image

[பேராசிரியர் தோடா ஜோதி ராணி, காகதிய பல்கலைக் கழகம், வாரங்கல்
-தெலுங்கானா-]
Class struggle ஆங்கில மாத இதழின் கட்டுரை.
தமிழில்:
தோழர்.கோவை ஈஸ்வரன்

விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை நோக்கிய இயக்கம் தற்பாேது இருப்பில் உள்ள உயர் கல்வியின் இயல்பு, வகை மாதிரி, கிடைக்த்தக்க நிலை ஆகியவற்றுடன் வலிமையான முறையில் தொடர்பு கொண்டதாகும்.சமூக வளர்ச்சியை அடைவதிலும், சமூக நீதியை அடையப் பெறுவதிலும் இது மூலயுக்தி ரீதியான பாத்திரத்தை வகிக்கிறது. மேலும் உயர் கல்வி நிறுவனங்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் அறிவிற்கான மையங்களாகவும், மானுட நாகரீகத்தின் முன்னாேடிகளாகவும் அறியப்படுபவை ஆகும்.எனவே அறிவைக் கற்றுக் கொடுப்பதாேடு மட்டும் அவை தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அவைகள் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடுதலை, சமத்துவம், சகாேதரத்துவம், சமூக நீதி போன்ற குறிக்காேள்களை அடையப் பெறுவதற்கான நேர்மை வாய்ந்த, தீவிரமான விவாதங்களைத் தெளிவாக முன் வைக்கின்ற வெளியாகத் திகழ வேண்டும். பல்கலைக் கழகங்களின் முதன்மையான செயல்பாடு பன்முகத் தன்மையை (வேற்றுமைகளைப்) பாதுகாக்கக் கூடியதாகவும் வர்க்கம், சாதி, மதம், பிரதேசம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலிருந்து தோன்றுகின்ற பாகுபடுத்தல், சுரண்டல், ஒடுக்குமுறை, வன்முறை போன்ற மனிதத் தன்மையற்ற சக்திகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வினாத் தொடுப்பவையாகவும், கூர்மையாக ஆய்வு செய்பவையாகவும் இருக்க வேண்டும். மனிதத் தன்மையும் பண்பும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியமைக்கின்ற போக்கை துரிதப்படுத்துவதில் முக்கியத்துவமுள்ள பாத்திரத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் உயர்கல்வியின் நிலையும் தகுதியும் தற்பாேது இந்தியாவில் எவ்வாறு உள்ளது?

வளர்ந்துவரும் நாடுகளின் சமூகப் பொருளாதார, அரசியல், கலாச்சாரக் கட்டமைப்புகளுக்கு கட்டளை இடுகின்ற, வழிநடத்துகின்ற உலகமயமாதல் என்ற தற்பாேதைய பின்னணியில் இந்தியாவில் உயர்கல்வியின் நிலைமை எவ்வாறு உள்ளது ?
எவ்வாறு கல்வித்துறையானது கார்ப்பரேட் முதலீடுகளின் தேவைகளுக்குப் பொருத்தமான முறையில் வடிவமைக்கப்படுகிறது?
இந்தப் போக்கை உருவாக்கி நிலை நிறுத்துவதில் சர்வதேச அழுத்தத்தின் குறிப்பாக உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றினுடைய பாத்திரம் என்ன?இந்தப் போக்கை பலப்படுத்துவதற்காக நமது தேசியக் கல்விக் கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள தீவிரமான மாற்றங்கள் யாவை? மனித விழுமியங்களைச் சீரழிப்பதை நோக்கி இது எவ்வாறு கொண்டுவிடுகிறது?இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும். நமது தற்பாேதைய கல்வி அமைப்பில் உள்ள இந்தப் போக்கு உயர்ந்த விழுமியங்களால் நிரம்பப் பெற்ற மாற்று கல்வியமைப்பினது தேவைக்கான ஒரு சூழலைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

உயர் கல்வியில் தனியார் துறை!

1980-களின் தொடக்கத்தில் இந்தியாவில் கல்வியை சந்தைப்படுத்தலுக்கான சரக்காக மாற்றம் செய்வதற்குச் சாதகமான சூழல் தோன்றத் தொடங்கியது என்பதைக் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவும் இத்துறையில் தனியார்துறை நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறை லாபத்திற்கானது மட்டுமே என்ற சூழல் தோன்றத் தொடங்கியது. 1990-91 களில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் உலகமயமாதல் நுழைந்ததைத் தொடர்ந்து இந்தப் போக்கு வேகமடைந்தது.

கல்வி, சுகாதாரம் போன்ற சேவைத்துறைகள் மானுட வளர்ச்சியை அடையப் பெறுவதற்கும், அதே போன்று சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக்கும் அடிப்படையாக இருப்பதால் அவை பொது மக்களின் நலனுக்கானது என வரையறுக்கப்பட்டது.எனவே எல்லாேருக்கும் சமமான அளவில் கல்வி கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் அரசியலமைப்புச்சட்ட ரீதியிலான பொறுப்பாகும். ஆனால் வருந்தத்தக்க முறையில் உலகமயமாக்கலானது கல்வியை பொதுமக்களின் நலனுக்கானது என்பதிலிருந்து சந்தைப்படுத்தலுக்கான சரக்கு என்பதாக மாற்றியமைக்கும் போக்கைத் தொடங்கி வைத்தது. கல்வி சுகாதாரம் போன்ற சேவைத்துறைகள் முதலாவதாக தனியார் மயமாக்கப்பட்டதானது உண்மையில் மிகப் பெரிய துயரமிக்க நிகழ்வாகும்.

இந்திய உயர்கல்வி அமைப்பு உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்தியாவில் ஏறத்தாழ 30 மில்லியன் மாணவர்கள் உயர்கல்வியை மேற்காெண்டு வருகின்றனர். இத்துறையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியா மற்றும் 152 ஆதிபத்திய உரிமையுள்ள நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ளும் போது அது வியப்பளிப்பதாக உள்ளது. இந்தத் துறை அண்மைக் காலம் வரை பொது மக்களின் சுற்றுவட்டத்தை சார்ந்ததாக இருந்ததால் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், சாதிகளைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் உயர்கல்வித் துறையில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற முடிந்தது. உயர்கல்வித் துறையை ஜனநாயக மயமாக்கிய இந்தப் போக்கின் விளைவாக எல்லாேருக்கும் கல்வியை கிடைக்கச் செய்வது உத்தரவாதப்படுத்தப்பட்டது.

இதற்கு மாறாக இந்தப் போக்குத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை, தனியார்மயமாக்கலின் மூலம் “எல்லாேருக்கும் சம வாய்ப்பு” என்ற இலட்சிய ரீதியான குறிக்காேள் இல்லாது ஒழிக்கப்பட்டது. எனவே கடந்த இருபது ஆண்டுகளாக 70% உயர்கல்வித் துறையின் விரிவாக்கமானது தனியார் துறையிலேயே நடந்தேறியுள்ளது.தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியாேடு கூட நமது கல்வி அமைப்பிலிருந்து மாறுபட்ட தன்மைகள் இல்லாதாெழிக்கப்பட்டுவிட்டன. உயர் மானுடப் பண்பு, சமூக விஞ்ஞானங்கள், தனிநிலை விஞ்ஞானங்கள் (pure science’s) தொடர்பான பாடத் திட்டங்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டதை காணமுடியவில்லை. விமர்சன பூர்வமான சிந்தனை, சமூக அக்கரைகள், மனித மற்றும் மனிதத் தன்மையாேடு கூடிய விழுமியங்கள் போன்றவற்றுக்கு இடமேதுமில்லை. தனியார் துறையில் ஒட்டுமாெத்த வளர்ச்சி அடிப்படையில் தொழில்சார் கல்வியுடன் குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுடன் கட்டுண்டதாக உள்ளது.

