகளை ஆதரிப்பாேம்!
♦புரட்சிகர,இடதுசாரி,

ஜனநாயக சக்திகளின் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் “நோட்டாவை” பயன்படுத்துவாேம்!

♦இ.க.க.(மா-லெ) வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்!

image

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகம் விரும்பும் சான்றாேர்களே!

வருகின்ற 2016 மே 16-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) யின் அரியலூர் மாவட்டச் செயலாளர் தோழர் கோ.கருணாகரன் அவர்கள் ஜெயங்காெண்டம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

♦நாட்டை புதிய காலனியாக்கி, மக்களை அடிமைப்படுத்திவரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளுக்கு முடிவு கட்டிட,

♦மக்கள் விராேத, எதேச்சதிகார ஜெயாவின் ஊழலாட்சியை வீழ்த்த,

♦சாதிவாத,மதவாத அரசியலை தனிமைப்படுத்த,

♦ஊழலில் ஊறித்திளைத்து, ஈழத் தமிழர்களின் விடுதலை யுத்தத்தை நசுக்க துணை போன காங்கிரசை தோற்கடிக்க,

♦தேசங்களின் சமத்துவம், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்க,

♦தாய் மொழியாம் தமிழை ஆட்சி மொழி, பயிற்று மொழியாக்க,
♦இந்தி,ஆங்கிலம் ஆட்சி மொழி சட்டத்தை ரத்து செய்ய,

♦விவசாயிகள் தற்காெலைக்கு காரணமான புதிய காலனிய வேளாண் கொள்கையை வீழ்த்த,

♦ஜெயங்காெண்டம் சட்டமன்ற தொகுதியில் உழவர்களின் சொத்துக்களை கிரயம் செய்து கொண்டு கடன் வழங்கும் சட்ட விராேத கந்துவட்டி கொடுமையை ஒழிக்க,

♦சாதி-தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டிட,

♦சிறப்பு பொருளாதார மண்டலம், ஜெயங்காெண்டம் நிலக்கரி திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் என பல வழிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் 5ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் அந்த நிலங்களை நிபந்தனையின்றி உடனடியாக விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க,

♦அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கேடு, இயற்கை வளம், கனிம வளம், கொள்ளை போவதை தடுக்க,

♦அரசு முந்திரி காடுகளை மக்களுக்கே சொந்தமாக்கிட, முந்திரி ஆலை அமைக்க, முந்திரி விவசாயிகளுக்கு கடனுதவி பெற்றுத்தர,

♦கல்வி, மருத்துவம், சுகாதாரத்துறையை தனியாரிடமிருந்து மீட்டெடுக்க, கொள்ளை நோயிலிருந்து மக்களை காக்க,

புதிய ஜனநாயக புரட்சிக்கு பாடுபட்டு வரும் தோழர் கோ.கருணாகரன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிப்பீர்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
தமிழ்நாடு
image

ஜெயங்காெண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தோழர்.கருணாகரனை பானை சின்னத்தில் வாக்களித்து ஆதரிப்பீர்!

image
தோழர் கருணாகரன் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வல்லம் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இயக்கத்திற்கான அரியலூர் மாவட்ட அமைப்பாளராக அரசியல் பணி செய்து வருகிறார்.

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயங்காெண்டம் தொகுதியில் இ.க.க.(மா-லெ) இயக்க வேட்பாளராக போட்டியிடுகிறார்

இ.க.க.(மா-லெ) இயக்கம் பதிவு செய்யப்படாத இயக்கமாக இருப்பதாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத இயக்கம் என்பதாலும் சுயேட்சை வேட்பாளராக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் யுத்தக் குழு தமிழகத்தில் வீச்சுடன் செயல்பட்ட காலம் முதல் (1983) முற்பாேக்கு இளைஞர் அணியில் (RYL) அமைப்பில் தனது அரசியல் வாழ்வை துவக்கியவர் தோழர் கருணாகரன் ஆவார்.

மக்கள் யுத்தக்குழு பிளவுபட்ட சமயத்தில் அரியலூர் மாவட்டத்தின் மொத்த அமைப்புமே மறைந்த தோழர் தமிழரசன் பின்னால் சென்ற காலத்தில் தோழர் கருணாகரன் தமிழர் விடுதலைப் படை என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டார்.

இதனால் தோழர் தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப் படை அரியலூர் மாவட்டம் மருதையைாற்று பாலத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தோழருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்ட்டது. இதனால் பத்தாண்டுகள் சிறையில் இருந்ததால் நன்னடத்தையின் கடந்த 15-9-1998-ல் முழுவதுமாக விடுதலையாகி வெளியே வந்தார்.

தோழர் கருணாகரன் விடுதலையாகி வெளிவரும் காலத்தில் தோழர் தமிழரசனும் இல்லை அவரின் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பும் இல்லை.

தமிழ்நாடு விடுதலைப் படையின் பயங்கரவாத செயல்களால் சமூகத்தில் எவ்வித அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற முடிவுக்கு தோழர் கருணாகரன் வந்தடைந்தார்.

இந்த நிலையில் இ.க.க.(மா-லெ) மக்கள் யுத்தம் பிளவுண்டு தமிழகத்தில் தனியாக செயல்பட்டு வந்த இ.க.க.(மா-லெ)(ம.யு) போல்ஷவிக் கட்சியில் தன்னை இணைத்துக் காெண்டு அதன் வழிகாட்டுதலின் கீழ் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் என்ற அமைப்பின் மூலம் தனது இயக்க பணிகளை செய்து வந்தார்.