உயர்கல்வியில் சேர்வாேரின் விகிதம் 1999 மற்றும் 2013-14ம் ஆண்டுகளில் 49 இலட்சத்திலிருந்து 323 இலட்சங்களாக அதிகரித்துள்ளது. இதில் 65 சத வளர்ச்சியை தனியார் துறையில் மட்டுமே காணமுடிகிறது. அதைப்பாேன்றே இதே கால கட்டத்தில் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 184-லிருந்து 723-ஆக அதிகரித்துள்ளது. இதில் 75% தனியார் துறையிலேயே அதிகமாக உள்ளது.

உயர் கல்வியில் யார் முதலீடு செய்கிறார்கள் என்ற பிரச்சனையுடன் தொடர்புள்ளவர்களே திட்டவட்டமாக அதன் நிலையையும் விதியையும் தீர்மானிக்கிறார்கள். இவ்வாறு தீர்மானிக்கும் இவர்கள் கார்ப்பரேட் குழுமங்களைச் சேர்ந்த தனிநபர்கள், மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், உணவக உடமையாளர்கள், ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், சாராய முதலைகள் போன்ற பரந்துபட்ட அளவிலான பல பிரிவினரைக் கொண்ட பரிவாரங்களாவர். மேலும் தனியார் நிறுவனங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதானது சமச்சீரற்றதாகவும் முதன்மையாக நகரங்களில் குவிமையப்படுத்தப்பட்டும் உள்ளது. அதனுடைய கட்டணக் கட்டமைப்பு உயர் கல்வி அமைப்பினுள் ஏழைகள் நுழைவதற்கான வாய்ப்பைத் தருவதாக இல்லை.

தனியார் கல்வியின் மீதான சர்வதேச அழுத்தங்கள்

வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மட்டுமே ஒரே வழி என்ற கடுமையான வாதம் 1990-களின் காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனை வேறு எந்த மாற்றுமில்லை (TINA) என்ற சொற்களில் கூறினர். இந்தப் பின்னணியில் உலக வங்கியானது இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் மீது சமூக சேவைக்கான வழிவகை ஏற்பாடுகளை குறிப்பாக கல்விக்கும் சுகாதாரத்திற்குமான பொறுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவை தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தம் அளித்தது.

உலக வங்கியின் “தொலை நோக்குப் பார்வை” என்ற ஆவணமானது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்த இந்தியாவிற்கு கொடு்த்த அழுத்தத்தாேடு மனநிறைவு கொள்ள தன்னை அனுமதித்துக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய தாராளவாதத்திற்குச் சாதகமான ஒரு வலிமை வாய்ந்த தத்துவார்த்த அடிப்படையோடு கூடிய “தனியார் மயமாக்கல் அவசியமானது, தவிர்க்க முடியாதது, பயனுள்ளதும் கூட” என்பவற்றாேடு தொடர்புடைய விவாதங்கள் பலப்படுத்தப்பட்டன.இந்தக் கண்ணாேட்டத்திலிருந்து உலக வங்கி
உயர்கல்வி : 1994-ன் அனுபவங்களின் படிப்பினை என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. கல்வி “திறன்சார் பொருள்” என்பதாக அனுமானித்து எல்லாேருக்கும் கல்வியளிப்பதற்கு வளர்ந்து வரும் நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளை ஒருபுறம் இந்த அறிக்கை பாராட்டுகிறது. இதுவரை இந்த நாடுகள் பெற்ற முன்னேற்றமானது அந்த முயற்சிகளின் விளைவே ஆகும் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அதே நேரத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்கள் இந்தப் பொறுப்பிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டுமென்பது உண்மையில் முரண்பாடானதாகும்.

இந்த அறிக்கை கல்வி முறையை ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்கல்வி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது. இதில் முதல் இரு பகுதிகளான ஆரம்பக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் திறன்சார் பொருளாக வரையறுக்கப்படுகிறது. எனவே இவற்றை அளிக்கும் பொறுப்பை அரசாங்கம் தொடர்ந்து ஏற்க வேண்டும் என்கிறது. உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் இது திறன்சார் பொருள் அல்ல என வரையறுக்கிறது. இதை வழங்குவது அரசின் கடமையல்ல என வரையறுக்கிறது. தனிநபர்கள் இதைத் தங்கள் சக்திக்கேற்ப பணம் செலுத்தி வாங்கியாக வேண்டும். இவ்வாறாக அரசு உயர்கல்விக்கு நிதி வழங்குவதிலிருந்து தன்னைத் திரும்பப் பெற்றுக்காெள்ள வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைக்கிறது.அதாேடு கூட பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வி அமைப்பினுள் நுழைந்து அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மானியங்கள் போன்ற பயன்களைப் பறித்துக் கொள்கின்றனர் என அவ்வறிக்கை கூறுகிறது. இது இயற்கையாகவே சமமின்மையை அகலப்படுத்துகிறது. எனவே இத்துறையை தனியார் மயமாக்குவதன் மூலம் மட்டுமே சமத்துவத்தை அடையப் பெற முடியும். உண்மையில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு கல்வி கிடைப்பதை மறுக்கிற, உயர்கல்வியைத் தனியார்மய மாக்குவதை சமத்துவத்தை பெறுவதற்கான வழிமுறையாக முன்னிலைப்படுத்துவது தீவிரமான முரண்பாடாகும், கார்ப்பரேட் துறையினருக்கு அளவற்ற முறையில் திறமையற்ற அல்லது அரைத்திறமையுடைய மலிவான உழைப்பை உத்திரவாதப்படுத்தும் நோக்கத்தாேடு மக்கள் நலனுக்கானது என்ற பெயரில் பள்ளிக்கல்வி தொடருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இப்பாேது உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதே வினாவாகும்?