1988-க்கு பிறகு மஜஇக அமைப்பில் ஜனநாயக நெறிகளை கடைபிடிக்க கூடிய மாநாடுகளாே, பிளீனம், அல்லது சிறப்புக் கூட்டங்களை கூட நடத்துவதற்கு அந்த அமைப்பு தொடர்ந்து மறுத்து வந்ததாலும், இதற்காக போராடிய பலரும் பல்வேறு கட்டங்களில் வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்பட்டதாலும் இறுதி வரை அமைப்புத்துறை ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்து ஓராண்டுக்கும் மேலாக அதே அமைப்பில் போராடி பார்த்தும் பலனில்லை என்ற நிலையில் தஞ்சை,அரியலூர்,கடலூர்,நாகை மாவட்ட தோழர்களுடன் தனித்து செயல்பட்டனர்.

இறுதியாக கடந்த ஏப்ரலில் இ.க.க.(மா-லெ) என்ற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு கடந்த ஓராண்டாக செயல்படுகிறார்.

இயக்க முடிவுப்படி கட்சியின் அரசியல் நிலைபாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் தேவைக்காக தோழர் கருணாகரன் ஜெயங்காெண்டம் சட்டமன்ற தொகுதியில் தோழர் கருணாகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தோழருக்கான தேர்தல் சின்னம் “பானை” ஆகும்.

மதிகெட்ட வே.மதிமாறன் -தடம்-

image
கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வே.மதிமாறன் அவர்களின் மோசமான அவதூறுகளுக்கு ஒரு மறுப்பு..!

     
அண்மையில் (08/04/2016)உயிர்மை பதிப்பகம் தனது10 நூல்களை வெளியிட்டு,அதற்கு வெளியீட்டு நிகழ்ச்சியையும் நடத்தியது. அந்த 10நூல்களில் செ.சண்முகசுந்தரம் அவர்களின் “நிறங்களின் நிஜங்கள்” என்ற நூலும் ஒன்று. அந்த நூல் குறித்து அறிமுகவுரை ஆற்றியவர் வே.மதிமாறன். அதில்தான் இதுவரை யாருக்கும் தெரியாத புது புது தகவல்களையும், இதுவரை யாரும் சிந்திக்காத புது புது கோணத்திலும் சிந்தித்து,கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது மிக மோசமான அவதூறுகளை வாரியிறைத்து நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். முன்னதாகவே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவரின் முகநூல் பதிவில் மதிமாறன் அவர்களின் பேச்சின் சுருக்கம் வெளியிடப்பட்டிருந்தது. அப்போதே இதில் பல அபத்தமான கருத்துக்கள் உள்ளதே என்று தோன்றியது. மதிமாறன் பேச்சுக்கு அரங்கில் இருந்த யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. (கூட்டத்தில் தோழர் புலியூர் முருகேசன் அவர்களும் அவரின் “உடல் ஆயுதம்” நாவல் வெளியீட்டுக்காக கலந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்) நிகழ்ச்சிக்கான வீடியோவும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. உண்மையில் அது ஒரு உள்நோக்கம் கொண்ட உரைதான். முகநூலில் ஏற்கனவே இதுகுறித்து மதிமாறன் அவர்களிடம் விவாதித்தபோது கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்வதை விட்டு விட்டு எனக்கும் உடன் விவாதித்த தோழருக்கும் சிலபல முத்திரைகளை குத்திவிட்டு அவரது நட்பு பட்டியலிலிருந்து என்னை வெளியேறுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அம்பேத்கரியத்தையும்,பெரியாரியத்தையும் முன்னிறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் (எந்த கட்சி என்றில்லாமால் பொத்தாம் பொதுவாக பலதடவை கம்யூனிஸ்ட கட்சி, சி.பி.எம் என்று ஒன்றிரண்டு முறை),மீது அவதூறை வாரியிறைத்த அந்த உரையை இரண்டாக பிரிக்கலாம்.

1.இந்து அமைப்புகள்,காந்தி, கம்யூனிஸ்ட் கட்சி இந்த மூன்றிற்கும் அடிப்படையில்,தத்துவார்த்த ரீதியில் ஒற்றுமை உண்டு. இந்தியா ஒரு வேதநாடு, புராண இதாகாசங்கள், மனுதர்மம்,இராமயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை புனிதமானவை, அவைகள் இந்தியாவின் அடையாளங்கள் என ஆர்.எஸ்.எஸ்’ஸும்,காந்தியும் மட்டும் பேசவில்லை, இன்றுவரை கம்யூனிஸ்ட் கட்சியும் அதைத்தான் பேசுகிறது.ABVPயிலிருந்து வெளியேறியவர்கள் கூட மனுதர்மத்தை எரிக்கின்றார்கள். இத்தனை ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சி மனுதர்மத்தை எரித்தது கிடையாது. எனவே இந்து கண்ணோட்டமும் கம்யூனிஸ்ட் கட்சி கண்ணோட்டமும் ஒன்று. ரோஹித் வெமுலா SFIல் இருந்தபோது அம்பேத்கரை முன்னிறுத்தி இந்து பார்ப்பனிய அரசியல் பேசியதால் SFIஅவருடன் ஒத்துழைக்கவில்லை என்றும், அதனால் அதன் போதாமையால் வெமுலா அதைவிட்டு விலகினார் என்றும், இதே கதிதான் (ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படம் )எடுத்தவருக்கும் நிகழ்ந்தது என்கிறார். (கண்ஹையாவை ஆதரிக்கும். ஆனால் அவரது கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காது என்கிறார். உண்மையிலே எனக்கு இது புரியவில்லை)

2. கீழவெண்மணி படுகொலை திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின், ஒரேநாளில் தற்செயலாக நடந்த சம்பவம் கிடையாது. அதை50களிலிருந்து நடந்த விவசாய-தொழிலாளர் போராட்ட வடிவங்கள்,முந்தைய அரசுகள்,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பாக,அதன் உச்சகட்டமாகத்தான் பார்க்க வேண்டுமேமொழிய திராவிட இயக்கமாக சுருக்கி பார்க்கக் கூடாது. கீழவெண்மணி போராட்டம் என்பது அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம்தான்;அது. சாதி ஒழிப்பு போராட்டம் அல்ல. அது சாதி ஒழிப்பு போராட்டமாக இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி அதை நடத்திருக்கவே செய்யாது. இடைநிலை சாதிகளின் பக்கமே சி.பி.எம் நிற்கிறது. முதுகுளத்தூர் கலவரத்தை சி.பி.எம் ( அப்போது சி.பி.எம் இருந்ததா என்பது அவருக்கே வெளிச்சம்.) ஆதரித்தது.

மேலோட்டமாக பார்த்தால் அல்லது கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய போதிய புரிதல் இல்லாத ஒருவர் இதை கேட்டால், ஏதோ உண்மையை கஷ்டப்பட்டு தோண்டி வெளியே எடுத்து போட்டது போன்ற தோற்றத்தை தரும் உரை இது.

1920களில் ஆரம்பித்த இந்திய விடுதலைக்கான,புரட்சிக்கான கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து,நாடாளுமன்ற பாதையில் சிக்கி சீரழிந்த, நக்சல்பாரி எழச்சியாக வீருகொண்டு எழுந்த, பின்னர் மாவோயிஸ்டு கட்சியாக,பல்வேறு எம்.எல் குழுக்களாக சிதறியுள்ள எந்தவொரு கட்சியும் மதிமாறன் சொல்வது போன்று இந்து பார்ப்பனீய அரசியலை உயர்த்தி பிடித்து ஆர். எஸ். எஸ்’க்கு நிகராக மத அரசியல் செய்ததும் கிடையாது;புராண குப்பைகளை இந்தியாவின் அடையாளமாக அது முன்னிறுத்தியதும் கிடையாது. சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகள் மீது நமக்கும் அப்போதும் சரி தற்போது சரி கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் மதிமாறன் சொல்லும் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதிப்பாசம் கொண்டிருந்தன என சொல்வது அதன் ஒட்டுமொத்த முற்போக்கான செயல்பாடுகளையும் மறுத்து அதை ஆர்.எஸ்.எஸ்’சிற்கு நிகராக நிறுத்தும் அரைவேக்காட்டுத்தனமான வாதமாகும்.

இன்றுவரை இந்தியாவில் இதே மதிமாறன் கூறும் புராணங்களை,இதிகாசங்களை,மனுதர்மத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அடிதட்டு மக்களின் உண்மையான வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தவர்கள்.. செய்து கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த, சாராத மார்க்சியவாதிகள்தான். ராகுல் சாங்கிருத்யாயன்,கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவிலிருந்து இன்று ரொமிலா தாப்பர் வரையிலான அறிவுஜீவுகளிலிருந்து அடிமட்ட ஊழியர்கள் வரை அதற்கு எத்தனையோ உதாரணங்கள்,ஆதாரங்கள் அதற்கு உண்டு. அந்த ஆய்வுகள் அனைத்தும் அம்பேத்கரிஸ்டுகள்,பெரியாரிஸ்டுகள் செய்ததைவிட பன்மடங்கு அதிகமானவை.. சமூக விடுதலைக்கு துணை செய்பவைகள். ஆனால் இதை எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அல்லது விரும்பாமல் சகட்டுமேனிக்கு மிகுத்த வன்மத்துடன் இருக்கிறது அவரது பேச்சு. முதலில் ஆர்.எஸ்.எஸ்’சையும்,கம்யூனிஸ்ட் கட்சியையும் எதனடிப்படையில் மதிமாறன் இணைக்கிறார் என்றும், மனுதர்மத்தை எரிப்பதாலேABVPயிலிருந்து வெளியேறியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை விட முற்போக்கானவர்கள் என்கிற பாணியில் உளறியது எதனடிப்படையில் என்றும் அவர்தான் நிரூபிக்க வேண்டும். அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்.. அவதூறுகளுக்கு ஒருபோதும் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.

மார்க்சியம் என்பது புரட்சிகர தத்துவம். அதனை நடைமுறையில் பொருத்தத் தெரியாமல் கட்சிகள் தவறிழைக்கலாம். உண்மையில் ரோஹித் வெமுலா மார்க்சியத்தை தெளிவாக புரிந்து கொண்டிருப்பாரேயானால் அவரால் ஒருபோதும் அம்பேத்கரிஸ்டாக மாறியிருக்க முடியாது. ஏனெனில் மார்க்சியத்தை தாண்டி இதுவரை வேறு எந்தவொரு தத்துவமும் சமூக விடுதலைக்கான புரட்சிகர தீர்வை முன்வைக்கவில்லை. அம்பேத்கரியம் என்பது சட்டவாதத்தில் மூழ்கியது;நிலவுகின்ற அமைப்பில் சீர்திருத்தவாதத்தை முன்னிறுத்துவது;சலுகைகளை கோருவது. அது ஒருகாலும் தலைகீழ் மாற்றை சமூகத்தில் உருவாக்காது. எனவே அம்பேத்கரியத்தை மட்டும் தூக்கி பிடித்த ரோகித் வெமுலாவின் எல்லையும் அவ்வளவுதான்.. அந்த விஷயத்தில் ரோஹித் வெமுலாதான் தவறியிருக்கிறார். தற்போது மதிமாறனும்தான்.. மாறாக மார்க்சியம் அல்ல.

இன்னொருபுறம் யோசித்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும்,கம்யூனிஸ்டுகள் மீதும்,மார்க்சியத்தின் மீதும் கடுமையான அவதூறு கூறும் மதிமாறன் அவர்களின் உரையை நான் அம்பேத்கரின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். அம்பேத்கரியத்தை உயர்த்திப் பிடித்து கம்யூனிஸ்ட் கட்சிகளை தரம் இறக்குவதால் அம்பேத்கரியத்தை பற்றியும் இங்கு பேச வேண்டிய தேவை எழுவதாகவே நினைக்கிறேன். மாறாக வறட்டுதனமாக நான் அம்பேத்கரியத்தை பார்ப்பதாகவோ, அவதூறு பொழிவதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அம்பேத்கர் தான் இறக்கும் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் கம்யூனிசத்தின் மீது,கம்யூனிஸ்டுகள் மீது வெறுப்பையே உமிழ்ந்து வந்தார்.

“நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி” என்றும்,கம்யூனிஸ்டுகள் தங்களது அரசியல் நோக்கத்திற்காக தொழிலாளர்களை சுரண்டுபவர்கள். என்றும்,பொதுவுடமை தத்துவம் மனிதர்களை பன்றிகளைப் போன்றவர்கள்தான் என்பதுபோல அவர்களை கொழுக்க வைகாக பயன்படுகிறது என்றும்,புரட்சி வேலைக்காகது.. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை விட புத்தமே சிறந்தது.. மதம் மக்களுக்கு அபின் இல்லை.. மதம் சமுதாய புத்தெழுச்சிக்கு வழிவகுக்கும்.. மனிதனுக்கு ஆன்மீக வளர்ச்சியும் தேவை., ரஷ்ய கம்யூனிசம் மோசடியானது.. இந்தியா ஒருபோதும் கம்யூனிச நாடாக ஆகக் கூடாது.. நாடாளுமன்ற ஜனநாயகமே உயர்வானது.. இரஷ்ய பூதம் பல நாடுகளை காவு கொள்கிறது.. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பதே இல்லை.. ரஷ்யாவில் பொதுவுடைமை தோற்கும்.. சொத்திற்காக மக்கள் அங்கே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ரத்தக்களறியில் ஈடுபடுவர் என்றும், அரசியலை விட மதத்தில்தான் நான் அதிக நாட்டம் கொண்டவன்;கம்யூனிஸ்டுகள் மார்க்ஸைவிட புத்தரை அதிகம் உள்வாங்க வேண்டும் என்றும்,எல்லாக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ அவற்றைவிட நான் அதிகம் படித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டதில்லை என்று தான் சாகும்வரை கம்யூனிஸ்டுகள் மேல் வசைமாரி பொழிந்தவர் அம்பேத்கர். இன்னும் சொல்லப்போனால் இந்திய ஒற்றுமையை,அதன் ஆன்மீக மரபை கம்யூனிஸ்ட் கட்சிகள் தூக்கி சுமக்கவில்லை.. சுமந்தது அம்பேத்கர்தான். அவரின் கோட்பாட்டு வாரிசுகள்தான்.

அம்பேத்கர்தான் இந்தியா ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும், இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், மொழிவழி மாகாணங்கள் இந்தியாவை உடைத்து விடும் என ஒன்றுபட்ட இந்தியாவை வலியுறுத்தினார். மேலும் மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறார்கள். யாரோ சொன்னது போல் மதம் ஓர் அபினியல்ல. என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம். மதம் எனக்குத் தேவை என்றும் கூறியவர். சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல் மதமே தேவையில்லை என்று தான் நம்பவில்லை….மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி,தர்மசாஸ்திரங்களைப்போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ,ஒழுங்குபடுத்தவோ இயலாது என்றார். ஆனால் அந்த சமயத்தில் நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் தலித் பிரச்சினையை நில அதிகாரப் பிரச்சனையோடு முன்வைக்கும்போது,மிகவும் பிற்போக்காக அம்பேத்கர் தீவிர கம்யூனிச எதிர்ப்புடன் இன்னொரு அரசியலை முன்வைக்கிறார். வர்க்கப்போராட்டத்தை தவறு என்று கூறி பெளத்தத்தை புரட்சிகரமானது என்கிறார்.

இன்று அம்பேத்கரை படுபயங்கர சோசலிசவாதியாக,புரட்சியாளராக சித்தரிப்பவர்கள் பதில் சொல்ல முடியுமா?வர்க்கப்போராட்டத்தை தவறுன்னு சொன்ன அம்பேத்கருக்கும் சோசலிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று! அம்பேத்கர் முன்னிறுத்துவது முதலாளித்துவ ஜனநாயகம். அம்பேத்கரியத்தை ஆழமாக ஆய்வு செய்தால் மிஞ்சுவது ஒரே கருத்துதான். அம்பேத்கர் கருத்துக்கள் ஆளும் வர்க்கத்திற்கு பாதுகாப்பான ஒன்று.. அதை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்ததும் அதே ஆளும் வர்க்கம்தான். அதுவும் படுவேகமாக90களுக்கு பின்னர் தலித் மற்றும் பின்நவீனத்துவ-என்.ஜீ.வோ அரசியலோடுதான். 2000ஆண்டு பார்ப்பனிய ஒடுக்குமுறையில் இருந்து வெள்ளை ஏகாதிபத்தியம் மனித மான்பை மீட்டு தந்தது என்கிற மோசடியான தலித் அரசியலும் அதிலிருந்துதான் வருகிறது. அதேபோல அம்பேத்கர் அரசியலுக்கு வந்தபிறகுதான் சாதி ஒழிப்பு கருத்துக்களே வந்தது போன்ற தோற்றமும் அதிலிருந்துதான் வருகிறது. எதை மழுங்கடிக்க இவை அனைத்தும் உருவாக்கப்பட்டது என்று சொல்லிப் புரிய வேண்டியதில்லை. இந்தியாவை கம்யூனிசத்திடம் இழக்க மாட்டோம் என்ற ஃபோர்டு பவுண்டேசனின் நோக்கத்துக்கு இந்த போலி தலித்தியம் சேவகம் புரிகிறது என்பதுதான் அது. 

‘கம்யூனிஸ்டுகளால் தலித்துகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும் சாதிக் கட்சிகளே என இவர்கள் அவதூறுகளை அள்ளி வீசிய நூல்கள் தொண்டு நிறுவனங்களால் பரப்பப்பட்ட கதையும் இதுதான்.