தனியார்மயமானது படிப்படியாக கார்பாெரேட்மயமாக மாற்றமடைந்து வருகிறது. இந்திய உயர்கல்வி அமைப்பானது கார்பாெரேட் துறையினரின் தேவைகளுக்கு ஏற்றவாறு தெளிவாக மாற்றப்பட்டு வருகிறது. தற்பாேது உயர்கல்வியை கற்பதன் குறிக்காேளானது கல்வியின் எல்லாவிதமான முக்கியமான பரிமானங்களையும் காவு கொடுத்து திறமைகளைக் கற்று, அயல் நாடுகளிலுள்ள பன்னாட்டு கார்ப்பரேஷன்களில் வேலை தேடுவதென்பதாேடு கட்டுண்டு கிடக்கிறது.அறிவுக்கான தாகம் என்பதற்கு மாற்றாக பன்னாட்டுக் குழுமங்களுக்குத் தேவையான திறன்களை கற்பது மற்றும் அடையப் பெறுவது என்பதாக முன் வைக்கப்பட்டுள்ளது. விமர்சன பூர்வமான சிந்தனையை காணாமல் போகச் செய்கின்ற விளைவையே இது ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போக்கினூடே மாணவர்கள் தன்மதிப்பு, சுயசார்பு, விடுதலை, சுதந்திரம் ஆகியவை பற்றிய உயர்ந்த உணர்வாற்றலையே இழந்து வருகின்றனர். அவர்கள் திறமையுடையவர்கள் ஆனால் குருடர்கள்! மூளையற்றவர்கள்! அவர்கள் உலக முதலாளியத்திற்கு சேவகம் புரிவார்கள் முதலாளியச் சுரண்டலைப் பற்றியாே, ஒடுக்குமுறை அநீதிகளைப் பற்றியாே அவர்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது, இவ்வாறு உயர்கல்வியை கார்ப்பாெரேட் மயமாக்குவது என்பது தன்னலமே கருதுகிற அணுகுமுறையையும், அடிமை மனாேபாவத்தையும், குணாம்சங்களாகக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதே ஆகும். ஆளுகின்ற ஆதிக்க வர்க்கங்கள், ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவற்றைப் பற்றி அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் உலக வங்கியின் இறுதியான குறிக்காேள் என்பது கார்ப்பாெரேட் ஆதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியச் சுரண்டல் ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட, தொலை நோக்குப் பார்வையில் கேள்வி எதுவும் கேட்காத, எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காத கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஒரு அறிவு ஜீவி உலகை உருவாக்குவதே ஆகும். மேலும் இந்தக் கட்டுமானத்தைப் பலப்படுத்துவதற்கான சர்வதேச அழுத்தங்கள் உலக வங்கியின் கொள்கைகளாேடு மட்டுமே கட்டுண்டதாக இல்லை. இதாேடு கூட இன்னும் அழுத்தத்தைக் கடுமையாக்கி இந்தப் போக்கைத் தீவிரப்படுத்த உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தங்களினது ஆதரவையும் இது பயன்படுத்துகிறது.

எனவே உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்ட காலகட்டத்தில் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற சமூக சேவைத்துறைகளில் சேவைத்துறையிலான வர்த்தகத்தின் மீதான பொது ஒப்பந்தத்தின் கீழ் (காட்) உலக வர்த்தகக் கழகமானது அத்துமீறி நுழைந்தது, சேவைத்துறையை தாராளமயமாக்குதலை வளர்த்தெடுப்பதற்காக இது கட்டுப்படுத்துவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அடங்கிய ஒரு தொகுப்பாேடு 1995-ஜனவரி 1-ல் நடைமுறைக்கு வந்தது, இந்த ஒப்பந்தம் இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகள் தங்களின் மக்கள் நலனுக்கான சேவைத்துறை அனைத்தையும் அயல் நாட்டினரின் போட்டிக்குத் திறந்துவிட நிர்பந்திப்பதாக அமைந்ததாேடு எதிர்காலத்தில் திரும்பப் பெறவே முடியாதபடியான கட்டுப்பாடுகளை ஏற்கவும் அவர்களை நிர்பந்தித்தது. இந்தப் போக்கானது அந்நிய பன்னாட்டுக் குழுமங்கள் சேவைத்துறைகளை “கார்ப்பாெரேட் கையகப்படுத்தல்” என்ற பெயரால் கையகப்படுத்துவதற்கான விளைவை ஏற்படுத்தியது என்பதாேடு சேவைத்துறையை தனியார் மயப்படுத்தவும் நிர்பந்தித்தது.
எப்படியிருப்பினும் உலக வர்த்தகக் கழகத்தின் செயலும் இறையாண்மை கொண்ட நாடுகள் காட்ஸ் ஒப்பந்தத்தை ஏற்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கான உரிமை படைத்த நாடுகள் எத்தகைய சேவைத்துறைகளை காட்ஸ் ஒப்பந்தத்தின் எல்லையின் கீழ் கொண்டுவரலாம் என்ற முடிவை எடுப்பதற்கான உரிமை கொண்டவை எனக் கூறியது. ஆனால் நடைமுறையில் எந்த வளர்ந்து வரும் நாட்டிற்கும் காட்ஸின் முன்மாெழிதல்களை நிராகரிப்பதற்கான எந்த உரிமையும் கிடையாது. ஆனால் வளர்ந்துவரும் நாடுகள் தாமாக ஏற்கும் நிபந்தனை என்பதன் கீழ் இவற்றை கட்டாயமாக ஏற்றே ஆக வேண்டும்.எனவே 1995-ன் தொடக்கத்தில் இந்தியா காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் தொடங்கி சமூக சேவைத்துறை சந்தைகள் குறிப்பாக கல்வி சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கி எல்லா சேவைத்துறை சந்தைகளும் வளர்ந்த நாடுகளுக்கும் ஆதிக்கநிலை நாடுகளுக்கும் எளிதில் அணுகத்தக்கதாக ஆயிற்று.

அரசின் கட்டுப்பாடற்ற வாணிபக் கோட்பாடு (…….) என்ற செவ்வியல் அமைப்பு அரசு பொருளாதார நடவடிக்கைகளில் அனுமதிக்காது, ஆனால் “புதிய தாராளவாதம்” பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனமானவை, தனியார் துறை திறமை மிக்கவை என்ற வாதத்தை பிரபலப்படுத்தின எனவே தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறாக தனியார் மயமாக்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அழுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது என்ற அரசாங்கத்தின் பாத்திரம் சமூக அநீதி, பொருளாதாரச் சுரண்டல் போன்றவை தொடர்பான எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமான கார்ப்பாெரேட் துறையை ஊக்குவிப்பது என்பதாக மாற்றமடைந்தது.

தனியார் மயத்தையும் கார்ப்பாெரேட் மயத்தையும் நோக்கி

உண்மையில் இந்தப் போக்கு இந்தியாவில் 1980-களில் தொடங்கியது. கல்வி அமைச்சகம் 1985-ல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமாக மாற்றமடைந்ததிலிருந்து கல்வியின் சமூக வளர்ச்சி என்ற குறிக்காேள் காணாமல் போயிற்று, உயர்கல்வி என்ற குறிக்காேளில் எத்தகைய தன்மை கொண்ட மாற்றம் தேவைப்படுகிறது? இப்பாேது இளைஞன் உலக சந்தைக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் கற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கார்ப்பரேட் அதிகாரத்தினது மேலாதிக்கத்தையும் அதன் அளவற்ற லாபத்தையும் மற்றும் ஒட்டு மொத்தமான ஏகாதிபத்தியச் சுரண்டலையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இன்றைய இளைஞன் அடிமை மனப்பான்மையை பெற்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களை இத்தகைய குணாம்சத்தாேடு வளர்தெடுக்க வேண்டியது உயர்கல்வி அமைப்பின் பொறுப்பாகும், இந்தக் கண்ணாேட்டத்துடன் மட்டுமே 1986-ன் தேசியக் கல்விக் கொள்கை (புதிய கல்விக் கொள்கை) உருவாக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டுக்காக பல்கலைக் கழகங்கள் அரசாங்கத்தை சார்ந்து இருப்பதை எதிர்பார்க்கக் கூடாது என இக் கொள்கை தெளிவாகக் கூறுகிறது. எனவே இது தனது செலவுகளை வெட்டிக் குறைத்துக் கொள்ள முன்மாெழிவதாேடு சுயமாக நிதியளித்து கல்வி கற்கும் முறையை அறிமுகப்படுத்தி பணத்தை சம்பாதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்காெள்ளவும் முன்மாெழிகிறது.
1990-ல் உலகமயமாதல் போக்கு நுழைந்த பின்னர் இந்தப் போக்கு ஒரு தெளிவான வடிவத்தை எடுத்தது. காட்ஸ் ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் உயர்கல்வித் துறை அந்நிய முதலீடுகளுக்கான ஒரு பெருஞ்சந்தையாக மாற்றமடைந்தது. உயர்ந்தபட்ச லாபத்தைப் பெறுவதற்கான  சரக்காக அது மாற்றப்பட்டது. உடனிகழ்வாக பொது மக்கள் கல்வி நிறுவனங்கள் சீரழிந்து போவதற்கான ஒரு அடிப்படை தோற்றமெடுத்தது. 1995-ல் தனியார் பல்கலைக்கழகச் சட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்வி தனியார்மயமாக்கப்படுவது சட்டபூர்வமாக்கப்பட்டது. இதன் விளைவாக மனித மூலாதாரங்கள் உள்ளிட்ட எல்லா மூலாதாரங்கள் மீதும் கார்ப்பாெரேட் அதிகாரத்தின் ஆணை உரிமையும் மற்றும் மேலாதிக்கமும் வலிமையாகத் தோன்றி எழத் தொடங்கியது.

உயர்கல்விக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடும் மானியங்களும் 1997-க்குப் பிறகு குறையத் தொடங்கியது. அதாவது 5 ஆண்டுகளில் 90% லிருந்து 25% ஆக குறைந்தது.

2000-ல் வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான பிரதம மந்திரியின் கவுன்சில் முகேஷ் அம்பானி-குமாரமங்கலம் பிர்லா குழுவை நிறுவியது. இக்குழு “கல்வியில் சீர்திருத்தங்களுக்கான கொள்கைச் சட்டத்தின் மீதான அறிக்கை” என்ற தலைப்பிலான தனது அறிக்கையை சமர்ப்பித்தது. உயர்கல்வியில் தனியார் மயமாதலை விரைவுபடுத்த தனது முன்மாெழிதல்களையும் பரிந்துரைகளையும் இக்குழு அளிக்கும் என எதிர்பார்க்ப்பட்டது. இந்த அறிக்கை உயர்கல்வியை தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் வாதங்களுக்கு வலிமையான ஆதரவை விரிவுப்படுத்தியது.

எனவே எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக இந்த பரிந்துரைகள் நடை முறைக்கு வந்தன. இந்த அறிக்கை மிகுந்த வலிமையுடன் பரிந்துரைத்தவை வருமாறு:

1) உயர்கல்வித்துறை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அனுமதியளித்தாக வேண்டும்.

2) இந்தத்துறை லாபந்தரக்கூடிய வர்த்தக நடவடிக்கையாகத் தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

3) முழுமையாக மானியங்களை வழங்கும் முறைமையை அகற்ற வேண்டும்.

4) பயனாளிகள் பணம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

5) கல்விக்கான செலவை ஏற்க முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

முதலீட்டாளர்களுக்கு லாபங்களை உத்தரவாதம் செய்வதற்கு இந்த மாற்றங்கள் அவசியமாகும். மேலும் இந்த மாற்றங்கள் இத்துறையில் முதலீடு செய்ய அவர்களை கவர்ந்திழுக்கும். உடனடியாக பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி அமைப்பை ஒரு தொழிற்துறையாகவும், கார்ப்பாெரேட் விழுமியங்களை வளர்த்தெடுக்கும் வகையிலும் மாற்றமடையச் செய்வதற்கு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முன்முயற்சிகளை மேற்காெண்டன.

இந்தப் போக்கை துரிதப்படுத்துவதற்காக உலக வங்கி “அறிவுக்கான சமுதாயத்தைக் கட்டியமைப்பது:”
மூன்றாம் நிலைக் கல்வி எதிரிடும் புதிய சவால்கள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை 2002-ல் வெளியிட்டது. இந்த அறிக்கை உயர்கல்வி பொதுமக்கள் நலனுக்கானது என்பதை ஏற்கிறது ஆயினும், பயனுள்ள முறையிலும், திறனாற்றலுள்ள முறையிலும் இதை தனியார் துறை வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ளும் போது அது திகைப்படச் செய்வதாக உள்ளது.
எனவே இதற்குப் பொதுமக்கள் தனியார் கூட்டுப் பங்கேற்பு (PPP) என்பது ஒரு தீர்வாக அமையும் மேலும் அவ்வறிக்கை உயர்கல்வியின் குறிக்காேள் “அறிவுசார் சமுதாயங்களை உருவாக்குவது” எனக் குறிப்பிடுகிறது.

அந்த அறிவுனுடைய இயல்பு எதுவாக இருக்க வேண்டும்? கார்ப்பாெரேட் துறைக்கும் பயனளிக்கக் கூடிய ஒன்றாக அதைப் போன்றே அதை வலிமையடையச் செய்கின்ற ஒன்றாக உயர்கல்வி அறிவைக் கற்பிக்க வேண்டும். இதன் விளைவாக கலாச்சாரத்தை மேம்படுத்துவது-சமூக நீதியை அடையப் பெறுவது- மனித இனத்திற்கான மனித உறவுகளின் முன்னேற்றமே கலாச்சாரம் போன்ற உயர்கல்வியின் குறிக்காேள்கள் அழிவுக்குள்ளாகிறது. எனவே விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தைக் கட்டியமைப்பதற்கு அறிவு என்பது கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்றாக இருந்தாக வேண்டும்.

இது சுயநலம் மிக்க, அடிமை மனாேபாவமுள்ள, அதே நேரத்தில், தன்னம்பிக்கை, சுயமதிப்பு, சுயசார்பு, அநீதிக்கு எதிராகப் போராடுவது போன்ற மகத்தான பண்புகளைக் கொண்டிராத ஒரு வகைப்பட்ட சாவி கொடுத்தால் இயங்குகிற பொம்மைகளையே உருவாக்கும். இந்த சாவியால் இயங்கும் பொம்மைகள் அதிகரித்து வரும் சுரண்டலையோ, ஒடுக்குமுறையையாே, வன்முறையையாே, சமத்துவமின்மையைப் பற்றிய கேள்வி எதுவும் கேட்காது. இவைகள் வெறும் கருவிகள் என்ற நிலைக்கு சீரழிந்து கார்ப்பாெரேட்டுகளின் நலனுக்காகவே பணிபுரியும்.

இந்தியாவிற்கான இந்த பரிந்துரைகளின் தேவைகளையும் பொருத்தப்பாட்டையும் விளக்குவதற்காக நமது அரசாங்கம் 2007-08ல் தேசிய அறிவுசார் ஆணையத்தை நிறுவியது. இந்த ஆணையம் அரசின் தேவைகளுக்கு இணங்க பரிந்துரைகளை வழங்கியது. இந்தியாவை ஒரு “அறிவுசார் சமூகமாக” உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும். ஆனால் நமது அரசாங்கம் இந்தக் குறிக்காேளை அடையப்பெறுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களையாே, திறனையோ, அறிவுசார் வளத்தையோ கொண்டதாக இல்லை. எனவே நமது மாணவர்கள் அறிவைப் பெறச் செய்வதற்கு கைவசமுள்ள ஒரே தேர்வு அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களையும், அந்நிய கார்ப்பாெரேட் முதலீட்டையும் அழைப்பது என்பதுதான் இக்குழுவின் வலிமைமிக்க பரிந்துரையாகும்.