ஆனால் மதிமாறனோ கீழவெண்மணி படுகொலையை50களிலிருந்து நடந்த விவசாய-தொழிலாளர் போராட்ட வடிவங்கள்,முந்தைய அரசுகள்,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பாக,அதன் உச்சகட்டமாகத்தான் பார்க்க வேண்டுமேமொழிய திராவிட இயக்கமாக சுருக்கி பார்க்கக் கூடாது. கீழவெண்மணி போராட்டம் என்பது அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம்தான்;அது. சாதி ஒழிப்பு போராட்டம் அல்ல. அது சாதி ஒழிப்பு போராட்டமாக இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி அதை நடத்திருக்கவே செய்யாது என்று என்னவெல்லாமோ உளறுகிறார். திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நமக்கு பெரும்பாலும் உடன்பாடு இல்லை. ஆனால் அதில் எந்தளவிற்கு பிற்போக்கானவர்கள் இருக்கிறார்களோ அதைவிட பன்மடங்கு முற்போக்காளர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இன்றைக்கு இருப்பதைவிட 60களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சமூக மாற்றத்திற்கு, சாதி ஒழிப்பிறகு அதிதீவிரமாக களத்தில் வேலை செய்து கொண்டிருந்தது. கீழவெண்மணி படுகொலை என்பது மதிமாறன் சொல்வது போல அது வெறுமனே அடிமைத்தனத்திற்கு எதிரான ஒன்றாக மட்டும் இருக்கவில்லை; அது ஆதிக்க சாதி வெறியாட்டமாக இருந்தது.. செருப்பு போடக்கூடாது,துண்டு போடக்கூடாது,மாராப்பு போடக்கூடாது,பண்ணையார் கண்ணை பார்த்து பேசக் கூடாது என்ற நிலையை மாற்றியவர்கள் கம்யூனிஸ்டுகள். சானிப்பால், சவுக்கடிக்கு செங்கொடி இயக்கம் மூலம் முடிவு கட்டியவர்கள் அவர்கள்.

அந்த பண்ணையார் முறை சாதியை காப்பாற்றவில்லையா?இதுபோன்ற பல போராட்டங்களில் எத்தனை கம்யூனிஸ்டுகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர் என மதிமாறனுக்கு தெரியுமா?அங்கே சாதி ஒழிப்பு போராட்டமும்,அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டமும்,கூலி உயர்வு போராட்டமும் ஒன்றுக்கொன்று பிண்ணியிருந்தது என அந்த வரலாற்றை படிக்கும் எவருக்கும் புரியும். இவையெல்லாம் சேர்ந்துதான் அரைப்படி நெல்லை உயர்த்தி கேட்ட போராட்டத்தில் பிரதிபலிக்கிறது. படுகொலை நடக்கிறது. பின்னர் நக்சல்பாரிகள் கணக்கு தீர்த்த வரலாறு தனி. (திராவிடர் கழகத்தினரும் இதே போன்று அழித்தொழிப்பு வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். திராவிட விவசாயத் தொழிலாளர் அமைப்பும் அந்த நேரத்தில் உதயமானது. அப்போது நாகைக்கு வந்த பெரியாரிடம் இதைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அவர் இதுபோன்ற காலித்தனங்களை நான் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால் திராவிடர் கழகத்தில் இருந்து பல தோழர்கள் வெளியேறி எம்.எல்.கட்சியில் இணைந்தார்கள்- நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன் (நேர்காணலில் தோழர் தியாகு)..

இவை எதுவும் மதிமாறனுக்கு தெரியாதா?பரம்பரை பரம்பரையாக வேலை செய்ய வேண்டும் என்ற பண்ணையார் முறை சாதியை காப்பாற்றும் ஒன்றாக மதிமாறனுக்கு தெரியாததுதான் அவரின் உள்நோக்கம் மீது நம்மை சந்தேகப்பட வைக்கிறது. ஏன் இன்றும் கூட தலித்திய இயக்கங்களைவிட சாதி அடக்குமுறைக்கெதிராக அவைகள்தான் தீவிரமாக போராடுகின்றன. பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் போன்றவர்களின் விவாகாரத்திலும்,இளவரசன், கோகுல்ராஜ்,சங்கர் படுகொலையின் போது இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களை இலகுவாக புறந்தள்ளிவிட முடியுமா? இவை எல்லாவற்றையும் முதுகுளத்தூர் கலவரத்தில் கம்யூனிஸ்ட்கள் பார்வை தவறாக இருந்தது என்ற ஒற்றை காரணத்திற்காக மறுக்கப்பட வேண்டுமா என்ன?

அதேபோல இன்று நேற்றல்ல.. 1928களிலேய தன்னுடைய அறிக்கைகளில் தாழ்த்தப்பட்டோர் விடுதலை பற்றி பேசியது கம்யூனிஸ்ட் கட்சி. தெலுங்கானா, தெபாகா,புன்னப்பரா, வயலாறு தொடங்கி பாப்பாபட்டி,கீரிப்பட்டி, உத்தப்புரம் வரை.. ஆயுதப்போராட்டத்தில் இருந்து உண்ணாவிரதம் வரையிலான பல போராட்டங்களை சாதித்து சாதிக்கு எதிராக போராடியது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இரட்டை குவளைமுறை,பொதுப்பாதையை பயன்படுத்துவது,அருந்ததியர் உள்இடஒதுக்கீடு, பஞ்சமி நிலமீட்பிலிருந்து தருமபுரி,மரக்காணம் சாதி வெறியாட்டத்திற்கெதிராக பாமகவுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதும் கம்யூனிஸ்டுகள்தான்.