இந்தப் பரிந்துரைகளை திறனாற்றலுடன் நடைமுறைப்படுத்துவதற்காக 2009-ல் அரசாங்கம் யஷ்பால் தலைமையில் ஒரு குழுவை நிறுவியது. உயர்கல்வித் துறையை மேம்படுத்த தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவ வேண்டியது அவசியம் என்றும், எனவே அவை ஊக்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் இக்கமிட்டி வலிமையான முறையில் பரிந்துரைத்தது. இவ்வாறாக கொள்கை மட்டத்தில் உலக வங்கியின் அழுத்தத்திற்கு ஏற்ப ஒரு வலிமை மிக்க அடித்தளம் உருவாக்கப்பட்டது.
“சமத்துவத்தையும்”, “திறனாய்வையும்”, பெறுவதற்காக இந்திய உயர்கல்வி அமைப்பை கார்பாரேட் மயமாக்குவதற்கும், தனியார்மயமாக்குவதற்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதற்கும் உலகவங்கி இத்தகைய அடித்தளத்தை அமைக்க அழுத்தமளித்தது.

உயர் கல்வியைத் தனியார்மயமாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

12-வது ஐந்தாண்டுத் திட்ட வரைவின் உயர்கல்வி தொடர்பான முன்மாெழிதல்கள் 2012 டிசம்பர் 27-ல் தேசிய வளர்ச்சிக் கழகத்தின் முன்வைக்கப்பட்டது. இக்கூட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பரப்புகளில் தேவையான ஒழுங்குமுறை ஏற்பாடுகளுடன் லாபம் பெறக்கூடிய உயர்கல்வி நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கும் வகையில் இருப்பில் உள்ள சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பரிந்துரைத்தது. இக்கூட்டம் மேலும் லாபம் பெறக்கூடிய நிறுவனங்களிடமிருந்து வரி வசூலித்து அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து பெரிய அளவில் மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி அளிக்குகம் (ஸ்காலர்ஷிப்) திட்டங்களுக்கும் செலவிடலாம் என்றும் பரித்துரைத்தது. இக்கூட்டம் மேலும் தனியார் நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து கடன் பத்திரங்கள் (….) பங்குகள் (ஷேர்ஸ்) ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டி 1956-கம்பெனிகள் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் புதிய நிறுவனங்களை நிறுவ அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைத்தது. இருப்பில் உள்ள அறக்கட்டளைகள் சொசைட்டிகள் ஆகியவை தங்கள் நிறுவனங்களை 1956-குழுமங்கள் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழான நிறுவனங்களாக சட்டப்பூர்வமான தகுதியைப் பெறுவதை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைத்தது.

இவ்வாறாக இந்தியாவின் உயர்கல்வித் துறையில் தனியார் கார்ப்பரேட் சக்திகளின் மேலாதிக்கம் அதிகரித்தது. மேலும் தனியார் துறையின் நலனுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் தனியார் கூட்டுப் பங்கேற்பு (ppp) தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. திட்ட ஆணையம் இந்தப் போக்கை விரைவுபடுத்துவதற்காக நாராயணமூர்த்தி கமிட்டியை (….) தேவையான வழிகாட்டுதல்களுக்காக அமைத்தது. நாராயணமூர்த்தி கமிட்டியின் பரிந்துரைகள் யாவை?

திட்ட ஆணையமானது 2012-மே8-ல் “உயர்கல்வியில் கார்ப்பாெரேட் துறையின் பங்கேற்பு” என்ற தலைப்பிலான நாராயணமூர்த்தி கமிட்டியின் அறிக்கையை வெளியிட்டது.

இந்தக் கமிட்டி அடிப்படையில் மூன்று மையமான அம்சங்களைக் குவிமையப்படுத்தியது
1) தனியார் கார்பாெரேட் மூலதனத்தை ஈர்க்கும் வகையிலான சூழலை உருவாக்குவது.
2) ஆராய்ச்சி மற்றும் கற்பிக்கும் வினைத்திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கார்ப்பாெரேட் ஆதரவைப் பெறுதல்.
3) இருப்பில் உள்ள நிறுவனங்களுக்கும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கும், அறிவு வளர்ச்சிக்கான மையங்களை அல்லது சொத்துக்களை (……) உருவாக்குவதற்கும் கார்ப்பாெரேட் முதலீடு.

நாராயணமூர்த்தி கமிட்டியின் அறிக்கை பொதுமக்களுக்கான கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறையையும், அவற்றின் திறன் இன்மையும் பற்றித் தெளிவாக விளக்குகிறது. எனினும் இப்பிரச்சனைக்கான மூல காரணத்தை அடையாளம் காண்பதற்கான எந்த முயற்சியையும் இந்த அறிக்கை செய்யவில்லை. ஆனால் திறமையின்மை என்பது அரசாங்க நிறுவனங்களுக்கே உரிய தனிச்சிறப்பான போக்கு என மட்டும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த அமைப்பை திறனுள்ளதாக ஆக்குவதற்கு தனியார்மயமாக்குதலைத் தவிர வேறு வழியில்லை. பொது மக்களுக்கான கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள் கட்டுமான வசதியின்மை, மோசமான கல்வித்தரம், வேலையில் அமர்த்துவதில் உள்ள பலவீனம், நிதியைப் பெறுவதில் உள்ள இடைவெளி ஆகியவற்றால் இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. எனவே இத்துறையில் கார்ப்பாெரேட் முதலீடு நுழைவதன் மூலம் மட்டுமே இந்த சவால்களுக்குத் தீர்வு காண முடியுமென்று இக் கமிட்டி வாதிடுகிறது.

இக்கமிட்டியால் இப்பிரச்சனை தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மிக உயர் நிலையில் உள்ள 75 பல்கலைக் கழகங்களையும் உயர்கல்வி நிறுவனங்களையும் தரவரிசை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்காெள்ள வேண்டியது முதற் கடமையாகும் இதற்காக ஒவ்வாெரு நிறுவனத்திற்கும் ரூ 175-கோடியிலிருந்து 200-கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.

ஒவ்வாெரு நிறுவனத்திற்கும் ரூ 500-கோடியென முதலீடு செய்யப்பட்ட உலகத் தரம் வாய்ந்த 20 புதிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட வேண்டும். அடையாளம் காணப்பட்ட நகரங்களிலும், நாட்டினது கல்வி மையங்களிலும், தனியார் பொதுமக்கள் கூட்டாகப் பங்கேற்கும் நிறுவனங்கள் (….) மூலமாக அதே மாதிரியான 20 புதிய தேசிய அறிவுசார் தொகுதிகள் அல்லது மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்குத்தேவையான நிதி மைய மாநில அரசாங்கங்களாலும் கார்ப்பாெரேட் துறையாலும் வழங்கப்பட வேண்டும். புதிய நிறுவனங்களை அமைப்பதற்கும் இத்துறைக்கு கார்ப்பாெரேட் முதலீட்டை கவர்ந்திழுப்பதற்கும் கட்டணமேதுமின்றி இலவசமாக நிலங்களை 999 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் நாராயணமூர்த்தி கமிட்டி பரிந்துரைக்கிறது.

பன்னாட்டு கார்ப்பாெரேஷன்களின் தேவைக்கு ஏற்ப அறிவை கற்பிக்கச் செய்வதற்கான அறிவை போதிக்கும் சொத்தான அமைப்புகளையும் ஆராய்ச்சி மையங்களையும் நிறுவுவதற்கு ஊக்கமளிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு 2012-க்கும் 2017-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்கு ரூபாய் 40,000-கோடி தேவைப்படும்.

மைய மாநில அரசாங்கங்கள் கார்ப்பரேட் முதலீட்டிற்கு முழுமையான ஆதரவை விரிவுப்படுத்த வேண்டும் என்பதாேடு எவ்வளவு முடியுமாே அவ்வளவிற்கு நிதிரீதியான ஊக்குவிப்புகளையும், சலுகைகளையும் அளிக்க வேண்டும்.

இதாேடு கூட “பொது மக்கள் நலனுக்கானது என்ற வகையில் உயர்கல்வி” என்பது தொடர்பான வாதங்களும், விவாதங்களும் முடிவுக்கு வந்தது. தத்துவம் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்ட சர்வதேச தேசிய
அழுத்தங்கள் இந்த சீரழிவுப் போக்கைப் பற்றி எந்தவித கருத்து வேற்றுமையையும் அனுமதிக்காத அளவிற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “உயர்கல்வி என்பது சந்தைக்கான சரக்கு” என்பதாேடு இத்துறையிலான முதலீட்டின் முதன்மையான நோக்கம் என்பது லாப நோக்கம் கொண்டது என்பதை இப்பாேது எல்லாேரும் ஒப்புக்காெள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தத் துறையை கார்ப்பரேட் முதலீட்டின் மூலம் மட்டுமே மேம்படுத்த முடியும். இவ்வாறாக கார்ப்பாெரேட் சக்திகளின் நுழைவு என்பது முன்நிபந்தனையாகும் என்பதாேடு தேவையான நிபந்தனையுமாகும். இந்தத் துறையில் கார்ப்பாெரேட் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்பட வேண்டும். இதற்காக அரசாங்க நிலத்தைத் தர வேண்டும். வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். பல்வேறு வகைப்பட்ட ஊக்குவிப்புகளைத் தர வேண்டும். இதற்காக மைய-மாநில அரசாங்கங்களின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் வலிமையான ஆதரவைத் தந்தாக வேண்டும். இந்தத் துறையில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச லாப விகிதமான 20 முதல் 30 சதத்தை உத்தரவாதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும்.

இந்தப் போக்கினது விளைவுகள் யாவை?

ஒட்டுமாெத்த உயர்கல்வி அமைப்பானது கார்ப்பரேட் மேலாதிக்கத்தையும், கார்ப்பரேட்டின் லாபங்களையும் உத்தரவாதம் செய்வதற்காக தனது ஒட்டு மொத்த சக்தியாற்றலையும், முயற்சிகளையும் அதற்குத் தேவையான அறிவையும், திறனையும் கொண்ட இளைஞனை உருவாக்குவதை நோக்கித் திருப்ப வேண்டும்.

சமூக நீதியைப் பற்றிய எத்தகைய கருத்தையோ, கவலையையாே இது கொண்டிருக்காது. சமூக உணர்வு என்ற கேள்விக்கே இடமில்லை, மிக உயர்ந்த சம்பளத்தாேடு கூடிய வேலையைத் தேடி ஓடியலைவதை மட்டுமே தெரிந்து கொண்ட சுயநலமிக்க இளைஞனை, நுகர்வுக் கலாச்சாரம் என்ற விஷம் தோய்ந்த வட்டத்தின் வலிமை மிக்க பகுதியாக ஆவதற்காக உயர்ந்த வருமானத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இளைஞனை இது உருவாக்கியுள்ளது. சமூகத்தைப் பற்றியாே சமூக விழுமியங்களைப் பற்றியாே பேசவாே,சிந்திக்கவாே அவர்கள் தவறுகின்றனர். கூட்டு நடவடிக்கைகளும், மனித விழுமியங்களும் சீரழிவதற்கான காரணங்களைப் பற்றியெல்லாம் விவாதிக்க இடம் ஏதுமில்லை. இளைஞனை இவ்வாறு மாற்றி அமைப்பது ஏகாதிபத்தியச் சுரண்டலை ஊட்டி வளர்ப்பதற்கும் மேலும் அது தொடர்வதற்கும் அவசியமாகின்றது.

சர்வதேச அளவில் உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும், தேசிய அளவில் இந்திய அரசாங்கம் உள்ளிட்டு வளர்ந்துவரும் நாடுகளின் அரசாங்கங்களும் இவற்றை நடைமுறைப்படுத்த கொள்கைகளை வகுத்து வருவதாேடு அதற்காக வலிமையான கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் நெருக்கடி என்ற விஷவட்டத்தை உடைக்க முடியாதபடி பலப்படுத்துகின்றனர். அவர்கள் மிக வேகமாக சிதைவையும், அழிவையும் நோக்கி நகர்கின்றனர்.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு(CSR)

நாராயணமூர்த்தி கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாராளுமன்றம் 2012-ம் ஆண்டு டிசம்பரில் 2012-ம் ஆண்டு குழுமங்களுக்கான சட்ட மசாேதாவை ஏற்றுக் கொண்டது இதன்படி கார்ப்பரேட்டுகள் சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டியது கட்டாயமாகும் ரூ 500-கோடி நிகர மதிப்பையோ அதற்கு மேற்காெண்ட நிகர மதிப்பையோ கொண்ட ஒவ்வாெரு குழுமமும், அல்லது
ரூ 5-கோடியையோ அல்லது மேற்பட்ட நிகர லாபத்தை பெறுகின்ற ஒவ்வாெரு குழுமமும் அல்லது ஒவ்வாெரு நிதியாண்டிலும் ரூ.1,000-கோடிக்கு மேல் வரவு செலவு செய்கிற ஒவ்வாெரு குழுமமும் கார்பாெரேட் சமூகப் பொறுப்புக்கான ஒரு குழுவை அமைப்பதாேடு ஒவ்வாெரு நிதியாண்டிலும் நிகர லாபத்தில் 2%-ஐ இதற்காகச் செலவிட வேண்டும்.

புதிய மசாேதா தனியார் துறையில் மனித நேய கொடையாண்மை என்ற கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களைச் சுரண்டுகிற நிறுவனங்களுக்கே அவர்களைக் காக்கின்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூலாதாரங்கள், நிலம், உழைப்பு போன்றவற்றை சுரண்டுவதிலேயே கார்ப்பாெரேட் சக்திகளின் வாழ்வும், இருப்பும் உள்ளது.

ஐயகாே!
இவர்களுக்குச் சமூகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உயர்கல்வி அமைப்பில் நுழைவது சமூகத்திற்கு சேவை செய்ய அல்ல! லாபத்தைப் பெறுவதற்கே! கார்ப்பாெரேட் முதலீடுகளைக் கவர்வதற்காக, அவர்களின் லாபத்தை உறுதிப்படுத்தும் கொள்கைகளிலும், திட்டங்களிலும் அரசாங்கம் தீவிரமான மாற்றங்களைச் செய்துள்ளது. அப்படியிருக்க சமூகப் பொறுப்பேற்பு என்ற வினாவுக்கு இடமேது? இது தவறான கண்ணாேட்டத்துடன் மக்களை வஞ்சிப்பதே தவிர வேறல்ல!

பல்கலைக் கழகங்கள் அதே போன்று உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலையும், தகுதியும் எவ்வாறு உள்ளது?