கம்யூனிஸ்டு கட்சிகளை விட்டு விடுவோம். ஆங்கில ஏகாதிபத்தியம் தலித்துகளை தங்கள் சொகுசுக்காகவும்..தேயிலை தோட்டங்களுக்காகவும் நாடு விட்டு நாடாகவும்.. இங்கே வால்பாறை.. ஆனைமலை.. முதலிய இடங்களுக்கு துரத்தி ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தததே அதைப்பற்றி அம்பேத்கர் என்ன. பேசினார்? தஞ்சை மற்றும் தென் தமிழகத்தில் நடந்த சாணிப்பால்,சவுக்கடி கொடுமைகள் ஒழிப்பு குறித்து அம்பேத்கர் கருத்து என்ன? அந்த கொடுமைகளை பற்றி அவரது புரிதல் என்ன?இங்கே அதை துன்பக்கேணியில் புதுமைபித்தன் கூட செய்தார். எரியும் பனிக்காட்டில் டேனியல் செய்தார்.

அதேபோல பார்ப்பனியம்னா என்ன?அதன் சாதிய, வர்க்க நலன் என்ன? உற்பத்தி உறவுகள்,நிலவுடமை உறவுகள் பற்றி ஆய்வு செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.. வெறுமனே பார்ப்பனியம்னா எல்லாம் அதனுள் அடங்கி விடுமா என்ன? அதன் தற்போதைய போக்கு முதல் அனைத்தையும் ஆய்வு செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள். மாறாக அம்பேத்கரிஸ்டுகள் கிடையாது. அம்பேத்கர் பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறையை மிகச்சரியாக அம்பலப்படுத்தினார். அதை நாம் மறுக்கவும் இல்லை; மறுக்கவும் முடியாது. ஆனால் அவரை பார்ப்பனியத்தின் இன்னொரு ஒடுக்குமுறையான தேசிய ஒடுக்குமுறையை காண தவறினார். அதனால்தான் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க சம்மதம் தெரிவித்தார். இந்தி என்ற ஒரு மொழிக் கொள்கையை

மேலும் இந்திய சமூகத்தின் அடிக்கட்டுமானமாக சாதி மட்டுமே இருக்காது. ஆனால் அம்பேத்கர் அதைமட்டும்தான் வலியுறுத்துகிறார். வெறுமனே மதம் மாறினால், தேர்தலில் ஈடுபட்டால் சமூக மாற்றம் வந்துவிடும் என்பது அப்பட்டபான சீர்திருத்தவாதம். அதுவும் இந்து மதத்தை சீர்திருத்த முடியாமல்தான் பெளத்ததிற்கு மாறுகிறார். இன்று அந்த மதமாற்றம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது என்ற குற்றவுணர்வு சிறிதும் இன்றி பார்ப்பன எதிர்ப்பை கம்யூனிச எதிர்ப்பாக மாற்றுவதுதான் மதிமாறனின் உண்மையான குறிக்கோள் என்றால் அம்பேத்கரைப் போலவே வரலாற்று சக்கரத்தை இவரும் பின்னோக்கிதான் இழுக்கிறார்.

அம்பேத்கருக்கு சாதி ஒழிப்பில் ஆசை இருந்தது. கோட்பாட்டளவில் அது மார்க்சியத்தை தாண்டி சிந்திக்கவில்லை. பார்ப்பனியம் பற்றி பேசுகிற அதே அம்பேத்கர்தான் சாதியை பார்ப்பனர்கள் உருவாக்கவில்லை,அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது வன்மம் என்கிறார்.
மதம் பிற்போக்கானது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டிலேயே முதலாளித்துவம் நிரூபித்துவிட்டது. அதன்பிறகு அவர் புத்தமத்தை தழுவுகிறார் என்றால் அவர் டார்வின் கொள்கைக்கு எதிரானவராக ஆகிவிடுகிறார். இந்திய அரசியல் சாசனம் எழுதியவர்களில் ஒருவராக இருந்து, இந்திய முதலாளி வர்க்கத்தின் சேவகராகி விடுகிறார். அன்றைய கம்யூனிஸ இயகத்துக்குள் சாதி வேறுபாடுகள் இருந்திருக்கலாம். அது கம்யூனிஸம் என்கிற தத்துவத்தின் குறைபாடல்ல. அதற்காக கம்யூனிஸ தத்துவத்தை எதிர்ப்பதன் மூலம் கம்யூனிஸ விரோதியாகிவிடுகிறார். மார்க்ஸ் அளித்துள்ள கம்யூனிஸ தத்துவம் உலக தொழிலாளி வர்க்கம் அனைத்துக்கும் சொந்தமானது. ஆனால் இவர் அப்படியொரு பொதுவான தத்துவம் எதையும் உலகத்துக்குக் கொடுத்துவிடவில்லை. மேலும், இவரைத் துதிபாடும் வேலையைத்தான் இவரது தொண்டர்கள் செய்து வருகின்றனர். கம்யூனிஸ ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறார்கள். ஆனால்,அவர்கள் மார்க்ஸ் மீதோ,லெனின் மீதோ துதிப்பாடல்களைப் பாடுவதில்லை. ஆனால் இங்கோ, அம்பேத்கருக்கு ஆயிரக்கணக்கில் துதிப்பாடல்கள் இருக்கின்றன. தனிநபர் துதி காரணமாக இவர்களிடம் சந்தர்ப்பவாதமும் காரியவாதமும்தான் நிறைந்து கிடக்கிறது. அதனால்தான் பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை வலிந்து ஏற்றுக்கொள்கிற இவர்கள் அவரின் பகுத்தறிவுக்கொள்கையை நிராகரிக்கிறவர்களாக இருக்கிறார்கள். வர்க்கப் போரின் வழியாகத்தான் சாதி-மத வேறுபாடுகளை ஒழிக்க முடியும் என்கிற அரசியல் சிந்தனையை விதைக்காமல்,சாதிவிடுதலைக்காக சாதி அமைப்புக்குள் மக்களை ஒடுக்கிவைக்கப் பயன்படும் அவரது வழிகாட்டுதல்கள் நிச்சயம் சமூக மாற்றத்துக்கு எதிரானதாகும்.