அரசால் நடத்தப்படும் மக்களுக்கான பல்கலைக் கழகங்களில் மட்டுமே எந்தப் பாகுபாடுமின்றி எல்லாேராலும் கல்வி பெற முடிகிறது. அவைகள் விமர்சன பூர்வமான சிந்தனைக்கும், மதிப்பீடுகளுக்கும் இடமளிக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் மூலம் மட்டுமே ஜனநாயக விழுமியங்களும், பன்முகத்தன்மைகளும் (வேற்றுமைகளும்) பாதுகாக்கப்படுகின்றன. சமூகப் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான விவாதங்களுக்கான மேடையாக அவை திகழ்கின்றன. இதில் பயிலும் மாணவர்கள்தான் சமூக மாற்றத்துக்கான எந்த ஒரு இயக்கத்திலும் முன்னணியில் நிற்கின்றனர். இந்த பெரும் பல்கலைக் கழகங்கள் சமூகத்தினது இயக்கத்தைப் பற்றிய ஒரு முற்பாேக்கான திசை வழியைத் தருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் குண்டூரில் ஆசார்ய நாகார்ஜூனா பல்கலைக் கழகத்தில் 2015-ல் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிடுவது பொறுத்தமானதாகும். ரித்திஷ்வரி என்பவர் கட்டிடக் கலை பொறியியற் பிரிவு மாணவியாவார். இவர் சந்தேகத்திற்கு இடந்தரக்கூடிய சூழலில் மரணமடைந்தார். முற்பாேக்கு ஜனநாயக மாணவர் அமைப்பு (PDSO)., ஸ்த்ரீ விமுக்தி சங்கதனா போன்ற பெண்கள் அமைப்புகள், மனித உரிமை ஜனநாயக அமைப்புகள், இந்த நிகழ்வை கடுமையாகக் கண்டித்ததாேடு ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்தனர். மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மையை சமூகத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. எல்லாவிதமான பொறுப்பு வாய்ந்த அமைப்புகளும் உண்மையை அறியவும் இது போன்ற அவக்கேடான நிகழ்வுகளுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பவும், மக்களுக்கான அரசு நிறுவனங்களில் மட்டுமே சாத்தியமாகும்.

மனிதத் தன்மையற்ற கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது, துன்புறுத்தல்கள், போட்டி என்ற பெயரில் மாணவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது, ஆகியவை கார்ப்பரேட் கல்லூரிகள் மாணவர்களிடையே மூச்சுத் திணறக்கூடிய சூழலை உருவாக்குவதாேடு மாணவர்கள் தற்காெலை செய்து கொள்ளும் விளைவை ஏற்படுத்துகிறது. உண்மைகளை அறிய இந்த நிறுவனங்களுக்குள் நுழையும் எந்த அமைப்புகளுக்காவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த நிறுவனங்களில் முழுமையாக ஜனநாயகமற்ற நடைமுறைகள் நிலவுகின்றன. எந்தக் கண்டனமும் இல்லை! வினா எதுவும் எழுப்ப முடியாது! எல்லாவற்றையும் ஏற்க மட்டுமே செய்ய வேண்டும். இது ஏகாதிபத்தியம் உயிர்வாழ்வதற்கு அவசியப்படுகிறது.

பல்கலைக் கழக மானியக் குழுவை அமைத்ததன் முதன்மையான நோக்கமே, 1948-ல் ஏற்படுத்தப்பட்ட முதலாவது பல்கலைக் கழக கல்வி ஆணையம் பரிந்துரைத்த வழிமுறையின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களின் சுயாட்சியையும், நிலவும் பன்முகத் தன்மைகளையும், வேற்றுமைகளையும் பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கை எடுப்பதற்காகத்தான். வருந்தத் தக்க முறையில் பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இடையிலான வித்தியாசங்கள் படிப்படியாகக் குறையலாயின பல்கலைக் கழகங்களின் சுயாட்சியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தேர்வு அடிப்படையிலான மதிப்பு அமைப்பு, சமச்சீர் பாடத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சியையும், பன்முகத் தன்மையையும், வேற்றுமைகளையும் நசுக்கக் கூடிய அரசாங்கத்தின் கையிலான கருவியாக பல்கலைக் கழக மானியக்குழு வார்த்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டப்படிப்பிற்கு கீழ் நிலையில் வழங்கப்படும் கல்வி “மையம்”, “பொது” “வெளிப்படை” என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மையக் கல்வியைக் கற்பிப்பதற்கு மட்டும் நிரந்தரமான ஆசிரியர்கள் தேவைப்படுவர்.  மற்ற இரு கல்விப் பிரிவிற்கும் பகுதி நேர ஆசிரியர்களே போதுமானவர்கள் ஆவர். இயற்கையாகவே இதன் விளைவாக ஆசிரியர்களுக்கான பணியானது ஒழுங்குமுறை சாராப் பணியாக மாற்றப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை யாதெனில் இரண்டு தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் யாருமே சேர்க்கப்படவில்லை, நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. சுயநிதிக் கல்வியும், தொலைதூரக் கல்வியும் பல்கலைக் கழகங்களை நடத்துவதற்கான உண்மையான நிதி மூலாதாரமாக ஆகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் ஆசிரியர்கள் குறைந்து வருவதன் முக்கியத்துவம் காரணமாக மாநிலத்தின் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக துணை வேந்தர் பணியிடம் நிரப்பப்படாமலே உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு மாநிலப் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக கல்லூரி விடுதிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியாேரின் கடுங்கண்டனத்திற்கிடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயமாக்கப்பட்டது. கார்ப்பாெரேட் சக்திகள் கொடுக்கின்ற அழுத்தங்களின் விளைவாக அரசாங்கம் பல்கலைக் கழக்களை தகுியற்ற அமைப்புகளாக ஆக்குவதற்கு ‘விசுவாசத்துடன்’ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருந்தத்தக்க நிலையில் சில ஆசிரியர்களும் சில மாணவர்களும் சீரழிவை நோக்கிய இந்த மாற்றத்திற்கான கருிகளா ஆகி வருகின்றனர். இந்த நிறுவனங்களைமைூடுவதற்கு நடவடிக்கை எடுத்தாலும் கூட கேள்வி கேட்பதற்காே கண்டிப்பதற்காே யாருமே இல்லை! ஆராய்ச்சிக் கல்வியின் தரமும் மதிப்பும் பாழ்பட்டு வரும் போக்கை எவருமே நிராகரிக்க முடியாது. ஆராய்சாசிப் படிபபும் கூட சந்தைசை் சரக்காக மாற்றப்பட்டு விட்டது. இது ஒரு தனிமைப் படுத்தப்பட்ட பிரச்சனையைாே தனிநபர் பிரச்சனையோ அல்ல. மாறாக இந்த நிறுவனங்களைப் பயனற்றதாக நம்பிக்கையைற்றதாக, தேவை யற்றதாக மாற்றுகின்ற போக்கினது பிரிக்க முடியாத பகுதியாகும் எனவே இதற்கு எந்தத் தனிநபர் தீர்வும் கிடையைாது சீரழிவிற்கான ஒட்டு மொத்தக் கட்டமைபை்பையே தாக்க வேண்டும்.

அறிவுச் செல்வத்தின் காப்பாளர்களாக அறியப்படும் மையம் பல்கலைக் கழகங்களும் கூட மோசமடைந்து வரும் இந்தப் போக்கின் பிரிக்க முடியாத பகுதிகளாவர். ஹைதிராபாத் மையப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், டெல்லி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் இதனை நிரூபிக்கும். விமர்சன பூர்வமான சிந்னையும், மதிப்பீடுகளும் காலாவதியான கோட்பாடுகளாக முத்திரை குத்தப்படுகின்றன. சட்டபூர்வமான உரிமைகளை அடைவதைப் பற்றியும் அரசுக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளைப் பற்றியும் பேசுவது எல்லாமே கடுங்குற்றமாகவும் தேசவிராேதமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது “திறமைகளைக் கற்பது” மட்டுமே என்பதாக கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் சமூக நீதி என்பது வர்களின் எல்லை வரம்பிற்குள் வராததால் இதைப் பற்றிப் பேசுபவர்ளாகவோ, சிந்திப்பவர்களாகவாே எதிர்பார்க்கப்படவில்லை. அவர்கள் வெறுமனே கார்ப்பரேட் சக்திகளுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்

இப்பாேது உயர்கல்வி வலிமையான முறையில் பணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது சந்தைப் படுத்தலுக்கான சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இது உலகச் சந்தைகளுக்கு மட்டுமே பயன்படும். இது வேலைவாய்ப்பாேடு இணைக்கப்பட்டுள்ளதால், சமூகத்திற்குத் தேவையான கல்விப் பிரிவுகளும், கூட்டுணர்வுகளுக்குத் தேவையான கல்விப் பிரிவுகளும், அதாவது மானுடவியல், சமூக விஞ்ஞானம், தனிநிலை விஞ்ஞானம் ஆகியவை விரைவாகக் காணாமல் போய் வருகின்றன. அதைப் போன்றே அறிவுக்கும் மெய்யறிவுக்குமானதாக வெறுமனே திறமைகளைப் பெறுவதற்கான தீவிரமாக மாற்றாக முன் வைக்கப்படுகிறது.