சாதிவெறியர்களின் பரம எதிரிகளான நக்சல் புரட்சியாளர்களையும்,ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் இப்போக்கு புதிதான ஒன்றல்ல. இந்த மார்க்சிய விரோத தலித்திய அரசியலுக்கு நீண்ட வேர்களும்,வரலாறும் உண்டு.

ஏகாதிபத்தியங்களும்,ஃபோர்டு பவுண்டேஷன்களும்,கிருத்துவ திருச்சபைகளும்,பின்நவீனத்துவ பின்புலமும் கொண்ட தலித் இயக்கங்களின் இவ்வரலாறு மிக மோசமான ஒன்றாகும் என்கிறார் தோழர் திருப்பூர் குணா.

அடுத்து சாதியாதிக்கத்தையும்,சாதிய வெறியாட்டத்தையும் முறியடிக்க வேண்டுமானால் மேல் சாதியில் உள்ள உழைக்கும் மக்களை சாதியாதிக்கத்துக்குப் பலியாகாமல் அணிதிரட்ட வேண்டும். அவர்களின் மீதான ஒடுக்குமுறைக்கும்,வறுமைக்கும்,துன்பத்துக்கும் காரணமான இவ்வுற்பத்தி முறையை ஒழிக்கப் போராட வைக்க வேண்டும். இவ்வுற்பத்தி முறையால் லாபமடையும் சாதி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இதை சாதிய அரசியலால் சாதிக்க முடியாது. எனவே,சாதியவாதம் பேசும் தலித் அமைப்புகளுக்கு இது சாத்தியமில்லை.

கூடுதலாக சாதியை ஒழிப்பதற்கு புரட்சிகர அதிகாரம் நிறுவப்படுவது அவசியமாகும். பிற்போக்கு சக்திகள் தலை தூக்க முடியாத சர்வாதிகாரம் அடிப்படையானதாகும். ஆனால் தேர்தல் மூலம் அதிகாரத்தில் பங்கு என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேவை இல்லை என்றும்,உலகமயமாக்கலை எதிர்ப்பது இல்லையென்றும், ஆகவே அதிகார மாற்றம் தேவையில்லை என்றும் கொள்கை வகுத்துக் கொண்ட தலித் இயக்கங்களுக்கு இது சாத்தியமேயில்லை.. திராவிட இயக்கங்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை..

எனவே பேசலாம் என்றால் இன்னும் ஆயிரம் இருக்கிறது.. அதில் சி.பி.எம்.. சி.பி.ஐ கட்சிகளும், அவர்களின் கருப்பு பக்கங்களும் அடங்கும். ஆனால் உண்மைக்கு புறம்பான வரலாற்று தகவல்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல் சுமத்துவது என்பது அப்பட்டமான உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

   – பாவெல் சக்தி..

130-வது மேநாளில்       சூளுரைப்பாேம்!

image

         130-வது மேநாளில்       சூளுரைப்பாேம்!
image

♦அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக நடைமுறைப்படுத்தும் புதிய காலனியக் கொள்கைகளை முறியடிப்பாேம்!
image

♦ஆக்ரமிப்பு யுத்தங்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பொம்மை ஆட்சியை நிறுவிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் அணிதிரள்வாேம்!
image

♦தெற்காசிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ஆஸ்த்திரேலியா இந்தியா,ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்தும் அமெரிகக்காவின் ஆசிய-பசிபிக் திட்டத்தை எதிர்ப்பாேம்!

♦ஏகாதிபத்திய உலகமயமாதலை எதிர்ப்பாேம்!
image

♦இந்தியாவின் மீது அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை திணிக்க தொண்டூழியம் புரியும் இந்துத்துவ மதவெறி, பாசிச மோடி அரசை தூக்கி எறிவாேம்! 
image

♦மோடி அரசின் புதிய காலனிய கொள்கைகளுக்கு துணை நிற்கும் மக்கள் விராேத எதேச்சதிகார ஜெயாவின் ஊழலாட்சியை வீழ்த்துவாேம்!
image

♦மதவெறி குண்டர் படையான RSS பரிவாரங்களின் இந்து ராமராஜ்ய கனவுகளை அடித்து நொறுக்குவாேம்!
image

♦விவசாயிகளை தற்காெலைக்கு தள்ளிவிடும் வேளாண்துறையில் நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்த விவசாயம், குழும விவசாயம் உள்ளிட்ட புதிய காலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்பாேம்!
image

♦பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எந்த வகையிலும் அனுமதியாேம்!
image

♦புதிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட தொழிலாளர் விராேத சட்டங்களை முறியடிப்பாேம்!
image

♦போராடிப் பெற்ற தொழிலாளர்களுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க போராடுவாேம்!
image

♦ஆட்குறைப்பு, ஆலை மூடல், ஒப்பந்த வேலைமுறை, “அவுட் சோர்சிங்” முறைகளை எதிர்த்தும் 8மணி நேர வேலையை பாதுகாக்கவும் போராடுவாேம்!
image

♦தொடரும் சாதி-தீண்டாமை கொடுமைகளுக்கும், ஆணவக் கொலைகளுக்கும் முடிவு கட்டுவாேம்!
image

♦தாய்மாெழி வழிக் கல்விக்காகவும், தமிழை ஆட்சி மொழியாக்கவும் போராடுவாேம்!
image

♦பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவாேம்!
image

♦எஸ்மா,டெஸ்மா,124-ஏ உள்ளிட்ட கருப்பு சட்டங்களை முறியடிக்கப் போராடுவாேம்!
image

ஈழத் தமிழர்கள் மற்றும் ஈழ அகதிகளின் வாழ்வுரிமைக்குப் போராடுவாேம்! ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி போராடுவாேம்!
image

♦மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வாேம்!
image

♦மே நாள் வாழ்க! உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவாேம்!
image

தமிழ் மாநிலக்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

24-4-2016 ~~~~~  பேச:9445324682
image

We Will Not Be a Party to This Crime!
By Academics for Peace, Turkey
As academics and researchers of this country, we will not be a party to this crime!
The Turkish state has effectively condemned its citizens in Sur, Silvan, Nusaybin, Cizre, Silopi,
and many other towns and neighborhoods in the Kurdish provinces to hunger through its use of
curfews that have been ongoing for weeks. It has attacked these settlements with heavy weapons
and equipment that would only be mobilized in wartime. As a result, the right to life, liberty, and
security, and in particular the prohibition of torture and ill-treatment protected by the constitution and
international conventions have been violated.
This deliberate and planned massacre is in serious violation of Turkey’s own laws and international
treaties to which Turkey is a party. These actions are in serious violation of international law.
We demand the state to abandon its deliberate massacre and deportation of Kurdish and other
peoples in the region. We also demand the state to lift the curfew, punish those who are responsible
for human rights violations, and compensate those citizens who have experienced material and
psychological damage. For this purpose we demand that independent national and international
observers to be given access to the region and that they be allowed to monitor and report on the
incidents.
We demand the government to prepare the conditions for negotiations and create a road map that
would lead to a lasting peace which includes the demands of the Kurdish political movement.
We demand inclusion of independent observers from broad sections of society in these negotiations.
We also declare our willingness to volunteer as observers. We oppose suppression of any kind of
the opposition.
We, as academics and researchers working on and/or in Turkey, declare that we will not be a party
to this massacre by remaining silent and demand an immediate end to the violence perpetrated by
the state. We will continue advocacy with political parties, the parliament, and international public
opinion until our demands are met.
January 10, 2016
*****

image

Condemn Terrorist Bombings in Brussels
The Class Struggle strongly condemns the bombings that took place on March 22 in Brussels,
capital of Belgium, at Zaventem airport and Maelbeek metro station that killed 35 people and injured
340. It expresses its deep sorrow and condolences to the bereaved families. In a statement Islamic
state in Iraq and Syria (ISIS) claimed responsibility for these bombings.
This terror attack targeted innocent people who are in no way responsible for the holocaust wrought
by the imperialism in the Middle East Asia or the aims of the ISIS. It only plays into the hands of those
reactionary forces that mired the Middle East into turmoil and war to enforce their designs of exploitation,
domination and oppression.
The bourgeois leaders of the European countries vociferously condemned this violence. But, in
fact, they welcome it as pretext provided by such crimes to intensify exploitation of and to expand
suppressive measures on the working class, while at the same time raking up anti-Muslim hatred to
divide the workers.
Their condemnation of terrorism is hypocritical. The European and American imperialist leaders
have never condemned the violence committed by the terrorists when it suited their hegemonic designs.
For example, in Syria, Islamic militia resorted to terror bombings in the capital Damascus – there
were 44 killed and 160 injured in December 2011 attack; there were 44 killed and 166 injured in May
2012 attack and 60 killed and 250 injured in February 2013. Instead of condemning these attacks,
they backed these Islamic militias in their attempt to topple Syrian president Bashar al Assad regime.
This gave birth to the ISIS which was supported by the US and NATO until ISIS attacked Charlie
Hebdo in November 2015 in Paris.
The ISIS and other Islamic militias are themselves products of imperialist wars in the Middle
East Asia; invasion of Iraq in 2003, aggression on Libya in 2009 and attempting to regime change in
Syria since 2010. The Imperialists, particularly the US, created and supported the Islamic militias like
Taliban, Al Qaeda, ISIS and others financing and arming them through their client states like Saudi
Arabia, UAE, Yemen and so on.
The Guardian reported that a senior Turkish security official complained that European intelligence
agencies did not help Ankara track European Islamists arriving in Turkey to go to Syria and even
helped Islamist fighters deported from Turkey by issuing new passports and allow them to travel back
to Turkey. “Europe knows exactly what was happening, but they started a blame game and said the
entire problem was on the Turkish-Syrian border” said the official.
Until now the victims of such terrorist attacks, abetted by the policy of US imperialism and its
allies are innocent civilians across Middle East Asia and North Africa. Now this violence came back to
Europe killing innocent Europeans.
Western media estimated that approximately 30,000 foreign fighters travelled to Syria, with the
knowledge and complicity of the European intelligence agencies. According to Financial Times, “well
over 1200 returnees are in Europe”. It is the European imperialist rulers that created conditions for
terrorist attacks in their own countries. As their role in organizing terrorist attacks is getting exposed,
the bourgeois leaders of all hues and territories are diverting the people’s attention by inciting fear
and hatred against Muslim population in Europe. The Belgian government cancelled a demonstration
called “The march against Fear” organized by the Socialist Party with the spurious plea of lack of
sufficient police personnel. The same day it allowed the far right neo Nazi organization to move from
railway station to the square where the “March against the Fear” was to be organized, with anti-
Muslim and anti-immigrant slogans.TheBelgian Prime minister declared that “for us there will be
before and after”. It decided to pressurize the senate to allow amendment to declare emergency
situation that tramples the democratic rights of the Belgian people. In France, which declared state of
emergency after November 13 terrorist attacks, the socialist party government pressurizing its
parliament to include the authority of declare the state of emergency permanently in the constitution.
With each terrorist attack, the imperialists are building up police state powers for more draconian
attacks on the working class and democratic rights. They are further escalating the military interventions
and wars spreading the violence. This spiral of violence can only be stopped by opposing the imperialist
wars and imperialism itself and struggle for socialism.

image