உயர்கல்வி தனியார்மயமாதல், கார்ப்பாெரேட்மயமாதல் ஆகியவற்றால் வசதியான பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக ஆகியுள்ளது. ஏழைகள் அரசுப் பல்கலைக் கழகங்களிலும் நிறுவனங்களிலும் மட்டுமே நுழைய முடியும். பொதுமக்கள் சார் உயர்கல்வியை இல்லாதாெழிப்பது ஒடுக்கப்பட்டாேருக்கு உயர்கல்வியை மறுக்கின்ற விளைவையே ஏற்படுத்தும்.

இவ்வாறு சீரழிவது என்ற பிரச்சனையை பலப்படுத்துவதற்காக 2015-ல் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு திறமையை வளர்த்தல் பதில் சொல்லும் பொறுப்பேற்பு, உலக சந்தையின் தேவைக்கேற்ப மாணவர்களை வார்த்தெடுப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சமத்துவம், சமூக நீதி போன்ற அரசியலமைப்புச் சட்ட ரீதியான குறிக்காேள்கள், அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதமளிப்பது போன்றவை இந்தக் கொள்கையில் எந்த இடத்திலும் இடம் பெறாதது உண்மையில் துயரமானதாகும்.

இந்தப் பின்னணியில் 1954-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டதை நினைவு கொள்வது பொறுத்தமானதாகும், அவர் கூறியதாவது:

“தனிச்சிறப்புக் கூறுகளை கற்பித்தால் மட்டும் போதாது. இதன் மூலம் மனிதன் ஒரு வகைப்பட்ட பயனளிக்கக் கூடிய இயந்திரமாக ஆக முடியுமே தவிர ஒத்திசைவான மனிதச் சிறப்பியல்புகளை வளர்த்தெடுத்துக் கொள்ள முடியாது. மாணவர்கள் விழுமியங்களின் உயிராேட்டமான உணர்வைப் பற்றிய புரிதலை அடையப்பெற வேண்டியது இன்றியமையாததாகும். அவர்கள் அறநெறிப்படி சிறப்பான அழகியதான உணர்வாற்றலை அடையப் பெற்றாக வேண்டும். இல்லாவிடில் தனிச்சிறப்புத் திறமையும், அறிவும் உள்ள மனிதன் ஒத்திசைவாக வளர்ச்சியடைந்த நபராக ஆவதையும் விட நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நாயைப் போன்று மிகவும் நெருக்கமாக அதற்கு ஒத்திருப்பான்.”

உயர்கல்வி மக்கள் நலனுக்கானதாக மீண்டும் மாற்றப்படும் போது மட்டுமே இது போன்ற சூழ்நிலையை உருவாக்க முடியும். உயர்கல்வியைப் பயிலும் மாணவன் மனித விழுமியங்கள், சமூக வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றைப் பற்றிய உணர்வுகளைப் பெற்றவனாக இருக்க வேண்டும். மேலும் இது எத்தகைய பாகுபாடுமில்லாமல் எல்லாேருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சுயேச்சை யான முறையில் சுத்திகரிக்கப்பட்ட கல்வியமைப்பு சாத்தியமா என்பதே வினாவாகும்?

உலகத்திற்கே ஆணையைப் பிறப்பிக்கக் கூடிய கார்ப்பாெரேட் சக்திகளின் மேலாேங்கிய அதிகாரம் என்ற காட்சிப் புலத்தில் இது வேர்காெண்டுள்ளது. எனவே இதற்கான தீர்வு ஏகாதிபத்தியச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே அடங்கியுள்ளது. எல்லாவிதமான பாகுபாடுகள், சுரண்டல், ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற மனிதாயமிக்க அரசியல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதாக இதன் விளைவு இருக்கும். இந்த முற்பாேக்கான சூழல் கல்வி அமைப்பிலும் கூட முன்னேற்றத்தை அடைவதைச் சாத்தியமாக்கும். சமூக உணர்வு பெற்ற சக்திகள் ஒன்றுபட்டு இந்தக் குறிக்காேளை அடையப் பெறுவதை நோக்கி நகர்வார்கள் என நம்புவாேமாக.

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
♦மத்திய அரசே! மோடி அரசே!!
மருத்துவத்துறையில் திணிக்கப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்!

♦ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித்துறையை தனியார்மயமாக்கும், வணிகமயமாக்கும், கார்ப்பரேட்மயமாக்கும், புதிய காலனிய கல்விக் கொள்கையை எதிர்ப்பாேம்!

♦கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுவதை எதிர்ப்பாேம்! 

♦தகுதி-தரம் என்ற பெயரால் அனைத்து வடிகட்டும் தேர்வுகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை பறிப்பதே! ரத்து செய்ய போராடுவாேம்!!

♦மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்!

♦கல்விக்கடனை வசூலிப்பது என்ற பேரால் கந்துவட்டி பாணியில் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் குழுமங்களிடம் கடன் வசூலை ஒப்படைத்துள்ளதை முறியடிப்போம்!

♦கல்வி நிலையங்களில் அன்றாடம் நடைபெறும் ஊழல் முறைகேடுகள், லஞ்சலாவன்யங்கள், கொலை மற்றும் தற்காெலைகளுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடு! கல்வி நிலைய அங்கீகாரத்தை ரத்து செய்! பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், பெற்றாேர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கு!

♦ஆரம்பக் கல்வி நிலையங்கள் முதல் ஆராய்ச்சி கல்வி நிலையங்கள் வரை தொடரும் கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களை ஆதரிப்பாேம்! மாணவர் விராேத, மக்கள் விராேத போக்குகளை முறியடிப்பாேம்!

♦பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற போராடுவாேம்! வேலையில்லா பட்டதாரிகளை வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி வரும் அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை எதிர்த்துப் போராடுவாேம்!

♦ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக, கட்டாயமாக, தாய்மாெழியில் கிடைக்கப் போராடுவாேம்! இந்தி சமஸ்கிருதம் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்ப்பாேம்!

♦ தகுதி திறமையின் பெயரால் விஞ்ஞானத்திற்கு எதிரான பகுத்தறிவுக்கு ஒவ்வாத காவிமய கார்ப்பரேட்மய புதிய காலனிய பிற்பாேக்குக் கல்வியை எதிர்ப்பாேம்!

♦மதச்சார்பற்ற, விஞ்ஞானபூர்வமான தேசிய, ஜனநாயக கல்விக்குப் போராடுவாேம்!

        ♦♦♦♦♦♦♦♦♦♦

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s